Latest Updates
-
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
இந்த 2 ராசிக்காரங்களும் இன்றைக்கு ரொம்ப எச்சரிக்கையாக இருங்க...
இன்று மார்ச் 7 ஆம் நாள் சனிக்கிழமை இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பல கேள்விகள் எழலாம்.
இன்று மார்ச் 7 ஆம் நாள் சனிக்கிழமை இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பல கேள்விகள் எழலாம். அனைத்து கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். அம்மா உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 8:30 மணிவரை

ரிஷபம்
இன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
இன்று உறவினர்களால் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 6:45 மணிவரை

மிதுனம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : விடியற்காலை 4:25 முதல் நண்பகல் 12:30 மணிவரை

கடகம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் இரவு 7:30 மணிவரை

சிம்மம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும்.
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 5:40 முதல் இரவு 9:40 மணிவரை

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : மாலை 4:55 முதல் இரவு 10:00 மணிவரை

துலாம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உடல் ஆரோக்கியம் சுறுசுறுப்புடன் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : முற்பகல் 10:05 முதல் மாலை 4:00 மணிவரை

விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:55 மணிவரை

தனுசு
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகள் வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமும் கவனமும் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் மாலை 6:15 மணிவரை

மகரம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 1:20 முதல் இரவு 7:30 மணிவரை

கும்பம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். மூத்த உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 16
சாதகமான நேரம் : மாலை 6:25 முதல் இரவு 8:40 மணிவரை

மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : மாலை 1:25 முதல் இரவு 8:40 மணிவரை



Click it and Unblock the Notifications











