Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன்கிழமை - பணமழை யாருக்கு தெரியுமா?
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். சிறப்பு வாய்ந்த புதன்கிழமை நாளில் சிலருக்கு சந்தோஷம் அதிகரிக்கலாம். சிலரது வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். சிலரது வீட்டில் பணமழை பொழியலாம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். சிறப்பு வாய்ந்த புதன்கிழமை நாளில் சிலருக்கு சந்தோஷம் அதிகரிக்கலாம். சிலரது வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். சிலரது வீட்டில் பணமழை பொழியலாம். யாருக்கு என்னென்ன நடக்கும் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கீங்களா? உங்களுக்காகவே ராசிபலன் கொடுத்திருக்கிறோம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் பலன்களை படிங்க. மீனம் ராசிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க.

மேஷம்
இன்னிக்கு சுபகாரிய முயற்சிகள் எல்லாமே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். ரொம்ப நாளாக வரவேண்டிய கடன் பாக்கி பணம் இன்றைக்கு வீடு தேடி வரும். சொந்தக்காரங்க கூட பாசமும் உறவும் பலப்படும். நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்துல சிலருக்கு எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். வீட்டுலயும் உற்சாகம் பொங்கி வழியும். பண வரத்தும் அமோகமா இருக்கும்.
ராசியான நிறம் : பர்ப்பிள்
ராசியான எண் : 12
ராசியான நேரம் : மதியம் 12.45 மாலை 6 மணி

ரிஷபம்
இன்னிக்கு நீங்க எதிர்பார்த்த இடத்துல இருந்து உதவிகள் தேடிவரும். மனசளவுல ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க. பிள்ளைங்க படிப்புல ரொம்பவே ஆர்வம் காட்டுவாங்க. பிசினஸ் ரீதியான வெளிவட்டார தொடர்புனால புது நட்பு கிடைக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. குடும்பத்துலயும் மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற சம்பவங்கள் நடக்கும். கணவன் மனைவி இடையே சந்தோஷம் ஊற்றெடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் புளு
அதிர்ஷ்ட எண் 15
அதிர்ஷ்ட நேரம் மாலை 4 மணி இரவு 9.20 மணி

மிதுனம்
இன்னிக்கு பிசினஸ்ல தவிர்க்க முடியாம சில இடைஞ்சல்கள் உண்டாகலாம், இருந்தாலும் எதிர்பாத்த லாபம் வந்துடும். பண வரத்து சுமாரா இருந்தாலும், குடும்பத்துல ஆடம்பர பொருட்களை வாங்குறதுனால செலவு கூடிடும். கூடப்பொறந்தவங்க கூட மன வருத்தம் உண்டாகும். ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பாதிப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு கவனமா இருங்க சாப்பாடு விசயத்தில உஷாரா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
அதிர்ஷ்ட நம்பர் 30
அதிர்ஷ்ட நேரம் காலை 11.45 மாலை 6.30

கடகம்
இன்னிக்கு பூர்வீக சொத்து சம்பந்தமா அலைச்சல் ஏற்பட்டாலும் கூட, கடைசியில உங்களுக்கு அதுக்கேத்த பலன்கள் கிடைக்கும். பணத்தை எண்ணி எண்ணி சிக்கனமாக செலவழிச்சா, பணப் பிரச்சனை வராம தவிர்த்துடலாம். அதனால குடும்பத்துலயும் நெருக்கடி தீந்து குதூகலமா இருப்பீங்க. பண வரத்து சுமாரா இருந்தாலும், பிள்ளைங்க வழியில தண்டச்செலவுகள் வரலாம் கவனம்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : காலை 6:00 முதல் முற்பகல் 11:25 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு பிசினஸ்ல புது நபரோட அறிமுகத்தால நன்மைகள் உண்டாகிடும். நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு வெற்றியும் கிடைக்கும். உத்தியோகத்துல சில பேத்துக்கு வெளியூர் போறதுக்கான சந்தர்ப்பம் வாய்க்கும். சொந்தக்காரங்க மூலமா சுபகாரிய செய்திகள் உங்க காதுக்கு வந்துடும். குடும்ப உறுப்பினர்கள் கூட ஒத்துமை கூடிடும். அதனால உங்களுக்கு மனசளவுலயும், ஹெல்த் கண்டிஷன்லயும் ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் இரவு 10:20 மணிவரை

கன்னி
அரசு உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். பிசினஸ்ல இதுவரைக்கும் எதிரியா இருந்தவங்க கூட இன்னிக்கு நல்ல ஃப்ரண்டா மாறிடுவாங்க. பிள்ளைங்களுக்கும் படிப்புல ரொம்பவே ஆர்வம் கூடும். இன்னிக்கு எந்த வேலையை செஞ்சாலும் ரொம்பவே மனதிருப்தியோடவும், சந்தோஷமாவும் செய்வீங்க. வீட்டுல சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்து எல்லோரும் குதூகலமா இருப்பீங்க. உங்களின் காதல் வாழ்க்கையில் பிணைப்பு அதிகரிக்கும். பணத்தை பல வழிகளில் சேமிப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

துலாம்
இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க கொடுக்குற ஐடியாவுனால, பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியில கொடுத்த கடன்களும் இன்னிக்கு வசூலாகும். வீட்டுக்கு தேவையானபொருட்களையும் வாங்கி குவிப்பீங்க. பிள்ளைங்க மூலமா சுபச் செலவுகள் வந்துடும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பமே குதூகலமாகிடும். உங்க மனசுலயும், ஹெல்த் கண்டிஷன்லயும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறவில் விட்டுக்கொடுத்து போங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க இல்லாவிட்டால் வயிறு பிரச்சினைகள் வந்து சிக்கலை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல வாக்குவாதம் உண்டாகலாம். விட்டுக்கொடுத்து போனீங்கன்னா பெரிய அளவுல பிரச்சனை வராம தவிர்த்துடலாம். பிசினஸ்ல வியாபாரம் மந்த கதியா இருந்தாலும் பெரிய அளவுல பாதிப்பு எதுவும் வராது. இன்னிக்கு பண வரத்து சுமாரா இருந்தாலும், குடும்பத்துல எதிர்பாராத செலவுங்க வந்து ஃபைனான்ஸ் ப்ராப்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கு. எதிர்பாக்காத உதவிகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு சுபகாரிய பேச்சுவார்த்தையில உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பிசினஸ்லயும் பெரிய மனுஷங்களோட சப்போர்ட்டுனால நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பிசினஸ்ல இருந்த போட்டி பொறாமைகள் குறைஞ்சி லாபமும் கிடைக்கும். உத்தியோகத்துல சில பேருக்கு புது வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எதையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து கொடுக்கவும் இல்லாவிட்டால் நஷ்டம் மன கஷ்டத்தை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:20 மணிவரை

மகரம்
இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். சொந்தக்காரங்களால உங்களுக்கு சந்தோஷம் கொடுக்குற இனிப்பான செய்திகளும் வந்துடும். பிசினஸ்ல வியாபாரத்தை பெருக்குறதுக்காக நீங்க எடுக்குற முயற்சிகள்ல நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனும் அற்புதமா இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும். காதல் துணையோடு நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 11:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு உத்தியோகத்துல வேலைச்சுமைகள் குறையும். நீங்க எடுக்குற புது முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களோட சப்போர்ட் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்களும் உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. கடந்த ரெண்டு நாளா பிசினஸ்ல ஏற்பட்டிருந்த வீண் பிரச்சனைகள் இன்னிக்கு முடிவுக்கு வந்துடும். இதுவரைக்கும் உங்க மனசுல இருந்து வந்த கவலையும், குழப்பமும் காணாம போயிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:05 மணிவரை

மீனம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பேச்சுலயும், செய்யுற வேலையிலும் கொஞ்சம் நிதான போக்கோட நடந்துக்குறது நல்லது. பிசினஸ்ல பெரிய அளவுல பணத்தை கொண்டு போயி கொட்டாதீங்க. சுப காரிய முயற்சிகளையும் தள்ளி வைக்குறது நல்லது. யார்கிட்டயும் வீண் வம்பு பேசி பிரச்சனையில மாட்டிக்காதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 43
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் இரவு 10:00 மணிவரை



Click it and Unblock the Notifications











