Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 5 ராசிக்காரங்ககிட்ட எந்த வம்பும் வச்சிக்காதீங்க...ஏனா இவங்க உங்க வாழ்க்கையே அழிச்சிடுவாங்களாம்!
விருச்சிக ராசிக்காரர்களை ஒருபோதும் கோபப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால் அதைச் செயல்படுத்த பழிவாங்கும் திட்டத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.
தவறு செய்த ஒரு நபர் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயற்கையானது. அதன்பிறகு, உங்கள் கோபத்தையும் விரக்தியையும் அந்த நபரை நோக்கி செலுத்துகிறீர்கள். இருப்பினும், மற்றவர்கள் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களை யாரும் ஏதும் சொல்லக்கூடாது என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களைப் பார்த்து பயப்படுவார்கள். மேலும், சிலர் தங்களை குற்றம் சொல்லும் நபர்களை பழிவாங்க முயற்சிப்பார்கள். தொடர்ந்து அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த முயல்வார்கள்.

இதுபோன்றவர்கள் மக்களை பயத்தில் நடுங்கச் செய்யலாம். இந்த நபர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு ஜோதிடம் உதவும். எனவே, எந்த வகையிலும் நீங்கள் வெறுப்பு கொள்ளக் கூடாத ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசி நேயர்கள் நெருப்பு போல தீயாக இருப்பார்கள் மற்றும் அதிக கோபம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நீங்கள் ஒரு மேஷ ராசி நேயரை நோக்கி கத்தினால் அல்லது அவர்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்தால், அவர்கள் அதற்காக பின்வாங்க மாட்டார்கள். உங்களுக்கு எதிராக செயல்பட முயற்சி செய்வார்கள். அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். உங்கள் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை முற்றிலும் அழிக்கும் ஒரு சூழ்ச்சி வலைகளை பின்னுவார்கள். கோபமாக இருக்கும் போது மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்கள் கவலைப்படாதது போல் பாசாங்கு செய்வார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் கவலையடைவார்கள். ஒருவர் செய்த தவறுகளுக்காக அவர்களைக் கத்திய பிறகு நீங்கள் திருப்தி அடைவீர்கள். ஆனால், மிதுன ராசிக்காரர்களால் அப்படி இருக்க முடியாது. அவர்களால், சிறு விமர்சனம் அல்லது கருத்துகளைக் கூட கையாள முடியாது. அவர்கள் எல்லாவற்றையும் எதிர்மறையாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆதலால், இந்த ராசிக்காரர்கள் உங்களை பழிவாங்கவும் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தவும் முயற்சிப்பார்கள்.

சிம்மம்
எல்லோருக்கும் முன்பாக சிம்ம ராசிக்காரரை நீங்கள் சங்கடப்படுத்தினால், நீங்கள் அவ்வளவுதான் முடிந்துவிட்டீர்கள். சிம்ம ராசி நேயர்களிடம் மிகவும் பொக்கிஷமாக இருக்கும் ஒரு விஷயம் அவர்களின் நற்பெயர் மற்றும் புகழ். அவர்கள் பிரபலமாக இருப்பதை விரும்புவதால், எல்லோருக்கும் முன்னால் அவர்களை திட்டுவதோ அல்லது கத்துவதையோ அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், அவர்கள் உடனடியாக உங்களை அழிக்க முயற்சி செய்வார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை ஒருபோதும் கோபப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால் அதைச் செயல்படுத்த பழிவாங்கும் திட்டத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். விருச்சிகம் முதலில் மிகவும் இரகசியமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் விமர்சனங்களை அல்லது கடுமையான கருத்துக்களை எதிர்கொண்டால் அவர்கள் அச்சுறுத்தலாக மாறிவிடுவார்கள். எனவே, சண்டை அல்லது பிரச்சனை என்று வரும்போது, விருச்சிக ராசிக்காரர்களிடம் இருந்து பின்வாங்கி விடுங்கள்.

மகரம்
மகர ராசி நேயர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளுவார்கள். ஆனால், அதற்காக மற்ற நபர்களை பழிவாங்காமல் இருக்க மாட்டார்கள். அவர்களின் எதிரி வலியால் துடிக்காத வரை அவர்கள் ஓய்வெடுக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர்கள் தவறு செய்தாலும் அதிகமாக கோபப்படக்கூடியவர்கள். நீங்கள் மகர ராசிக்காரர்களுக்கு எதிராக வெறுப்பை வைத்திருக்க முடியாது. அவர்கள் உங்களை அழித்துவிடுவார்கள்.

இந்த ராசிக்காரர்கள்
ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தவறு செய்யும் போது உண்மையாக மன்னிப்பு கேட்கிறார்கள். மேலே உள்ள ராசிக்காரர்களை போல அவர்கள் கோபத்தை வீசுவதில்லை மற்றும் மிகவும் சாந்தமாகவும் அமைதியாகவும் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications