Latest Updates
-
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்..
சூரிய அஸ்தமனத்திற்கு பின் இத செய்யாதீங்க... இல்லன்னா பண பிரச்சனைய சந்திப்பீங்க..
ஜோதிடத்தின் படி, சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யும் சில செயல்கள் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கும். கீழே மாலை வேளையில் செய்யக்கூடாத அந்த செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டுச் சூழல் மற்றும் வீட்டில் இருப்போரின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒருசில செயல்களை செய்யக்கூடாது. ஏனெனில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யும் சில விஷயங்கள் எதிர்மறை ஆற்றலைத் தருவதாக நம்பப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், பகல் மற்றும் இரவின் சந்திப்பு நேரமாக கருதப்படுகிறது. அதனால் தான் இந்த காலம் வேதங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த மாலை பொழுதில், குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யும் சில விஷயங்கள் அசுபமாக கருதப்படுகிறது.

ஜோதிடத்தின் படி, சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யும் சில செயல்கள் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கும். கீழே மாலை வேளையில் செய்யக்கூடாத அந்த செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அந்த செயல்களை இதுவரை செய்து வந்தால், இனிமேல் அதை செய்யாதீர்கள்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளிப்பது
சாஸ்திரத்தின் படி, சூரிய அஸ்தமனத்திற்கு பின் யாரும் குளிக்கக்கூடாது. ஏனெனில் மாலை வேளையில் தான் நம் வீட்டிற்கு லட்சுமி தேவி வருகை தருவார். அப்படி வருகை தரும் போது குளித்துக் கொண்டிருந்தால், அது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்குவதாக நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால், இரவு நேரத்தில் குளித்தால், அது உடலில் குளிர்ச்சியை அதிகரித்து, உடல்நல பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இரவு நேரத்தில் துணி துவைக்கக்கூடாது
ஜோதிட சாஸ்திரத்தின் படி, இரவு நேரத்தில் துணி துவைப்பது நல்லதல்ல. இரவு நேரத்தில் துணியைத் துவைத்து காயப் போடும் போது, இரவின் எதிர்மறை ஆற்றல் துவைத்த ஆடைகளுக்குள் ஊடுருவுவதாக நம்பப்படுகிறது. மேலும் அந்த ஆடைகளை அணியும் போது, அந்த ஆடையை அணிந்தவர் எதிர்மறை ஆற்றலால் சூழப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மாலை வேளையில் உங்களின் ஆடைகளை உலரவில்லை என்றால், அந்த ஆடைகளை வீட்டினுள் உலர்த்துங்கள்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஷேவிங் செய்யக்கூடாது
ஜோதிடம் மற்றும் மத நம்பிக்கைகளின் படி, சூரிய அஸ்தமனத்திற்கு பின் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது போன்ற செயல்கள் அபசகுணமாக கருதப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு செய்தால், அந்நபரின் மீது எதிர்மறை ஆற்றல் ஆதிக்கம் செலுத்துவதோடு, லட்சுமி தேவியின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.

உணவுகளை திறந்து வைக்கக்கூடாது
நம்பிக்கைகளின் படி, சூரிய அஸ்தமனத்தின் போது சாப்பிடக்கூடாது. மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் உண்ணும் உணவுகளானது திறந்த நிலையில் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால், அந்த உணவில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

தூங்கக்கூடாது
ஒவ்வொரு செயலை செய்வதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. அதை ஒவ்வொரு மனிதனும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் இதுவரை மாலை வேளையில் தூங்கினால், இனிமேல் அதை செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால், அது அந்நபரின் ஆயுளை குறைப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாலை வேளையில் தான் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவார். அப்போது கதவை மூடி தூங்கிக் கொண்டிருந்தால், அது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கும்.

வீட்டை பெருக்கக்கூடாது
சாஸ்திரங்களின் படி, சூரிய அஸ்தமனம் மற்றும் மாலை வேளையில் வீட்டைப் பெருக்கக்கூடாது. வீட்டிற்கு லட்சுமி தேவி வருகை தரும் நேரத்தில் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தால், லட்சுமி தேவி வீட்டிற்கு வருவதை நிறுத்திவிடுவாள் மற்றும் அந்த வீட்டில் பணப்பிரச்சனையையும் சந்திக்க வைப்பார்.

வாசற்படியில் உட்காரக்கூடாது
சாஸ்திரங்களின் படி, மாலை வேளையில் எப்போதும் வாசற்படியில் அமர்ந்திருக்கக்கூடாது. அப்படி அமர்ந்திருப்பது கெட்டதாக கருதப்படுகிறது. சூரிய அஸ்தமனத்தின் போது, லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் சமயத்தில் வாசற்படியில் அமர்ந்திருந்தால், லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்குள் வரமாட்டாராம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











