குரு பார்வையால இந்த ராசிக்காரங்க ரொம்ப குதூகலமாக இருக்கப் போறாங்க...

வியாழக்கிழமை குரு வாரம். இன்றைக்கு குருவின் பார்வையால் சில ராசிக்காரங்களுக்கு சந்தோஷம் பொங்கும். பண வருமானம் வரும். இதோ உங்க தினசரி ராசி பலனை படிங்க உங்க நிதி நிலைமை, காதல் விவகாரங்கள் உடல் ஆரோக்கியம்

வியாழக்கிழமை குரு வாரம். இன்றைக்கு குருவின் பார்வையால் சில ராசிக்காரங்களுக்கு சந்தோஷம் பொங்கும். பண வருமானம் வரும். இதோ உங்க தினசரி ராசி பலனை படிங்க உங்க நிதி நிலைமை, காதல் விவகாரங்கள் உடல் ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் மீது குருவின் பார்வை விழுகிறது. சுக்கிரனும் ரொம்ப சாதகமாக இருக்கிறார். மேரேஜ் லைஃப்ல இன்னிக்கு நல்ல விஷயங்கள் நடக்கலாம். உங்க ஒய்ஃப் பழைசை எல்லாம் மறந்துட்டு உங்ககிட்ட ரொம்ப அந்நியோன்யமா இருப்பாங்க. அதனால ஃபேமிலி லைஃப் ரொம்ப ஸ்மூத்தா நகரும். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். வேலை நெருக்கடி இருக்குறதுனால ரொம்ப டயர்டா ஃபீல் பண்ணுவீங்க. சில விஷயத்தை செய்ய நெனைச்சாலும் ஃபைனான்ஸ் பொசிஷன் அதுக்கு இடம் கொடுக்காது.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

சந்தோஷம் தரக்கூடிய நிலையில் சனிபகவான் இருக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சனி இருப்பதால் இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்க இன்க்ரிமெண்ட் பத்தி உங்க முதலாளி பேசுறதுக்கு வாய்ப்பிருக்கு. குரு உங்க இரண்டாது வீட்டினை பார்ப்பதால் பண வருமானம் அதிகமாக இருக்கும். பிசினஸ் பண்றவங்க எக்ஸ்போர்ட் பிசினஸ்ல முதலீடு பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல நீங்க கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. உங்க பெர்சனல் லைஃபையும் பிசினஸ் லைஃபையும் போட்டு குழப்பிக்காதீங்க. அது உங்க ஃபேமிலி லைஃபை பாதிக்கலாம். லவ் பண்றவங்க லவ் மேட்டரை வீட்டுல சொல்றதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. காதல் கல்யாணத்தில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 13

சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்

மிதுனம்

குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சனியும் சாதகமாக இருக்கிறார். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். நல்ல சாப்பாட்டை சாப்பிடுங்க. பணவரவும் நார்மலாவே இருக்கும். எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு வாய்ப்பு வந்தா நல்லா யோசனை பண்ணி காரியத்துல இறங்குங்க. இல்லேன்னா நீங்க ஏமாந்து போவீங்க. ஆஃபீஸ்ல இன்னிக்கு நிலைமை உங்களுக்கு ஃபேவராவே இருக்கும். குடும்பத்துலயும் சந்தோஷமும் அமைதியும் நிலைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்

கடகம்

குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாவது வீடான குடும்பம் தன ஸ்தானத்தின் மீது விழுகிறது. பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். இன்னிக்கு நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. குடும்பத்தோட பொழுது போக்குறதுக்கும் டைம் கிடைக்கும். அது உங்களுக்கும் மறக்க முடியாத அனுபவமா இருக்கும். ஒய்ஃபும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. படிக்கிற பசங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். படிப்புல ஆர்வம் கூடிடும். இன்னிக்கு நல்ல விஷயத்துக்காக பணத்தை செலவு பண்றதுக்கு தயங்க மாட்டீங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க தன்னோட டேலண்ட்டை ப்ரூஃப் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

சிம்மம்

சிம்மம்

குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சனியும் சந்தோஷத்தை தரப்போகிறார். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லபடியா விடிஞ்சிருக்கு. ப்ரமோஷனுக்கு வாய்ப்பிருக்கு. வேலையில்லாதவங்களுக்கு புது வேலை கிடைக்கலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அமோகமான நாளா இருக்கும். லாபம் கொட்டும். ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இருக்கும். மேரேஜ் லைஃப்லயும் பிரச்சனை இருக்காது. ஒய்ஃப் ஹெல்த் கண்டிஷனைப் பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கன்னி

கன்னி

இன்றைக்கு உங்களுக்கு சாதாரணமான நாள்தான். வீட்டுப் பிரச்சனை முடிவுக்கு வரும். குடும்பத்துக்குள்ள நடக்குற வாக்குவாதம் இன்னிக்கு முடிஞ்சிடும். அதனால ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. உங்க சந்தோஷத்துக்காக யாருக்காவது கடன் கொடுக்கலாம். மேரேஜ் லைஃபும் ரொம்பவே ஸ்மூத்தா நகரும். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். இன்னிக்கு ஆஃபீஸ்ல கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. கூட வேலை செய்யுறவங்க உங்களைப் பத்தி தப்பான செய்தியை பரப்பலாம், கவனமா இருந்து வேலையை மட்டும் பாருங்க. முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்

துலாம்

உங்க ராசிக்கு இரண்டாவது வீட்டில் செவ்வாய் இருப்பதால் நீங்க ரொம்ப கவனமாக இருங்க. கார சாரமாக பேசி பிரச்சினையில மாட்டிக்காதீங்க. இன்னிக்கு வீட்டு பிரச்சனையை தீர்க்குறதுல உங்க ஒய்ஃப் ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. அதனால அவங்களை சந்தேகப்படுறதை அவாய்ட் பண்ணுங்க. இல்லேன்னா உங்களுக்கு தான் சிக்கல். பிசினஸ் பண்றவங்களுக்கு சிக்கல் வர வாய்ப்பிருக்கு. கவனமா இருக்குறது நல்லது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு சாதாரண நாள் தான். கிரக நிலைகளும் உங்களுக்கு சாதகமா இருக்குறதுனால ரொம்ப நாளா வராம இருந்த பணம் இன்னிக்கு கைக்கு வந்து சேரும். அதனால ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

உங்க ராசிக்கு இன்னைக்கு சந்தோஷமான நாள். சனி சாதகமாக இருக்கிறார். குரு இரண்டா வீட்டில் இருப்பதால் பண வருமானம் மனதில் உற்சாகத்தை தரும். இன்னிக்கு குடும்பத்துல அமைதியும் சந்தோஷமும் நீடிக்கும். உங்க ஒய்ஃபை சந்தேகப்படுறதை அவாய்ட் பண்றது நல்லது. அதனால உங்க ஒய்ஃபும் உங்க கிட்ட ரொம்ப அந்நியோன்யமா இருப்பாங்க. லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு முக்கியமான நாள் தான். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை

தனுசு

தனுசு

குரு உங்க ராசியில இருக்கிறார். ராசி நாதன் ஆட்சி பெற்றிருப்பது சந்தோஷத்தை அதிகமாகும். சனி உங்களுக்கு சாதகமாக இல்லை. ஏழரை சனி சங்கடத்தை தரும். சில சமயத்துல நீங்க எடுக்குற முடிவுகள் உங்க கைமீறி போயிடும். அந்த சமயத்துல அது உங்க குடும்பத்தையும் பாதிக்க வாய்ப்பிருக்கு. அந்த நேரத்துல நீங்க யார் மனசையும் கஷ்டப்படுத்தாம புத்திசாலித்தனமா நிதானமா நடந்துக்கோங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். இருந்தாலும் அவசரப்படாதீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சின்னதா இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மகரம்

மகரம்

ஏழரை சனி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கும் என்றாலும் லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கும். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சி நடந்துக்குவீங்க. கல்யாணம் ஆனவங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். உங்க பிரச்சனை எல்லாத்தையும் உங்க ஒய்ஃப் தீர்த்து வச்சிடுவாங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். அதனால வீட்டுக்கு தேவையானதை வாங்குவீங்க. ஆஃபீஸ்லயும் இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். புரமோசன் பத்தி நீங்க உங்க ஆபிஸ்ல பேசுங்க நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்

கும்பம்

உங்க ராசியில் சுக்கிரன் இருக்கிறார். குரு லாபத்தில் உட்கார்ந்திருப்பதால் நிறைய லாபத்தை கொடுப்பார். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கும். ப்ளட் ப்ரஷர் இருக்குறவங்க கவனமா இருக்குறது நல்லது. டென்ஷனை குறைச்சிக்கோங்க. ரொம்ப நாளா இருந்துவந்த கடன் பிரச்சனை இன்னிக்கு சால்வ் ஆகிடும். இன்னிக்கு ஆஃபீஸ்ல சந்தோஷமாக இருப்பீங்க. இன்னிக்கு உங்க குடும்ப வாழ்க்கையும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

மீனம்

மீனம்

குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பண வரவு நல்லா இருக்கும். சங்கடங்கள் தீரும் நாள் சந்தோஷத்தை தரும். இன்னிக்கு புதுசா ஏதாவது பண்றதா இருந்தா கொஞ்சம் வெய்ட் பண்றது நல்லது. வேற வேலைக்கு ட்ரை பண்றீங்கன்னா, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்குறது நல்லதில்லை. ஃபைனான்ஸ் விஷயத்துலயும் கொஞ்சம் கவனமா இருங்க. அவசரப்பட்டு எதுலயும் இண்வெஸ்ட் பண்ணாதீங்க. செலவு பண்றதை கண்ட்ரோல் பண்ணுங்க. நாள் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெருன்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, January 30, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion