Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா?
ஒவ்வொருவருக்கும் விடியும் பொழுது இன்று எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று மனதில் தோன்றும். இதற்காக காலையில் எழுந்ததுமே ராசிப் பலன்களைப் பார்த்துவிட்டு தான் வேறு வே
ஒவ்வொருவருக்கும் விடியும் பொழுது இன்று எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று மனதில் தோன்றும். இதற்காக காலையில் எழுந்ததுமே ராசிப் பலன்களைப் பார்த்துவிட்டு தான் வேறு வேலையே செய்வார்கள். நீங்களும் அப்படிப்பட்டவரா? அப்படியானால், இன்றைய கிரக நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ராசிக்காரர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கப் போகிறது என்று தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து இன்றைய தினத்தை தொடங்குங்கள்.

மேஷம்
இன்றைய தினம் உங்களுக்கு அருமையாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இன்று இதுவரை உறவுகளில் இருந்த கசப்புக்கள் நீங்கும் மற்றும் உங்கள் உறவினர்களுடன் மீண்டும் இணைந்து சந்தோஷமாக இருப்பீர்கள். இன்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு சந்தோஷமாக இருப்பீர்கள். அலுவலகத்தில், உங்களின் நேர்மறையான சிந்தனை பெரிய வெற்றியைக் கொடுக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவராயின், உங்கள் எதிராளியை ஆதிக்கம் செலுத்த முடியும். பொருளாதார முன்னணியில், நண்பர்களின் உதவியுடன் நன்மை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காதல் வாழ்க்கையில், நீங்கள் இன்று எடுக்கும் முடிவால் உங்களின் வாழ்க்கையையே மாற்றும். இன்று பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 34
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.20 முதல் மதியம் 1.30 மணி வரை

ரிஷபம்
பணியிடத்தில் நிலைமை சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். உங்களின் ஆளுமையை மேம்படுத்த முடிந்தவரை முயற்சிப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி கூறுவதானால், இன்று குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் விலைமதிப்பற்ற ஒன்றைப் பெறலாம். திருமணமானவர்கள் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேப் போல் பேசும் போது வார்த்தைகளை கவனித்துப் பேசுங்கள். இல்லாவிட்டால், அது உங்கள் துணையின் மனதை புண்படுத்திவிடும். இன்று உங்களின் ஆரோக்கியம் வலிமையாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1.05 முதல் மாலை 5 மணி வரை

மிதுனம்
குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். இன்று குழந்தைகள் தொடர்பான கவலைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அலுவலகத்தில், உங்களின் சிறந்த செயல்திறனால் மேலே உயர்ந்திருப்பீர்கள். உயர் அதிகாரிகளின் உங்களால் மிகவும் சந்தோஷமடைவார்கள். நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், எதிர்பார்ப்பதை விட அதிக பலனைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று மனதளவிலும், உடலளவிலும் சிறப்பாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 27
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, அலுவலக வேலை நன்றாக இருக்காது. பணிபுரிபவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களின் மோசமான செயல்திறனால் உயர் அதிகாரிகள் அதிருப்தி அடையக்கூடும். வர்த்தகர்களுக்கு இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும். இன்று முக்கியமான எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இன்று நீங்கள் எதையேனும் மாற்ற நினைத்தால், அதற்கு இன்றைய தினம் சாதகமாக இல்லை. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். திருமணமாகாதவர்களாக இருந்தால், இன்று ஒரு நல்ல வரன் வரும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.50 முதல் இரவு 10.30 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று மன அழுத்தத்தால் சற்று பலவீனமாக இருப்பீர்கள். எனவே உங்கள் மீது சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான வேலையை முடிப்பதற்காக இன்று அலுவலகத்தில் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கான பலன் விரைவில் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல நாள். குடும்பத்தில் இன்று ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு மோசமடைந்து ஒரு பெரிய சர்ச்சை ஏற்படலாம். நீங்கள் நியாயமாக இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும். உங்கள் துணையுடன் சற்று அதிக நேரத்தை செலவிடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அதிர்ஷ்ட எண் : 19
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.20 முதல் இரவு 8.20 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை நன்றாக இருக்காது. மேலும் மன அழுத்தத்தால், இன்று உங்களால் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியாது. இன்று பல வேலைகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தகராறு ஏற்படலாம். எனவே உங்களின் பொன்னான நேரத்தை இம்மாதிரியான விஷயங்களில் வீணடிக்காதீர்கள். என்ன இருந்தாலும், இன்று மிகப்பெரிய சிக்கலை சந்திப்பீர்கள். காதல் வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை கடினமான நேரங்களில் உங்களை ஆதரிப்பார். இன்று உங்களின் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் அவர்களிடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை

துலாம்
இன்று சமூக வாழ்க்கையில் அதிக கவனத்தை செலுத்துவீர்கள். இன்று சமூகத்தில் பல முக்கிய நபர்களை சந்திப்பீர்கள், இதனால் உங்களின் இணைப்பு அதிகரிக்கும். எனவே நீங்கள் சரியாக நடந்து கொள்வது நல்லது. இன்றைய தினம் காதலர்களுக்கு நன்றாக இருக்கும். முக்கியமான முடிவால் உங்களின் உறவு வலுவாகும். வாழ்க்கைத் துணை இன்று அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பார். நீங்கள் இருவரும் இன்று ரொமான்டிக்காக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று அதிகமாக செலவு செய்வீர்கள். அலுவலகத்தில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6.45 முதல் இரவு 11.05 வரை

விருச்சிகம்
இன்று அலுவலக பணி சிறப்பாக இருக்கும். பணி புரிபவர்கள் அலுவலகத்தில் இடமாற்றம் அல்லது உயர் பதவி சம்பந்தமான சில நற்செய்திகளைப் பெறுவர். வர்த்தகர்களுக்கு இன்று லாபம் ஈட்டுவதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று நிதி நிலைமை வலுவாக இருக்கும். நீங்கள் புதிய வாகனம் வாங்க நினைத்தால், இன்று வாங்க செல்வதற்கான சாதகமான நாளாகும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு நன்றாக இருக்கும். மனைவியுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 4.15 மணி முதல் மதியம் 12.20 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்கள், இன்று வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இன்று முக்கியமான பணிகளை முடித்துவிடுங்கள். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில், உடன் பணிபுரிபவர்கள் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுவார்கள். பொருளாதாரம் நன்றாக இருக்காது. அதிகப்படியான செலவால் மனதளவில் வருத்தப்படுவீர்கள். திருமண வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். இன்று நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட எண் : 31
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.15 மணி முதல் மதியம் 3.50 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று நீங்கள் உங்களை அறியாமலேயே காயப்படுத்திக் கொள்வீர்கள். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். பெற்றொரின் ஆசீர்வாதம் மற்றும் பாசத்தால் நேர்மறையாக உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. தேவையில்லாத சண்டைகளைத் தவிர்க்க இருவரும் அமைதியாக இருப்பதே நல்லது. காதல் தம்பதிகளுக்கு இன்று ரொமான்டிக்காக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையை அழைத்துக் கொண்டு விருப்பமான உணவகத்திற்கு செல்வீர்கள். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். அலுவலக வேலை சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.45 முதல் மாலை 5.20 வரை

கும்பம்
பணியிடத்தில் வெற்றி பெற நினைத்தால், உங்கள் பணிகளை தீவிரமாக எடுத்து செய்யுங்கள். எதையும் அலட்சியமாக எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை வேகமாக முடிக்க முயற்சி செய்யுங்கள். புதிய தொழில் தொடங்க நினைத்தால், உங்கள் நெருக்கமானவர்களிடம் இருந்து நிதி ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாகும். உங்கள் சகோதரர் அல்லது சகோதரியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது. மனம் விட்டு பேசுவதன் மூலம் பிரச்சனை தீரும். இன்று உங்களின் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 21
அதிர்ஷ்ட நேரம் : காலை 7.15 முதல் மதியம் 2.05 வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் எழக்கூடும். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் அழுத்தத்தைக் கொடுக்கலாம். இன்று திருமணமாகாதவர்களுக்கு திடீரென்று அவசரமாக திருமணம் முடிப்பதற்கான விசித்திரமான சூழ்நிலை ஏற்படும். இம்மாதிரியான சூழ்நிலையில் அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று கடுமையாக ஷாப்பிங் செய்வீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு இலகுவாக இருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுங்கள். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை



Click it and Unblock the Notifications











