Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
மூன்றாம் பாலினத்தவருக்கு வாடகைக்கு வீடு தர மறுத்தால் ஜெயில் தண்டனை... பிகார் அரசு அதிரடி
மூன்றாம் பாலினத்தவருக்கு வாடகைக்கு வீடு தர மறுத்தால் ஜெயில் தண்டனை... பிகார் அரசு அதிரடி
இந்திய பண்பாட்டில் மூன்றாம் பாலினத்தவருக்கு இடம் உண்டு. ஆனால், இயல்புக்கு மாறானதாக, சந்தேக நோக்கில் வன்கண்ணோட்டத்தோடு மூன்றாம் பாலினத்தவர் பார்க்கப்படுகின்றனர். மூன்றாம் பாலினத்தவரிடம் பாகுபாடு காட்டப்படும் நிகழ்வுகள் நம் நாட்டில் அதிகமாக நடக்கின்றன.

மூன்றாம் பாலினத்தவருக்கு வாடகைக்கு அல்லது விலைக்கு வீடு கொடுக்க மறுப்பது சட்டவிரோதமான செயல் என்று பீஹார் மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதுபற்றி இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

திருநங்கை பாதுகாப்பு மசோதா
2014ம் ஆண்டுதான் இந்திய உச்சநீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவரை தனி பாலினமாக அறிவித்தது. மூன்றாம் பாலினத்தவர் உரிமை பாதுகாப்பு மசோதா, அவர்களை பாதுகாக்கும் எண்ணத்தோடு 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும், சட்டத்தின் மூலம் அவர்கள் குற்றவாளிகளாக காட்டப்படும் வாய்ப்பு இருப்பதாக ஓரின சேர்க்கையாளர்கள் வலுவான கண்டனத்தை பதிவு செய்தனர்.

வெளியேற்றப்பட்ட திருநங்கை
மூன்றாம் பாலித்தனவர் மீதானவன் செயல்கள் தொடர்கின்றன. வாடகை வீட்டில் இருப்பதுபோன்ற அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு மும்பையில் ஜோகேஸ்வரி பகுதியில், திருநங்கை ஒருவர் பாலினத்தை காரணம் காட்டி கட்டாயப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேற்றப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் அங்கு இன்னும் நின்றபாடில்லை.

முதல் மாநிலமான பீஹார்
மூன்றாம் பாலினத்தவருக்கு வாடகைக்கு அல்லது விலைக்கு வீடு கொடுக்க மறுப்பது சட்டவிரோதமான செயல் என்று பீஹார் மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. பீஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மூன்றாம் பாலினத்தவருக்கான உறைவிட உரிமையை தடுப்போருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவருக்கான உறைவிட உரிமையை உறுதி செய்யும் சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் பீஹார்தான்.
வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் மூன்றாம் பாலினத்தவரை தேவையில்லாத கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், வாடகையை இருமடங்காக தரும்படி வற்புறுத்துவதாகவும் வந்த புகார்களையடுத்து பீஹார் அரசு இந்தக் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமியர் பராமரிப்பு இல்லங்களில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாய் வந்த புகாரையடுத்து, மூன்றாம் பாலினத்தவரை அந்த இல்லங்களின் பாதுகாவல் பணியில் 2018ம் ஆண்டே பீஹார் அரசு அமர்த்தியுள்ளது.

நல வாரியம்
பீஹார் மாநில மூன்றாம்பாலினத்தவர் நல வாரியத்தையும் அம்மாநில அரசு அமைத்துள்ளது. அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மற்ற மாநிலங்களில் என்னென்ன நலவசதிகள் செய்யப்படுகின்றன என்று இந்த வாரியம் கவனம் செலுத்தும்.
பீஹார் அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. மற்ற மாநில அரசுகளும் இச்சமுதாயத்தை கௌரவப்படுத்தும்படி இந்த 21ம் நூற்றாண்டிலாவது பாகுபாடுகளை களையப்பட இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர வேண்டும்.



Click it and Unblock the Notifications