For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விஷயங்களை வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யாதீங்க.. இல்லன்னா வீட்டில் பிரச்சனை அதிகரிக்கும்..

ஜோதிட சாஸ்திரத்தில், வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டில் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

|

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது. அதில் வெள்ளிக்கிழமை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுவதோடு, இந்நாள் லட்சுமி தேவிக்குரிய நாளாக கருதப்படுகிறது. செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமைகளில் வணங்குவதன் மூலம் செல்வம் பெருகும். லட்சுமி தேவி கோபப்பட்டால், வீட்டில் பணப் பிரச்சனைகள் ஏற்பட தொடங்கி, மகிழ்ச்சி குறைந்து, வறுமை வர ஆரம்பிக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில், வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டில் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இப்போது வெள்ளிக்கிழமைகளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, என்ன வாங்க வேண்டும், என்ன வாங்கக்கூடாது என்பதைப் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!

வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!

புதிய ஆடைகள்

நாம் அனைவருமே புதிய ஆடைகளை வாங்க விரும்புவோம். நீங்கள் புதிய ஆடைகளை வாங்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், வெள்ளிக்கிழமைகளில் சென்று வாங்குங்கள். லட்சுமி தேவிக்கு புதிய ஆடைகளை அணிவது பிடிக்கும்.

வாகனம்

வாகனம்

சுக்கிர தோஷம் அல்லது சுக்கிரனால் பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் சுக்கிரனை மகிழ்விக்க வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை அல்லது சில்வர் நிற வாகனங்களை வாங்குவது நல்லது.

மேக்கப், அலங்கார பொருட்கள்

மேக்கப், அலங்கார பொருட்கள்

வெள்ளிக்கிழமைகளில் கலை, இசை, கேட்ஜெட்டுகள், அலங்கார பொருட்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. ஏனெனில் இந்த பொருட்கள் அனைத்துமே லட்சுமி தேவியை மகிழ்விப்பதாக நம்பப்படுகிறது.

சொத்து தொடர்பான வேலை

சொத்து தொடர்பான வேலை

வெள்ளிக்கிழமைகளில் சொத்து தொடர்பான வேலைகளை செய்வதால் அதிக செலவு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்நாளில் சொத்து வாங்குவது நல்லதல்ல. அதோடு சமையலறை பொருட்கள் மற்றும் பூஜை சாமான்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

பண பரிவர்த்தனை செய்யாதீர்

பண பரிவர்த்தனை செய்யாதீர்

வெள்ளிக்கிழமை நாட்களில் எந்த ஒரு பண பரிவர்த்தனைகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வதால் லட்சுமி தேவியின் கோபம் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பண குறைபாடு ஏற்பட்டு, பல பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சர்க்கரையை கொடுக்காதீர்

சர்க்கரையை கொடுக்காதீர்

வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் சர்க்கரையைக் கொடுக்காதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாகிவிடுவார். சுக்கிரன் மகிழ்ச்சி, ஆடம்பரம் போன்றவற்றில் காரணி. சுக்கிரன் பலவீனமடைந்தால், வீட்டில் மகிழ்ச்சி, பணம் போன்றவை குலைவதோடு, அமைதியும் பாழாகும்.

சுத்தத்தைக் கடைபிடிக்கவும்

சுத்தத்தைக் கடைபிடிக்கவும்

லட்சுமி தேவி தூய்மையை விரும்புபவர். சுத்தமான இடத்தில் தான் லட்சுமி தேவி வாசம் செய்வாள். எனவே வீட்டை எப்போதும் அசுத்தமாக வைத்திருக்காதீர்கள். உங்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும் மற்றும் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் எப்போதும் தங்கி இருக்க வேண்டுமானால், சுத்தத்தைக் கடைபிடிப்பதோடு, சுத்தமான ஆடைகளை எப்போதும் அணியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Not Buy These Things Even By Mistake On Friday

In this article, we will tell you what to do and what not to do on friday and what is auspicious to buy on friday and what is inauspicious.
Story first published: Friday, June 17, 2022, 18:22 [IST]
Desktop Bottom Promotion