Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா? அப்ப இந்த எளிய தாந்திரீக பரிகாரங்களை செஞ்சு பாருங்க...
கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு ஒருசில தாந்திரீக பரிகாரங்களை உங்கள் வீட்டில் செய்யுங்கள்.
நல்ல சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கையை வாழவே நாம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம். ஆனால் அப்படி கஷ்டப்பட்டு உழைத்தாலும், சிலரது குடும்ப நிலை மேம்படுவதில்லை. இதற்கு காரணம் வீட்டில் உள்ள வாஸ்து தோஷமாக இருக்கலாம். அல்லும் பகலும் அயராமல் உழைத்தும், உங்களின் வீட்டில் பணப் பிரச்சனை நீங்கவில்லையா? கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு ஒருசில தாந்திரீக பரிகாரங்களை உங்கள் வீட்டில் செய்யுங்கள்.

கீழே ஒருவரின் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனையைத் தீர்க்க மற்றும் விரைவில் பணக்காரராக செய்ய வேண்டிய சில பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தாந்திரீக பரிகாரங்களை செய்தால், நிதி நிலையில் சீக்கிரம் முன்னேற்றமடையும். இப்போது அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.

பரிகாரம் #1
திங்கட்கிழமை சந்திரன் உதயமான பின் இரவு நீங்கள் படுக்கும் படுக்கையின் நான்கு மூலையிலும் வெள்ளி ஆணிகளை வையுங்கள். வேண்டுமானால், சிறிய வெள்ளி பொருட்களையும் வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து போவதோடு, பணப் பிரச்சனையும் குறைய ஆரம்பிக்கும்.

பரிகாரம் #2
புதன்கிழமை அன்று 7 சோழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சோழிகளானது பூஜைப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் எளிதில் கிடைக்கும். பின் ஒரு பச்சை நிறத் துணியில் அந்த சோழிகளை வைத்து, அத்துடன் ஒரு கைப்பிடி பாசிப்பயறை வைத்து கட்டி, அதை வீட்டின் பூஜை அறையில் உள்ள நிலப்படியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, வீட்டில் செல்வம் பெருகும். ஆனால் இதை யாரிடமும் சொல்லக்கூடாது. இல்லாவிட்டால் எந்த பலனும் கிடைக்காது.

பரிகாரம் #3
ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு தூங்கும் போது ஒரு டம்ளரில் பாலை நிரப்பி, தலைக்கு அருகில் வைத்து தூங்க வேண்டும். அப்படி வைக்கும் பாலானது தூக்கத்தில் சிந்தக்கூடாது. மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த பாலை ஒரு சீமை கருவேல மரத்தில் ஊற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தால், வீட்டின் மீதுள்ள கண் திருஷ்டி நீங்கும். உங்கள் வேலையில் எதிர்மறை ஆற்றல்களால் ஏற்பட்ட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். முக்கியமாக பணப்பிரச்சனை நீங்கும்.

பரிகாரம் #4
திங்கட்கிழமை காலை தூங்கி எழுந்ததும் குளிக்க வேண்டும். பின் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும் செய்து வந்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும். மேலும் சிவனின் அருளால் மனதில் உள்ள ஆசைகளும் நிறைவேறும்.

பரிகாரம் #5
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிவதோடு, மஞ்சள் துணி, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் கிழங்கு போன்ற மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் செய்து வந்தால், வீட்டில் பண பிரச்சனை இருக்காது மற்றும் செல்வம் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications