Just In
- 7 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 8 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 8 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- 9 hrs ago
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம்
உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை.

ரிஷபம்
எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். . உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள்

மிதுனம்
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முடிவுகள் இறுதி செய்யப்படும்.

கடகம்
அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் - பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். கோளாறான உங்களின் நடத்தை அன்புக்குரியவருடன் மோதலை ஏற்படுத்தும். இன்று ஆபீசில் உங்களுக்கு யாராவது நல்ல ட்ரீட் கொடுக்க கூடும். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம்.

சிம்மம்
இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கன்னி
குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று, ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படலாம்.

துலாம்
உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். கமிஷன்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

விருச்சிகம்
எந்தக் காரணம் கொண்டும் பொறுமையை இழக்காதீர்கள். ஏனெனில் அது குடும்பத்தில் சில நிரந்தர பிளவை ஏற்படுத்திவிடும். நீங்கள் முயற்சி செய்தால் நல்லிணக்கம், அமைதியை ஏற்படுத்தலாம். பிளவுபட்டால் குடும்பம் தாங்காது. இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். குடும்பத்தினருடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் வீட்டில் பிரச்சினைகள் எழலாம். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும்

தனுசு
இது உங்களுடைய அதிர்ஷ்டமான நாட்களில் ஒன்றல்ல. எனவே இன்று வார்த்தைகளில் கவனம் தேவை. சிறிய உரையாடலும்கூட நாள் முழுக்க இழுத்து வாக்குவாதங்களாகி, மன அழுத்தத்தை அதிகமாக்கலாம். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள். வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள்.

மகரம்
இன்று புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ள வேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் பேச்சில் பொறுமையும் நிதானமும் தேவை. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மறைமுகத் தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும்.

கும்பம்
எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். மனைவியின் வழியில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சூடு பிடிக்கும் நாளாக இருக்கும். லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மீனம்
மகிழ்வாக வைத்துக் கொள்ள டென்சன், மன அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். புதிதாக எதையும் வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள். ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்ம காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். மார்க்கெட்டிங் துறையில் நுழைய வேண்டும் என்ற நீண்டகால நோக்கம் நிறைவேறலாம். அது உங்களுக்கு அபரிமிதமான ஆனந்தத்தைத் தரும். வேலையைப் பெறுவதற்கு சந்தித்த எல்லா தடைகளையும் நீக்கிவிடும்.