Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
இந்த ராசிக்காங்க ரொம்ப சிக்கனமாக இருங்க.. இல்லாட்டி பணம் செலவாயிரும்...
இன்று மார்ச் 4 ஆம் நாள் இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பல கேள்விகள் எழலாம். அனைத்து கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம்
இன்று மார்ச் 4 ஆம் நாள் இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பல கேள்விகள் எழலாம். அனைத்து கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும்.

மேஷம்
இன்று உங்களின் தைரியம் கூடும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். முக அழகு அதிகமாகும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி அதிகமாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். பண வருமானம் வரும் பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். காதல் வாழ்க்கையில் கலகலப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - 11:05 மணி

ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காதல் உறவுகளில் விட்டுக்கொடுத்து போங்க.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:00 - இரவு 8:15 மணி

மிதுனம்
உங்களுக்கு இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். உங்களின் சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை உங்களுக்கு கலகலப்பாக இருக்கும். உங்க நிதி நிலைமை சுமாராக இருக்கும்
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 - மாலை 3:00 மணி

கடகம்
இன்றைக்கு நீங்க வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வரவுக்கு மேல் செலவு ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாளாக மாறும்.
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 - மதியம் 2:45 மணி

சிம்மம்
இன்று உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 8:00 மணி

கன்னி
உங்களுக்கு இன்றைக்கு தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். லாபம் அதிகமாகும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும். வேலைப்பளு அதிகமாகும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் நிதானமாக பேசுங்கள். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். காதல் துணையுடன் இனிய பயணம் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 - இரவு 10:00 மணி

துலாம்
உங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த தொந்தரவுகள் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து போங்க. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் நன்மைகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:00 - இரவு 7:15 மணி

விருச்சிகம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் யாருடனும் வம்பு பேச்சுக்கள் வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. வீட்டில் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாராவது வீம்பாக பேசினால் கூட மவுன விரதம் இருங்க பிரச்சினை சரியாகி விடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 - இரவு 8:45 மணி

தனுசு
இன்றைக்கு குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சந்தோஷம் அதிகமாகும். காதல் வாழ்க்கை இன்று உங்களுக்கு கலகலப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையாக ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 9:45 மணி

மகரம்
உங்களுக்கு இன்றைக்கு நோய்கள் நீங்கும் கடன்கள் அடைபடும். உங்க சேமிப்பு உயரும். இன்று நீங்கள் மன உறுதியோடு இருப்பீங்க. வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இன்று உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணம் போவீர்கள் அது நன்மையில் முடியும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 - இரவு 8:00 மணி

கும்பம்
உங்களுக்கு இன்றைய தினம் தொழில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். காதல் வாழ்க்கை இன்று சுமாராகவே இருக்கும் பணம் விசயமாக கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்படலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: இரவு 9:50 - பிற்பகல் 2:25

மீனம்
இன்றைக்கு உங்க அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படும். எந்த ஒரு விசயத்திலும் விட்டுக்கொடுத்து போங்க நிதானமாக பேசுங்க. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சுகமான நாளாக மாற மன அமைதியும் தியானமும் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 - மாலை 6:30 மணி



Click it and Unblock the Notifications











