Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்த ராசிக்காரங்களுக்கு டென்சன் அதிகமாகும் எச்சரிக்கை..!
உலகமே கொரோனா பயத்தில அலறிக்கிடக்கிறது. இன்றைக்கு செவ்வாய் கிழமை ஏப்ரல் 7 ஆம் நாள் எந்த ராசிக்காரங்க எல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும், பணத்தை பத்திரமாக வைக்கணும், யாரெல்லாம் ரொம்ப டென்சன் ஆவாங்க
உலகமே கொரோனா பயத்தில அலறிக்கிடக்கிறது. இன்றைக்கு செவ்வாய் கிழமை ஏப்ரல் 7 ஆம் நாள் எந்த ராசிக்காரங்க எல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும், பணத்தை பத்திரமாக வைக்கணும், யாரெல்லாம் ரொம்ப டென்சன் ஆவாங்க போன்ற பல கேள்விகளுக்கான விடையை இன்றைய ராசிபலன் உங்களுக்கு சொல்கிறது. அதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு ஆறாவது இடத்துல சந்திரன் இருக்குறாரு, அதனால சுப நிகழ்ச்சிகள் நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குங்குறதுனால வீடே களை கட்டிடும். கஷ்டப்பட்டு வேலை பாக்குறவங்களுக்கு அதுக்கேத்த மாதிரி புது வாய்ப்புகள் தேடி வரும். எந்த வேலையையும் ரொம்ப சந்தோஷத்தோடவும் இன்வால்வ்மெண்ட்டோடவும் செய்வீங்க. புதுசா நகை நட்டு வாங்குறதுல அவசரப்பட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு வீட்டுல பிள்ளைங்களால பிரச்சனை ஏற்பட்டு வீட்டோட அமைதி குறையலாம். எந்த வேலையை செஞ்சாலும் அவசரப்படாம நிதானமா செய்யப்பாருங்க. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல ட்ராவல் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூடுதல் வேலைச்சுமை ஏற்பட்டுடும். பணப்பிரச்சனை தீர்ந்தாலும் சொந்தக்காரங்களால தண்டச்செலவு வந்து கையை கடிச்சிடும். எச்சரிக்கையா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உங்க குடும்பத்துல திடீர் செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால செலவை சமாளிக்க வெளியில கடன் வாங்குற நிலை ஏற்படலாம். சொந்தக்காரங்க ஒத்தாசை கிடைக்குறதுனால நீங்க எடுக்குற சுபகாரிய முயற்சியில தடங்கல், இடைஞ்சல் வந்தாலும் கடைசியில சரியாகி நல்லதே நடக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் கூடிடும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை எடுத்துக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 16
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:00 மணிவரை

கடகம்
இன்னிக்கு உங்க திறமையை மத்தவங்க புரிஞ்சிக்கிற சந்தர்ப்பம் கிடைக்கும். நீங்க எடுக்குற முயற்சிக்கு வெற்றி கிடைச்சிடும். அதனால உங்க தைரியமும் கூடிடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு காசுக்கேத்த பணியாரம்கிறது மாதிரி, வேலைக்கு ஏத்த சம்பளம் கிடைக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அதிர்ஷ்ட எண் : 48
சாதகமான நேரம் : இரவு 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போறது நல்லது. தேவையில்லாததை பேசி வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க. இல்லேன்னா பிரச்சனை பெரிசாகிடும். கவனமா இருங்க. பிசினஸ் பண்றவங்க பண நெருக்கடி வராம பாத்துக்கோங்க. திடீர் பணவரத்து வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஹெல்த் கண்டிஷன்ல சின்ன சின்ன பாதிப்புங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:25 மணிவரை

கன்னி
இன்னிக்கு உங்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல்ல லாபமா இருக்கும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால வீட்டுல சுப நிகழ்ச்சிங்க நடக்குறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். வீட்டுல இருக்குற எல்லோரும் உங்கமேல பாசத்தை பொழிவாங்க. கவர்மெண்ட் மூலமா ஹெல்ப்பும் கிடைச்சிடும். பணவரத்தும் தாராளமா இருக்கும். மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு சந்தோஷமான நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை எடுத்துக்குறது நல்லது. குடும்பத்துல இருக்குறவங்களை அனுசரிச்சி போங்க. தேவையில்லாத விஷயத்துக்கு எல்லாம் சண்டை போட்டு பிரச்சனையை வளர்க்காதீங்க. கோவில் குளம்னு போய்ட்டு வர்றது மனசுக்கு ஆறுதலா இருக்கும். பிசினஸ்ல எதிர்பாத்த முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு பூர்வீக சொத்து சம்பந்தமா உங்களுக்கு நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. கொரோனா பீதி இருக்குற இந்த நேரத்துல, வெளியூர் பிரயாணத்தை அவாய்ட் பண்றது நல்லது. உத்தியோகம் பாக்குறவங்க சில பேத்துக்கு ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. வருமானமும் திருப்தியா இருக்கும். சொந்தக்காரங்க வர்றதுனால வீடே கலகலப்பா மாறிடும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு எதிர்பாத்த இடத்துல இருந்து ஒத்தாசை கிடைச்சிடும். புதுசா வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிடுவீங்க. பெரியவங்களோட மனசுல இடம் பிடிப்பீங்க. சொந்தக்காரங்க வர்றதுனால வீடு களை கட்டும். வீட்டுல சுப நிகழ்ச்சிகள் நடக்குறதுக்கு சந்தர்ப்பம் உண்டு. எடுத்த காரியத்தை வெற்றிகரமா முடிச்சி காட்டுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் இரவு 7:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு பண வரத்து சுமாரா இருந்தாலும், வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவீங்க. ஆனாலும், பிள்ளைங்களால தண்டச் செலவுங்க வந்து கையை கடிச்சிடும். எச்சரிக்கையா இருக்க பாருங்க. கூடப்பொறந்தவங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரியோட சப்போர்ட்டும் கிடைச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : காலை 9:40 முதல் மாலை 5:30 மணிவரை

கும்பம்
இன்னிக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் நடக்குறதுனால, அநாவசிய அலைச்சல் உண்டாகலாம். அதோட தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் மனசு அலைபாயும். அதனால எச்சரிக்கையா இருக்க பாருங்க. புதுசா எதுலயும் இண்வெஸ்ட் பண்ணாதீங்க. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல, முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேச்சுவார்த்தையை வச்சிக்காதீங்க. செய்யுற வேலையில கவனமா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 34
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 4:25 மணிவரை

மீனம்
இன்னிக்கு வீட்டுல கணவன் மனைவிக்கு நடுவுல இருந்து வந்த மனக் கசப்பு காணாம போயி அந்நியோன்யம் கூடிடும். வீட்டுல சுபகாரியம் சம்பந்தமான பேச்சு வார்த்தையில நல்ல முன்னேற்றம் உண்டாகலாம். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா நல்லது நடக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு லாபம் அமோகமா இருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல நல்ல இம்ப்பூர்வ்மெண்ட் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 34
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:55 மணிவரை



Click it and Unblock the Notifications











