For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு இந்த ராசிக்காரங்க கோபத்தை அடக்குறது நல்லது... இல்லனா பெரிய இழப்பை சந்திக்க வாய்ப்பிருக்கு!

|

தினமும் காலையில் வெளியே செல்லும் முன் அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால் அது அவர்களின் அன்றைய ராசிபலன்தான். ஒவ்வொரு நாளுமே நமக்கு சவால்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். சவால்களை சாதனையாக மாற்ற வரப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

எதிர்காலத்தை அறிந்து கொள்ள அனைவருக்கும் இருக்கும் எளிதான வழி நம்முடைய ராசிபலன்களை தெரிந்து வைத்துக்கொள்வதாகும். சில ராசிகளுக்கு இன்று சவால்கள் காத்திருக்கும், சில ராசிகளுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும். உங்கள் ராசிக்கு காத்திருப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மேஷம்

மேஷம்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படலாம். உங்கள் இயல்பை சிறிது மாற்ற முயற்சித்தால், உங்கள் உறவு இனிமையாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். நீங்கள் வியாபாரம் செய்தால், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் வணிக முடிவை எடுக்கவும். இன்று, பணத்தின் அடிப்படையில் நீங்கள் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் நிறைய கடினப் போராட்டங்களுக்குப் பிறகு பணம் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்களுக்கு சாதகமான சில முடிவுகள் எட்டப்படலாம். உங்கள் நல்ல குணங்கள் பாராட்டப்படும், மேலும் உங்கள் நம்பகத்தன்மை அதிகரிக்கும். அலுவலகத்தில் பொறுமை காப்பது நல்லது. வணிகர்கள் இன்று எதிர்பாராத இடத்தில் இருந்து இலாபத்தைப் பெறுவார்கள். இன்று நண்பர்களுடன் மிகவும் வேடிக்கையான நாளாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உறவில் அன்பு அதிகரிக்கும். நீங்கள் இன்று மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 முதல் 5:55 மணி வரை

 மிதுனம்

மிதுனம்

வர்த்தகர்கள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். திடீரென்று உங்கள் வேலைகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் இன்று உங்களின் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்களின் சில முக்கிய கவலைகள் இன்று முடிவுக்கு வரும். திருமணமானவர்கள் உங்கள் மனைவியுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உடல்நலம் அடிப்படையில் நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

MOST READ: நாம் வேஸ்ட்டென நினைக்கும் அரிசி வேகவைத்த நீரால் நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

கடகம்

கடகம்

நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, மனக்கலக்கம் ஏற்படும். இன்று நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு நிதி உதவி கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் ஏமாற்றமடையக்கூடும். மனரீதியாக வலுவாக இருக்க, உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் கலைத்துறையுடன் தொடர்புடையவராக இருந்தால், இன்று நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். சில வீட்டு உறுப்பினர்கள் இன்று உங்களிடம் கோபமாக இருக்கலாம். எந்த சூழ்நிலையிலும் உங்கள் பொறுமையை இழக்காதீர்கள். உடல்நலம் குறைவது உங்கள் சிரமங்களை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

 சிம்மம்

சிம்மம்

நீங்கள் நீண்ட காலமாக போராடி வந்த பணி, இன்று நிறைவடையும் வாய்ப்பு அதிகம். நீங்கள் வர்த்தகம் செய்தால் பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர, எந்தவொரு புதிய திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் நன்றாக சிந்திப்பது நல்லது. வேலை செய்பவர்கள் இன்று அலுவலகத்தில் துன்பங்களை சந்திக்க நேரிடும். உங்கள் இயல்பில் நீங்கள் தாழ்மையுடன் இருந்தால் அது உங்களுக்கு நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான சிறிய பிரச்சினைகளை கூட தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4: 00 மணி முதல் இரவு 9:20 மணி வரை

கன்னி

கன்னி

நீங்கள் வேலை செய்தால் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். மறுபுறம், வணிகர்களும் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் வணிகத்தை வளர்க்க முயற்சிப்பதில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும். நீண்ட காலமாக முடங்கியுள்ள கடன் இன்று திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 மணி முதல் 2:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று வேலையில் இருப்பவர்களுக்கு கலவையான முடிவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் தந்தையின் வியாபாரத்துடன் நீங்கள் இணைந்திருந்தால், இன்று நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். இருப்பினும், எந்தவொரு முக்கியமான வணிக முடிவுகளையும் எடுப்பதற்கு முன், உங்கள் தந்தையின் கருத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். பணத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள், அலட்சியம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

MOST READ: இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில பயத்துக்கு இடமே இல்லையாம்... தைரியம் இவங்க இரத்தத்துலயே இருக்காம்...!

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று மாணவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். கிரகங்களின் நிலைகள் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வை முடித்திருந்தால், எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறலாம். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் லாபத்தைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வீட்டின் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், மேலும் நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:15 முதல் 2:20 மணி வரை

தனுசு

தனுசு

நீங்கள் மனஅழுத்தமாக இருந்தால், உங்கள் பொறுப்புகளில் நீங்கள் சரியாக கவனம் செலுத்த முடியாது. நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்து உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவது நல்லது. நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், இன்று அலுவலகத்தில் உங்கள் எந்த வேலையும் முழுமையாக முடிக்காமல் விடாதீர்கள். வணிகத்தில் விரும்பிய முடிவுகளுக்கு, நீங்கள் சில திட்டங்களை உருவாக்க வேண்டும். இன்று பணத்தின் அடிப்படையில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் மருந்துகளுக்கு அதிக பணம் செலவழிக்கலாம். உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம்

மகரம்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்கவும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உங்கள் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று மனஅழுத்தம் உங்களின் வேலையை பெரிதும் பாதிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறவில்லை என்றால் தைரியத்தை இழந்து விடாதீர்கள். உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள், விரைவில் நிலைமை உங்களுக்கு ஆதரவாக மாறும். வேலை செய்யும் மக்களுக்கு நாள் நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்பையும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் நல்ல பலனை அளிக்கும். பணத்தின் அடிப்படையில் நாள் சாதாரணமாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும், உங்களுக்குள் இருக்கும் புரிதல் மேலும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

MOST READ: நீங்கள் எந்த எண்ணெயில் சமைக்கிறீங்க? நீங்க சமைக்கிற எண்ணெய்களில் இருக்கும் ஆபத்து என்ன தெரியுமா?

மீனம்

மீனம்

இன்று வேலை முன்னணியில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். வணிகர்கள் இன்று சிறப்பான பலன்களை பெறுவார்கள். நீங்கள் வணிகக் கடன் எடுக்க நினைத்தால், இன்று விண்ணப்பிக்க ஒரு நல்ல நாள். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் சுவாரஸ்யமாக இருக்கும். இன்று உங்கள் பணிகள் அனைத்தும் வேகமாக முடிக்கப்படும். பணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று நீங்கள் பணத்தைப் பற்றி ஒருவரிடம் தகராறு செய்யலாம். நீங்கள் மிகவும் கோபமடைந்தால், நீங்கள் இழப்பை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:05 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 30th July 2020 Thursday In Tamil

Check out the daily horoscope for 30th July 2020 Thursday in Tamil.
Story first published: Thursday, July 30, 2020, 5:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more