இந்த ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்...உங்க ராசியும் இதுல இருக்கா?

பயமறியாதவர்கள் தங்களின் துணிச்சலை தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் பரப்புகிறார்கள். இவர்கள் எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். இவர்களிடம் அசாத்தியமான தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.

ஒருவரை பயமே இல்லாதவர் என்று கூறினால் அவருக்கு பயமே இல்லை என்று அர்த்தம்மல்ல. பயம் இருந்தாலும் தான் நினைத்த காரியத்தை சாதிக்கும் ஆற்றல் கொண்டவளே பயமறியாதவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நினைத்ததை சாதிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. பயம் உங்களை வெற்றிக்கு தகுதியற்றவராக உங்களையே உணரச் செய்யும்.

Fearless Zodiac Signs

பயமறியாதவர்கள் தங்களின் துணிச்சலை தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் பரப்புகிறார்கள். இவர்கள் எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். இவர்களிடம் அசாத்தியமான தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். இந்த தைரியம் அவர்களுக்கு அவர்கள் பிறந்த ராசியின் மூலம் வரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே தைரியசாலிகளாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எப்பது தங்களுக்கு வசதியான சூழ்நிலையை விட்டு வெளியே வந்து சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். ஒவ்வொரு தடைகளையும் எதிர்கொண்டு அவர்கள் தாண்டி வரும்போது அவர்கள் மேலும் தைரியசாலிகளாக மாறுவார்கள். இவர்கள் ஆபத்தை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள், அதன் முடிவுகள் இவர்கள் எதிர்பார்த்தது போல அமையாவிட்டாலும் அதனை எண்ணி இவர்கள் வருத்தமாட்டார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை எண்ணி அஞ்சினால் அது மற்றவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயமாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் என்பதை அவர்களின் ராசியின் சின்னமே கூறும். தாங்கள் யார் என்பதை அறிவது இவர்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியமாகும், தைரியம் இவர்களின் பிறவி குணமாகும். இவர்கள் அனைத்திலும் இருக்கும் வாய்ப்பை பார்ப்பார்கள், மேலும் அவை அவர்களை பயமுறுத்தினாலும், தங்கள் இலக்குகளை அடைய அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களால் முடியாது என்று கூறுபவர்களை தங்களின் வெற்றி மூலம் மௌனமாக்குவார்கள். அதனை எப்படி சாதிக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

தனுசு

தனுசு

இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேர்ந்தெடுக்கும் வலி தைரியமாக இருப்பதுதான். இந்த உள்கைள் பல வேடிக்கைகளும், அதிசயங்களும் உள்ளது அதனை தன்னால் முடிந்தவரை அனுபவித்து விடவேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். சில நேரங்களில் ஆபத்தான, மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பார்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவார்கள். இவர்கள் செல்லும் வழியில் பயம் வந்தால் அதனை தாண்டி செல்வார்களே தவிர அதனை நினைத்து அஞ்சமாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

இவர்களுக்கு ஆபத்து எதுவுமில்லை என்று தெரியும், எனவே பயத்திலிருந்து ஓடுவதற்குப் பதிலாக, அவர்கள் அதை தலைகீழாக எதிர்கொள்கிறார்கள்.தங்களின் பயம் என்ன என்பதை உணர்ந்து அதனை உடைத்து அதற்குமேல் அது அவர்களை அச்சுறுத்தாத வண்ணம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். பயத்தை சமாளிக்க கற்றுக்கொண்டுவிட்டால் அதற்கு மேல் அது நம்மை அச்சுறுத்தாது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு வலிமை மிக அதிகம் எனவே பயம் இவர்களை ஒருபோதும் பாதிக்காது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் தங்களுக்கு பயம் உள்ளது என்பதை ஒருபோதும் மறுக்கமாட்டார்கள், ஆனால் அவர்கள் அவற்றை தங்கள் வாழ்க்கையிலிருந்து விரட்ட கடுமையாக முயற்சிப்பார்கள். மற்றவர்களின் ஆதரவு இருந்தால் இவர்கள் பயத்தை எளிதில் விரட்டிவிடுவார்கள். வழிகாட்டுதல்கள் இருந்தாலும் இவர்களின் தன்னம்பிக்கை இவர்களை பயத்தை எதிர்கொள்ள உதவும். பயத்தை எதிர்கொள்ளும் போது இவர்கள் சாதிப்பது இவர்கள் வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும். இவர்கள் பயத்துடன் வாழ்வார்கள் ஆனால் அதனை எதிர்த்து முன்னேறுவார்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தைரியமாக இருப்பதற்கு காரணம் இவர்கள் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள். இவர்கள் தங்கள் வாழ்வை மற்றவர்களுக்காக வாழ்வதில்லை. தாங்கள் செய்ய விரும்பாத ஒரு காரியத்தை இவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்காக செய்யமாட்டார்கள். இவர்கள் தைரியமான, பெரிய காரியங்களை செய்ய ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். இவர்கள் தோல்வியுற்றாலோ அல்லது அதனை சரியாக செய்யாமல் விட்டாலோ அதனைப்பற்றி கவலைப்படமாட்டார்கள், அடுத்தமுறை சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, October 15, 2019, 17:20 [IST]
Desktop Bottom Promotion