Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்தியாவின் பெருமை என்று நீங்கள் நினைக்கும் இந்த விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகள்தானாம் தெரியுமா?
நாம் இந்தியாவைப் பற்றி நம்பி கொண்டிருக்கும் பல விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகள்தான். இந்த கட்டுக்கதைகளை மெத்த படித்தவர்கள் கூட நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தியா என்பது நீண்ட வரலாற்றையும், தொன்மையையும் கொண்டது. இந்தியாவில் ஆச்சரியங்களுக்கும், அதிசயங்களுக்கும் எப்படி பஞ்சம் இல்லையோ அதேபோல அதில் இருக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமே இல்லை. உலகிலேயே பல மூடநம்பிக்கைகள் இருக்கும் நாடு என்ற பெருமை நமக்கே சேரும். மூடநம்பிக்கைகள் என்றால் கடவுள் தொடர்பானது மட்டுமல்ல.

நாம் இந்தியாவைப் பற்றி நம்பி கொண்டிருக்கும் பல விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகள்தான். இந்த கட்டுக்கதைகளை மெத்த படித்தவர்கள் கூட நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கட்டுக்கதைகள் நமக்கு போலியான ஒரு பிம்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. இந்த பதிவில் இந்தியாவைப் பற்றி கூறப்படும் பிரபலமான கட்டுக்கதைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு
உலகில் கிரிக்கெட் விளையாட்டை அதிகம் விரும்பும் மக்கள் இருக்கும் நாடு இந்தியா ஆகும். இந்தியர் அனைவரும் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் இருந்தாலும், இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கிதான் என்று நம் அனைவரையும் நம்பவைத்துள்ளனர். ஆனால் அது உண்மையல்ல கபடிதான் தேசிய விளையாட்டு என்று கூறுவார்கள்.ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்று எதுவுமே இல்லை.

இந்திதான் இந்தியாவின் அலுவலக
இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் அதிகமாக இருப்பதால், இந்தி அதன் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது என்று நீங்கள் நம்பினால், உங்களின் நம்பிக்கை தவறான ஒன்றாகும். உண்மையில் இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா தேவனாகிரி எழுத்து மற்றும் ஆங்கிலம் உட்பட மொத்தம் 24 மொழிகளை உத்தியோகபூர்வ மொழிகளைக் கொண்டுள்ளது. அவை அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி , நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகும்.

காந்தி ஒரு பிரிட்டிஷ் பெண்ணுடன் நடனமாடினார்
இந்த புகைப்படம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த புகைப்படத்தில் மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் பெண்மணியுடன் நடனமாடுவது போல இருக்கும். இந்த புகைப்படம் இன்றளவும் பலரால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் உண்மையானதல்ல, ஒரு விருந்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது, அங்கு ஒரு ஆஸ்திரேலிய நடிகர் தனது தோற்றத்தை காந்தி போல மாற்றிக்கொண்டார். அவர்தான் அந்த பெண்மணியுடன் நடனமாடினார்.

உலகின் பழமையான நகரம் வாரணாசி
நம் அரசியல்வாதிகள் இதனை அடிக்கடி உபயோகிப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பது பலரும் தெரியாத ஒன்றாகும். வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி 30 க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளன, அவை வாரணாசிக்கு முன்னரே நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றின் காலம் கிமு 1300-க்கு முற்பட்டதாகும்.

ஃபிபா 1950 ல் இருந்து இந்தியா தகுதி நீக்கம் செய்யப்பட்டது
1950 ஆம் ஆண்டில் இந்தியா ஃபிபா விளையாட்டில் தேர்வு செய்யப்பட்டது, அதன்பின் இந்தியா மற்றும் மேலும் நான்கு அணிகள் பங்கேற்காமல் பின்வாங்கியது என்று கூறப்படுகிறது. இந்திய கால்பந்து அமைப்பான AIFF இந்திய வீரர்கள் வெறும் காலுடன் கால்பந்து விளையாட அனுமதி கோரியதாகவும், அதற்கு FIFA மறுத்துவிட்டதால் இந்தியா வெளியேறியதாக குற்றம் சாட்டியது. உண்மையை சொல்வதென்றால் பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்பது AIFF-க்கு விலைமதிப்பில்லாத ஒன்றாகும். ஆனால் இத்தாலி போன்ற அணிகளை வெல்லும் அளவிற்கு நமது அணிக்கு பலம் இல்லாததால் அவர்களின் தவறை மறைக்க இப்படி ஒரு கட்டுக்கதையை உருவாக்கினர்.

இந்திய ரயில்வே
இந்திய ரயில்வேதான் உலகில் அதிகளவு ஊழியர்களை கொண்ட மிகப்பெரிய அமைப்பு என்று நாம் அனைவரும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நமது நம்பிக்கைக்கு எதிரானதாக உள்ளது. ஏனெனில் நம்முடைய ரயில்வே துறை நான்காவது பெரிய அமைப்பாக உள்ளது. நம்முடைய ரயில்வே அமைப்பு பெரியது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் உலகிலேயே மிகவும் பெரியது என்பது நமக்கு ஊக்கமளிக்க உருவாக்கப்பட்ட கட்டுக்கதை ஆகும்.

மில்கா சிங் ஒலிம்பிக்கில் திரும்பி பார்த்தார்
1960 ஒலிம்பிக்கின் போது 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை முதல் இடத்தில் முடிப்பதற்கு முன்பு, பறக்கும் சீக்கியரான மில்கா சிங்கின் பிரபலமான ‘திரும்பிப் பார்க்கும் தருணம்' நடந்தது என்று பல ஆண்டுகளாக இந்தியர்கள் நம்பினர். ஆனால் உண்மையில் நடந்தது என்னவெனில் ஐந்தாவது வந்து கொண்டு இருந்த மில்கா சிங் போட்டியின் முடிவில் நான்காவது இடத்திற்கு வந்தார். அவர் முதல் இடத்திற்கு முன்னேறவில்லை என்பதே உண்மை.

1947 முதல் இந்தியா மதச்சார்பற்ற நாடாக உள்ளது
இந்திய அரசியலமைப்பின் அசல் வரைவில் ‘மதச்சார்பற்ற' என்ற சொல்லே இல்லை. 1976 இல் இது திருத்தப்பட்ட பின்னரே, அரசியலமைப்பின் முன்னுரை மற்றும் பிற பிரிவுகளில் ‘மதச்சார்பற்ற' என்ற சொல் சேர்க்கப்பட்டது.



Click it and Unblock the Notifications