Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...!
தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் சில செயல்களை செய்ய வேண்டும். அது பூஜையாகவும் இருக்கலாம், நீங்கள் வீட்டிற்கு கொண்டுவரும் சில பொருட்களாகவும் இருக்கலாம்
இந்தியாவே கொண்டாட தயாராக இருக்கும் பண்டிகையான தீபாவளி நெருங்கிவிட்டது. தீபாவளி எப்பொழுதும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டு வரும் பண்டிகையாகும். இவற்றுடன் சேர்த்து இது உங்கள் வீட்டுக்கு செல்வத்தையும் கொண்டு வரும்.

தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் சில செயல்களை செய்ய வேண்டும். அது பூஜையாகவும் இருக்கலாம், நீங்கள் வீட்டிற்கு கொண்டுவரும் சில பொருட்களாகவும் இருக்கலாம். இந்த பதிவில் தீபாவளிக்கு உங்கள் வீட்டுக்கு செல்வத்தை அழைத்து வரும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

லக்ஷ்மி தேவி
லட்சுமி தேவிதான் செல்வத்தின் முதன்மை தெய்வமாக கருதப்படுகிறார். லட்சுமியை சரியான முறையில் வணங்கினால், அவர் அதிக செல்வத்தை வழங்குவார் என்று மக்கள் நம்புகிறார்கள். தாந்த்ரீக சாஸ்திரத்தின்படி, நிதி தொடர்பான தோஷங்களை ஒழிக்க உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய சில பொருட்கள் உள்ளன.

லட்சுமியை ஈர்ப்பது எப்படி?
தந்திர சாஷ்டிரங்களின்படி, நீங்கள் இந்த விஷயங்களை உங்கள் வீட்டில் வைத்திருந்தால், நீங்கள் ஒருபோதும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் லட்சுமியை சரியாக வணங்குவது மட்டுமின்றி இந்த பொருட்களில் ஒருவரை வைத்திருப்பது கூட செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும்.

ஸ்ரீ யந்திரம்
ஸ்ரீ யந்திரத்தில் லட்சுமி தேவியுடன் 33 கடவுள்களின் படங்களும் உள்ளது. ரியான பூஜை சடங்குகளுக்குப் பிறகு அவற்றை வீட்டில் வைத்திருப்பது உங்கள் வீட்டிற்கு ஏராளமான நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.

மோதி சங்கு
இந்த சங்கை அனைத்து சடங்குகளுடன் வணங்கிய பிறகு உங்கள் வீட்டில் வைத்திருந்தால், அது உங்கள் வீடு அல்லது பணியிடத்தில் நேர்மறை சக்தியை ஈர்க்கிறது. இதை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் நீங்கள் ஒருபோதும் பணம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டீர்கள்.

லட்சுமி கவுரி
நீங்கள் பணத்தை வைத்திருக்கும் இடத்தில் லட்சுமி கவுரியை வைத்திருப்பது லட்சுமி தேவி உங்கள் வீட்டிலேயே இருப்பதை உறுதிசெய்யும். வாஸ்து சாஸ்திரத்தின் படி ‘லட்சுமி கவுரி' சரியான நேரத்தில் அங்கு வைக்கப்பட வேண்டும். சரியான முடிவுகளுக்கு நேரம் முக்கியமானது. வெள்ளிக்கிழமை இதனை மஞ்சள் துணியில் சுற்றி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும்.

கோமதி சக்கரம்
இந்தியாவின் குஜராத்தின் ஒரு பகுதியான துவாரகாவில் உள்ள கோமதி ஆற்றில் கோமதி சக்ரா காணப்படுகிறது. கிருஷ்ணரின் தெய்வீக ஆயுதமான சுதர்சன சக்ரத்தை ஒத்திருப்பதால் கோமதி சக்கரம் சுதர்சன சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. 11 கோமதி சக்கரத்தை மஞ்சள் துணியில் சுற்றி உங்கள் பணப்பெட்டியில் தீபாவளி அன்று வைத்தால் உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டமே ஏற்படாது.

எருக்கை வேர்கள்
வெள்ளிக்கிழமையில் நல்ல நேரத்தில் வெள்ளை எருக்கை செடியின் வேர்களை சரியான சடங்குகளுடன் வணங்கி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் அதனை வைக்கவும். இது அதிக பலனளிக்கக்கூடிய ஒன்றாகும்.

கமல மாலை
கமல மாலை தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பூவில் லட்சுமி தேவி அமர்ந்திருப்பதால் இந்த மலர் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. லக்ஷ்மியை வழிபடும் போது இந்த மாலையை கையில் வைத்துக்கொண்டு மந்திரம் கூறுவது மிகவும் பயனுள்ளதாகும். தீபாவளி பூஜையின் போது இவ்வாறு செய்வது உங்கள் வாழ்க்கையில் செல்வத்தின் இருப்பை உறுதிசெய்யும்.

தட்சிணவர்த்தி சங்கு
தட்சிநவர்த்தி சங்கு என்பது சங்குகளில் மிகவும் அரிதான ஒன்றாகும். இது லட்சுமி தேவியுடன் தொடர்புடையது, மேலும் பொதுவாக விஷ்ணு மற்றும் லட்சுமியின் ஒவ்வொரு புகைப்படத்திலும் காணப்படுகிறது, அவர்கள் அதை தங்கள் கைகளில் ஒன்றைப் பிடித்துக் கொள்கிறார்கள். தீபாவளியன்று இந்த சங்கில் பால் மற்றும் புனித நீர் சேர்த்து அதனை உங்கள் வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளித்து விடுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒருபோதும் எந்தவொரு நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.



Click it and Unblock the Notifications