Latest Updates
-
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்!
இந்த 4 ராசிக்காரங்களும் மவுன விரதம் இல்லாட்டி பிரச்சினையாயிரும்...
புதன்கிழமை பொன்னான நாள். இன்று மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது அவசியம். இப்போது 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிப்பலன்கள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண்,
புதன்கிழமை பொன்னான நாள். இன்று மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது அவசியம். இப்போது 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிப்பலன்கள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நேரம் போன்றவற்றைக் காண்போம்.

மேஷம்
இன்னிக்கு உங்களுக்கு உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைங்க பனி போல விலகிடும். பிள்ளைங்களோட படிப்புல முன்னேற்றம் இருக்கும். பிசினஸ்ல இதுவரைக்கும் இருந்த இடைஞ்சல், தடங்கல், போட்டி என எல்லாமே விலகி ஓடிடும். புதுசா பண்ற முயற்சிங்களும் உங்களுக்கு வெற்றிய கொடுக்கும். சுப செய்தி உங்களை தேடி வந்து சந்தோஷத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்டமான நேரம் : காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

ரிஷபம்
இன்னிக்கு கூடப்பொறந்தவங்க கிட்ட சின்ன சின்ன விஷயத்துகாக மனஸ்தாபம் உண்டாகலாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. இல்லேன்ன உங்க குடும்பத்துல தேவையில்லாத பிரச்சனைங்க வந்து வாய்க்கும். எச்சரிக்கையா இருங்க. ஃப்ரண்ட்ஸுங்க மூலமா ஹெல்ப் கிடைக்கும். எந்த வேலையையும் கஷ்டப்பட்டு செஞ்சா தான் அதுல ஜெயிக்க முடியுன்னு நீங்க நம்பணும். பிசினஸ்ல இருந்துவந்த மந்த கதி மாறி இனிமேல் முன்னேற்றம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்டமான நேரம் : காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

மிதுனம்
இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்க விருப்பத்துக்கு மாறா ட்ரான்ஸ்பர் கிடைச்சி உங்களுக்கு மன உளைச்சலை கொடுக்கும். பிசினஸ் பண்றவங்க புதுசு புதுசா ஐடியாவ பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பீங்க. சொந்தக்காரங்க கூட அநாவசியமா சண்டை போட்டு மனஸ்தாபம் உண்டாகலாம். கவனமா இருக்க பாருங்க. பணக்கஷ்டம் ஓரளவுக்கு கம்மியாகலாம். நீங்க எதிர்பாத்துட்டு இருக்குற ஹெல்ப் கிடைக்குறதுல தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை
அதிர்ஷ்டமான எண் : 7
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

கடகம்
இன்னிக்கு கவர்மெண்ட் கிட்ட எதிர்பாத்துட்டு இருந்த ஹெல்ப் கிடைச்சிடும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கூட சுமூக உறவு உண்டாகிடும். எதிர்பாக்காம திடீர் பணவரத்து வந்து உங்களை திக்குமுக்காட வைச்சிடும். அதனால ஆடம்பர சாமான்கள் வாங்குறதுல ரொம்பவே ஆர்வம் காட்டுவீங்க. குடும்பத்துலயும் சந்தோஷம் ஏற்பட்டுடும். உங்க ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்டமான நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்
இன்னிக்கு பணவரத்து சுமாரா தான் இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்க ஒத்தாசையால பிசினஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் ஏற்படும். அதனால லாபமும் கூடிடும். கடன் சுமையும் குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு. பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைச்சிடும். பிள்ளைங்களால அநாவசிய பிரச்சனைகள் உண்டாகலாம், கவனமா இருங்க. வேலை விஷயமா வெளியூர் பயணம் வேண்டாம் தள்ளிப்போடுறது நல்லது.
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்டமான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

கன்னி
இன்னிக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால வீட்டுல சந்தோஷம் கூடிடும், சுப விஷேசம் நடக்கும். பிசினஸ் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா, கொஞ்ச நாளைக்கு ஒத்திப்போடுறது நல்லது. புதுசா சொத்து பத்து வாங்க இன்னிக்கு அற்புதமான நாள். பசங்களோட விருப்பத்தை இன்னிக்கு பூர்த்தி செய்வீங்க. பண வரவு தாராளமா இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்டமான நேரம் : பிற்பகல் 02 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்
இன்னிக்கு வண்டி வாகனத்துனால தண்டச் செலவுங்க வந்து கையை கடிச்சிடும். பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல்ல ரொம்பவே எச்சரிக்கையா இருக்க பாருங்க. சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைச்சிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்க கிட்ட ரொம்ப அனுசரணையா நடந்துக்குவீங்க. இன்னிக்கு எந்த வேலையையும் ஒரு தடவைக்கு மூணு தடவை யோசிச்சி செய்ய பாருங்க.
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்
இன்னிக்கு உங்களோட அத்தியாவசிய தேவைங்க பூர்த்தியாகிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு புது பொறுப்புங்க தேடி வரும். தைரியமா எடுத்து செய்யப்பாருங்க. பிசினஸ்ல வெளிவட்டாரத் தொடர்பு மூலமா நல்லது நடக்க வாய்ப்பிருக்கு. பிள்ளைங்க உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. குடும்பத்துல சுப செலவுங்க வந்து உங்க கையை கடிச்சிடும். இருந்தாலும் சேமிப்பும் கூடிடும்.
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்டமான நேரம் : இரவு 8.45 மணி முதல் இரவு 11 மணி வரை

தனுசு
இன்னிக்கு குடும்பத்துல கணவன் மனைவிக்குள்ளாற இருந்துவந்த மனஸ்தாபம் மறைஞ்சி அந்நியோன்யம் கூடிடும். வீட்டுல கல்யாண பேச்சுவார்த்தையில் நல்ல தகவல் வந்து சேரும். பழைய கடன் இன்னிக்கு வசூலாகிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களை சீனியர் அதிகாரிங்க பாராட்டுவாங்க. பிசினஸ்ல புது ஃப்ரண்ட்ஸுங்க அறிமுகம் ஆவாங்க. அதனால பிசினஸும் கூடிடும்.
அதிர்ஷ்டமான நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 5.45 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம்
இன்னிக்கு பிசினஸ் விஷயமா நீங்க எடுக்குற முயற்சியை கொஞ்சம் யோசிச்சி செஞ்சா புதுசா பெரிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால வேலைச்சுமை குறைஞ்சிடும். குடும்பத்துல இருக்குறவங்ககிட்ட அந்நியோன்யம் குறையும். இன்னிக்கு உங்களோட நிதி நிலைமையும் கொஞ்சம் மந்தமாதான் இருக்கும். அதனால யோசிச்சி செலவழிக்க பாருங்க.
அதிர்ஷ்டமான நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 5.45 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்
இன்னிக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் நடக்குறதுனால, எதுலயும் கொஞ்சம் அசமஞ்சமா தான் வேலை பாப்பீங்க. ஹெல்த்துக்கு கொஞ்சம் மெடிக்கல் செக்கப் செய்ய வேண்டியது கட்டாயம். கொரோனா பீதி இருக்குற இந்த நேரத்துல முன்ன பின்ன தெரியாதவங்க கூட பேசாம ஒதுங்க போயிடறது நல்லது. வெளியூர் பிரயாணத்தையும் அவாய்ட் பண்றது நல்லது. எதையும் கொஞ்சம் நிதானிச்சி செய்ய பாருங்க. இல்லாட்டி, அநாவசிய பேச்சுக்கு ஆளாவீங்க. எச்சரிக்கையா இருங்க.
அதிர்ஷ்டமான நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 13
அதிர்ஷ்டமான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை

மீனம்
இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலைச் சுமை குறைஞ்சிடும். சுப விஷேச பேச்சுவார்த்தை சம்பந்தமான முயற்சிக்கு நல்ல பலன் கிடைச்சிடும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா உங்களுக்கு சாதகமான செய்தி உங்க காதுக்கு எட்டிடும். பிசினஸ்லயும் எதிர்பாத்த லாபம் கிடைச்சிடும். இன்னிக்கு நீங்க நெனைச்ச காரியம் எல்லாமே நடந்து உங்களோட தேவையும் பூர்த்தியாகிடும்.
அதிர்ஷ்டமான நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்டமான நேரம் : காலை 5.45 மணி முதல் காலை 9 மணி வரை



Click it and Unblock the Notifications
