Latest Updates
-
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...
உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இன்றைய கிரக நிலைகளின் படி, எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப் போகுது, யாரெல்லாம் பிரச்சனையில் சிக்க போகிறார்கள்..
உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இன்றைய கிரக நிலைகளின் படி, எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப் போகுது, யாரெல்லாம் பிரச்சனையில் சிக்க போகிறார்கள், யார் அதிகம் பேசக்கூடாது, யாருக்கு செலவு அதிகமாக வரும், யாருடைய உடல் நலம் மோசமாக இருக்கும் என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை இன்றைய ராசிப் பலனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை சிறப்பாக செயல்பட ஊக்குவிப்பார்கள். இன்று நீங்கள் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருந்தால், எதிர்காலத்தில் நிறைய வருத்தப்படுவீர்கள். இன்று மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். பணத்தைப் பற்றி பேசுகையில், இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்றைய தினம் சற்று சவாலானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 11.05 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களின் பணிகள் அனைத்தும் தடையின்றி முடிக்கப்படும். வேலை சம்பந்தமான பெரிய பிரச்சனையை இன்று தீர்ப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷலான தினமாக இருக்கும். சிங்கிளாக இருப்பவர்கள் இன்று லல் ப்ரோபோஷலைப் பெறுவர். திருமணமானவர்களுக்கு சிறப்பான நாள். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு இன்று சிறப்பான நாள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
அதிர்ஷ்ட நேரம் : காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களின் காதல் வாழ்க்கை மலரும். திருமணமானவர்களுக்கு இன்று நல்ல நாள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து கிடைக்கும் அன்பும், ஆதரவும் கிடைப்பதால் சந்தோஷமடைவீர்கள். உங்கள் பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். இன்று வர்த்தகர்களுக்கு நல்ல நாள். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருக்கும் வேலை, இன்று எவ்வித இடையூறுமின்றி முடியும். உங்களது ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 39
அதிர்ஷட நேரம் : மதியம் 2.05 மணி முதல் மதியம் 3.40 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் பட்ஜெட்டை மீறி ஏற்படும் தேவையில்லாத செலவுகளால் பல பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உங்களின் அதிகமாக செலவு செய்யும் குணத்தின் காரணமாக, உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி முடிவுகளை இப்படி சிந்திக்காமல் எடுத்தால், உங்களின் எதிர்கால திட்டங்கள் தடைப்படக்கூடும். குடும்ப வாழ்க்கையின் கருத்து வேறுபாடுகள் இருக்கும். குடும்பத்திற்குள் உறவு மோசமாக இருப்பதால், வீட்டின் சூழ்நிலை இன்று சரியாக இருக்காது. ஆரோக்கியத்திற்கு சிறிது பிரச்சனைகள் ஏற்படும். உண்ணும் உணவு மற்றும் பானங்களில் சற்று கவனத்தை செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நீங்கள் சற்று குழப்பத்திலேயே இருப்பீர்கள். இந்நேரத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசுங்கள் அல்லது ஆலோசனை பெறுங்கள். வேலை சம்பந்தமாக முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால், அனுபவமுள்ளவருடன் விவாதிப்பது நல்லது. வேலையை மாற்ற நினைத்தால், அவசரப்படாதீர்கள். உறவுகளில் அமைதி இருக்கும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தினருடனான உறவு நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் புதிய சக்தியைத் தரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த சண்டை இன்று முடிவுக்கு வந்து, இருவருக்கும் இடையிலான நெருங்கிய உறவு அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வீட்டில் பூஜைகளை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலைமை வலுபெறும். இன்று பணம் சம்பந்தமான பதற்றமும் முடிந்துவிடும். இன்று முக்கியமான சில வேலைகளை முடித்துவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். இன்று வீட்டு வேலைகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நண்பர்களிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் அடிப்படையில் இன்று சிறப்பான நாள். உங்கள் வாழ்க்கைத் துணை வழக்கத்தை விட மிகவும் ரொமான்டிக்காக இருப்பார்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ நிறம்
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் இரவு 9.15 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் இன்று கிடைக்கும். உங்கள் இலக்கை அடைய சிறப்பான திட்டத்தை தீட்டுவீர்கள். அலுவலகத்தில் உள்ள சில முக்கியமான மற்றும் கடினமான வேலையை இன்று முடிப்பீர்கள். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். காதலர்களுக்கு இன்று ரொமான்டிக்கான நாள். இன்று உங்களின் வாழ்க்கைத் துணை ஆச்சரியமளிப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 28
அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் சற்று அதிக நேரத்தை செலவிடுங்கள். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையில் பிரச்சனை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள சில முக்கியமான பிரச்சனைகளை கவனிப்பீர்கள். நீண்ட நேரம் அலுவலக வேலையை பார்ப்பதால், உங்கள் குழந்தைகளை சரியாக கவனிக்காமல் இருந்திருப்பீர்கள். இன்று உங்கள் பணியை தள்ளி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டம் தீட்டுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருந்தாலும், செலவும் அதிகமாக இருக்கும். அலுவலக சூழ்நிலை சற்று சூடாக இருக்கும். உங்களின் உயர் அதிகாரி முக்கிய பணியினால் அதிக வேலைப்பளுவைக் கொடுப்பார். இருப்பினும் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, இன்று மன அழுத்தத்தை உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண் : 34
அதிர்ஷ்ட நேரம் : காலை 8.55 மணி முதல் மதியம் 2 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் நன்றாக உணர்வீர்கள். ஆரோக்கிய முன்னேற்றத்தால், உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று நீங்கள் சந்தோஷமாக இருக்கும் விஷயங்களை செய்வீர்கள். பொருளாதார நிலைமை வலுவாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. புதிய வேலையில் சிறிய முதலீடு செய்வதற்கான திட்டத்தைப் போட்டிருப்பீர்கள். அப்படி இருந்தால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான். திருமண வாழ்க்கை எப்போதும் போன்று தான் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று வேலையில் உள்ள மன அழுத்தத்தை விட்டுவிடுவது நல்லது. இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். ரொமான்டிக் வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். திருமணமானவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்கவும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் அலுவலகத்தில் எவ்வித அழுத்தமும் இல்லாமல் வேலையை முழுமையாக முடிப்பீர்கள். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலி. நிதி முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன அமைதியை அனுபவிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மன அழுத்தமின்றி சந்தோஷமாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். இன்று உங்கள் அன்பானவர்களிடம் சில மாற்றங்களைக் காணக்கூடும். இன்று உங்களின் காதல் வாழ்க்கையும் சாதாரணமாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நின்று போது சில முக்கியமான பணிகளுக்காக பணத்தை செலவழிப்பீர்கள். இன்று உங்களின் அனைத்து கவனமும் வேலையிலேயே இருக்கும். அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள் மற்றும் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று காதல் மற்றும் அன்பின் அடிப்படையில் நல்ல நாள். உங்களின் வாழ்க்கைத் துணை நல்ல மனநிலையில் இருப்பார். இன்று உங்களின் காதலை அவர்களிடம் வெளிக்காட்ட சிறப்பான நாளாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். செலவுகளைக் குறைப்பதன் மூலம் சேமிக்க முடியும். வணிகர்கள் பெரிய முதலீட்டு வாய்ப்பைப் பெறலாம். உங்கள் பங்கில் நம்பிக்கையுடன் இருந்தால், இந்த வாய்ப்பைக் கைவிடாதீர்கள். இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் அதிகமாக இருக்கலாம். இருந்தாலும், உங்களின் வேலையை எளிதில் முடிப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 31
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5 மணி முதல் 12.15 மணி வரை



Click it and Unblock the Notifications











