இன்னைக்கு யாருக்கெல்லாம் பிசினஸ் நல்லா போகும் யாருக்கு டல்லா இருக்கும்?

உங்க ராசிகள் நட்சத்திரங்களுக்கு என்னென்ன நடக்கும் நிதி நிலைமை எப்படி இருக்கும் பணம் வருமா? வராதா என்று யோசிக்கிறீர்களா? இன்றைய தினம் உங்களுக்கு என்னென்ன நடக்கும் என்று இன்றைய ராசிபலன்களை படித்து தெரிந

உங்க ராசிகள் நட்சத்திரங்களுக்கு என்னென்ன நடக்கும் நிதி நிலைமை எப்படி இருக்கும் பணம் வருமா? வராதா என்று யோசிக்கிறீர்களா? இன்றைய தினம் உங்களுக்கு என்னென்ன நடக்கும் என்று இன்றைய ராசிபலன்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக் காரங்களுக்கு இன்னிக்கு பசங்க மூலமா சுபச் செலவுங்க வரலாம். சந்திரன் உங்க ராசிக்கு 3ஆவது வீட்டுல இருக்குறதுனால, எடுக்குற முயற்சிங்கள்ல வெற்றி கிடைக்கும். சமூகத்துல பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைக்குறதுனால மனசுக்கு இதமா இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்களோட ஹெல்ப்பும் கிடைக்கும். வேலை தேடுறவங்களுக்கு புது வேலை கிடைக்க சந்தர்ப்பம் இருக்கு. பிசினஸ் டெவலப்புக்கு கவர்மெண்ட் மூலமா ஹெல்ப்பும் கிடைச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : காலை 8:30 முதல் முற்பகல் 10:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு கல்யாண பேச்சுவார்த்தை முயற்சியில தடை, தாமதம்னு ஏற்பட வாய்ப்பிருக்குது. ஃப்ரெண்ட்ஸுங்களை மீட் பண்றது மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். பார்ட்னர்ஷிப் பிசினஸ் பண்றவங்க, அவங்களை அனுசரிச்சி போனா கூடுதல் லாபம் கிடைக்கும். இன்னிக்கு சந்திரன் உங்க ராசிக்கு ரெண்டாவது இடத்துல இருக்குறகுனால ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் பாதிப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா இருந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு உங்க குடும்பத்துல மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். புதுசா பிசினஸ் பண்றதுக்கு போட்டு வச்சிருந்த ப்ளான் இன்னிக்கு நல்லவிதமா நடக்கும். பசங்க வழியில நல்ல செய்திங்க உங்க காதுக்கு வரும். வேலை பாக்குறவங்களுக்கு உழைப்புக்கேத்த பலன் நிச்சயம் கிடைச்சிடும். வெளியில கொடுத்த கடனும் வசூலாகிடும். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மக்கர் பண்றதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. கவனமா இருந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

கடகம்

கடகம்

உத்தியோகத்துல இருக்குறவங்க இன்னிக்கு கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லதுங்க. எதிர்பாத்துகிட்டு இருந்த உதவியும் இன்னிக்கு கிடைச்சிடும். நீங்க எடுக்குற எல்லாவித முயற்சிங்களுக்கும் ஃபேமிலி மெம்பர்ஸும் சப்போர்ட் பண்ணுவாங்க. இன்னிக்கு உங்க ராசிக்கு 12ஆவது விட்டுல சந்திரன் உக்காந்துட்டு இருக்குறதுனால, ஹெல்த் கண்டிஷனும் கொஞ்சம் டல்லாதான் இருக்கும். கல்யாணம் சம்பந்தமாக எடுக்குற சுப முயற்சிங்கள்ல முட்டுக்கட்டை விழலாம். கவனமா நடந்துக்குறது நல்லதுங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : இரவு 7:30 முதல் இரவு 10:05 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு உழைப்புக்கு ஏத்த பலன் கிடைச்சிடும். அதோட சம்பளமும் கூடிடும். சொந்தக்காரங்க வழியில நல்ல செய்திங்க உங்க காதுக்கு எட்டிடும். குடும்பத்துலயும் ஒற்றுமை கூடிடும். பிசினஸ்லயும் லாபம் அமோகமா இருக்கும். இன்னிக்கு எந்த ஒரு காரியத்தை தொட்டாலும் அதுல வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 8:20 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு பிசினஸ் டெவலப் பண்றதுக்கு எடுக்குற முயற்சிங்களுக்கு தகுந்த பலன் கிடைச்சிடும். குடும்பத்துல பெண்களுக்கு சந்தோஷம் கூடிடும். அதோட ஓற்றுமையும் அதிகரிச்சிடும். எதிர்பார்க்காம மனசு சந்தோஷப்படுற மாதிரியான நல்ல செய்திங்க வந்துடும். மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு ரொம்பவே அருமையான நாளா அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : சஃப்ரூன்

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 1:00 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசிக்காரங்களுக்கு இது வரைக்கும் வராத பழைய பாக்கிங்க இன்னிக்கு கைக்கு வந்து சேரும். பசங்களோட படிப்புலயும் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். இன்னிக்கு உங்களுக்கு திடீர்னு பணவரத்து இருக்கும். குடும்பத்துல பெரியவங்களோட மனசுலயும் இடம் பிடிப்பீங்க. கொரோனா பீதி இருக்குற இந்த நேரத்துல வெளியூர் பிரயாணத்தை கொஞ்சம் ஒத்தி போடுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, எந்த வேலையை செஞ்சாலும் தடங்கல், இடைஞ்சல் உண்டாகும். குடும்பத்துல இருக்குறவங்க கூடயும் அநாவசியமா வாக்குவாதம் வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. கூடவே எதிர்பாக்காம திடீர் செலவுங்களும் வந்துடலாம். அதனால கொடுக்கல் வாங்கல்ல ரொம்பவே கவனமா இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : முற்பகல் 10:00 முதல் பிற்பகல் 1:30 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க குடும்பத்துல சுபச் செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. பிசினஸ் சம்பந்தமான பிரச்சனைங்களும் குறைஞ்சிடும். கூடவே கையிருப்புல உள்ள ஸ்டாக்கும் வித்து தீந்துடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரியோட பாராட்டு கிடைக்கும். கூடப்பொறந்தவங்களோட ஹெல்ப்பும் கிடைக்கும். உங்க பொருளாதார நிலைமையும் கொஞ்சம் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 23

சாதகமான நேரம் : பிற்பகல் 3:30 முதல் இரவு 7:00 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு பண வரத்து தாராளமா இருக்கும். கல்யாண பேச்சுவார்த்தையில நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். குடும்பத்துலயும் சந்தோஷப்படுற மாதிரியான சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்குது. கடன் பிரச்சனைங்களும் காணாம போயிடும். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஹெல்த் கண்டிஷனம் அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 11:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு குடும்பத்துல கணவன் மனைவிக்கு நடுவுல சண்டை சச்சரவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்கிறது நல்லது. அனுபவசாலிங்களோட ஆலோசனையை கேட்டு நடந்துக்கிட்டா பிசினஸ்ல லாபம் கூடுறதுக்கு வாய்ப்பிருக்கு. உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க சப்போர்ட்டிவா இருப்பாங்க. பசங்களோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. கடன் தொந்தரவு குறைஞ்சிடும். இன்னிக்கு உங்க பொருளாதார நிலைமையும் சுமாராதான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்க கிட்ட அனுசரிச்சி போறது நல்லதுங்க. அதோட கோவில் குளத்துக்கும் போய்ட்டு வந்தா சிறப்பா இருக்கும். பண வரத்து இன்னிக்கு கொஞ்சம் மந்தமா தான் இருக்கம். அதனால கொஞ்சம் சிக்கனமா செலவு பண்றது நல்லது. உத்தியோகத்துலயும் திடீர்னு பிரச்சனைங்க முளைக்கும். கவனமா நடந்துக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 39

சாதகமான நேரம் : காலை 9:50 முதல் பிற்பகல் 2:15 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, March 31, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion