Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
டீச்சர் வேடிக்கையாக மாணவர்களுக்கு கொடுக்கும் 5 சூப்பர் தண்டனைகள் இதுதான்...
ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொடுக்கும் சில வேடிக்கையான தண்டனைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் உங்களிடம் பட்டியலிட்டுக் காட்டுகிறோம்
பள்ளிப் பருவம் என்பது எல்லோருக்குமே நினைத்து நினைத்து மகிழக்கூடிய பருவமாகவே இருந்திருக்கும். நம்மில் நிறைய பேர் அதெல்லாம் ஒரு கனாக்காலம்ம்பா... அப்படியே இருந்திருக்கலாம் என்று சொல்வதுண்டு. ஆம். பள்ளிக் காலத்து நட்பு கள்ளம் கபடமில்லாதது. நட்பு, முதன் முதலில் அரும்பும் காதல், நண்பர்களுடனான வெட்டிச் சண்டை, டீச்சர் கொடுக்கும் சின்ன சின்ன தண்டனை ஆகியவை நம்மால் எந்த காலத்திலும் மறக்க முடியாதவை.

அதேபோல பள்ளிப் பருவத்தில் நம்மை வெகுவாக ஈர்க்கும் மற்றொரு விஷயம் எது என்றால் அது நம்முடைய ஆசிரியர்கள் தான். நமக்குப் பிடித்த ஆசிரியரை மட்டுமல்ல, பிடிக்காத ஆசிரியரையும் நம் மனம் மறக்க விரும்பாது. அதிலும் அவர்கள் கொடுக்கும் சின்ன சின்ன தண்டனைகளை நாம் ரசித்தே அனுபவித்திருப்போம். அப்படி பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்கள் கொடுக்கும் சில வேடிக்கையான தண்டனைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

கைகட்டி வாய் மேல விரல் வை
பேசிக்கிட்டே இருப்பியா கிளாஸ்ல?... கைய கட்டி வாய் மேல விரலை வை. இந்த வகுப்பு முடியற வரைக்கும் கைய எடுக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் சொல்வதுண்டு. ஏறக்குறைய எல்லாருமே மாணவப் பருவத்தில் அனுபவித்திருக்கும் தண்டனை தான் இது. இதில் நம்மில் சிலர் ஜகஜால கில்லாடிகளாக இருப்பார்கள். வாய்மேல் விரல் வைத்துக் கொண்டே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

வெளியே நில்
வகுப்பறையில் ஒழுங்காக இல்லாமல், ஆசிரியர் சொல்வதைக் கேட்காமல் அல்லது பாடம் நடத்தும் போது தொந்தரவு விளைவித்தாலும் உடனடியாக ஆசிரியர் சொல்வது முதலில் கிளாஸ் ரூமிலிருந்து வெளியே போ என்பது தான். எல்லா ஆசிரியர்களாலும் கொடுக்கப்படும் தண்டனை தான் இது.

எனக்கு நேரா உட்காரு
வகுப்பறைகளில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது பாடம் நடத்துவதை கவனிக்காமல் இருந்தாலோ அல்லது ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தாலோ அவர்கள் அநத மாணவருக்கு கொடுக்கும் தண்டனை இதுவாகத் தான் இருக்கும். இங்கே வா! இனிமே என்னோட எல்லா கிளாஸ்லயும் என் கண்ல படற மாதிரி தான் உட்காரணும்.

இடத்தை மாற்று
ரெண்டு நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து கொண்டு சேட்டை செய்து கொண்டு இருக்கின்ற பொழுது, ஆசிரியர் சொல்லும் விஷயம் என்னவென்றால், முதலில் உங்களுடைய இடத்தை மாற்றி உட்காருங்கள். ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து உட்காரக் கூடாது என்று சிறு பிள்ளைத்தனமாக தண்டனை கொடுப்பார்கள்.

இம்போசிசன்
ரொம்ப கறாரான டீச்சராக இருந்தால், அவர்களுடைய தண்டனை மற்றவர்களை விடவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எடுத்தவுடனே அவர்கள் சொல்வது இந்த பாடத்தை 100 முறை இம்போசிஷன் எழுதிக் கொண்டு வாருங்கள். இத்தனை முறை எழுதவில்ல என்றால் அடுத்து இவ்வளவு முறை கொண்டு வர வேண்டும் என்று வேடிக்கையான தண்டனையைக் கொடுப்பார்கள்.



Click it and Unblock the Notifications