Latest Updates
-
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இன்னைக்கு யாருக்கெல்லாம் பணம் வரும், யரெல்லாம் டென்சன் ஆவாங்க தெரியுமா?
இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா? சில ராசிக்காரங்க அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பாங்க. உங்க ராசி என்ன நீங்க இன்றைய ராசி பலனை படிச்சீங்கன்னா உங்க எல்லா கேள்விகளுக்கும் வி
இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா? சில ராசிக்காரங்க அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பாங்க. உங்க ராசி என்ன நீங்க இன்றைய ராசி பலனை படிச்சீங்கன்னா உங்க எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

மேஷம்
பண விஷயத்தை பொருத்தவரை இன்னிக்கு அதிர்ஷ்டமான நாளா இருக்கும். மேரேஜ் லைஃப் சந்தோஷமா இருக்கும். குடும்பத்துல எல்லோரும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. குழந்தைங்க கூட பொழுதுபோக்குறதுக்கு டைம் கிடைக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு சாதாரண நாள் தான். பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு வெளியூர் பிரயாணம் பண்ண வாய்ப்பிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளும் தோல்வியா முடியலாம். வெட்டி பேச்சு பேசுறதை நிறுத்திட்டு உங்க வேலைய மட்டும் பாத்தா நல்லது. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு வெற்றி கிடைக்கலாம். வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா அதை தள்ளிப்போடுறது நல்லது. வண்டி வாகனத்துல போகும்போதும் கவனமா இருக்கணும். ஃபேமிலி லைஃப் ரொம்ப அமைதியா போகும். பணவிஷயத்தை பொருத்த வரைக்கும் எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரம் இது.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உங்க ஒய்ஃப் கூட இருந்து வந்த ஊடல் முடிஞ்சி கூடல் அதிகரிக்க வாய்ப்பிருக்கும். உங்க குழந்தைங்க சைடுல இருந்து சந்தோஷமான செய்தி வரலாம். உங்க தனிப்பட்ட பிரச்சனையில ரொம்ப பிஸியா இருப்பீங்க. வீட்டு வேலையிலயும் ரொம்பவே பிஸியாவே இருப்பீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அருமையான நாளா இருக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு ரொம்ப சாதாரண நாளாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 16
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:00 மணிவரை

கடகம்
இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்களும், அப்பா அம்மாவும் உங்களை புரிஞ்சிக்காம நடந்துக்குவாங்க. அதனால உங்க பழக்க வழக்கத்தை கொஞ்சம் மாத்திக்கிறது நல்லது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு வேலை ரொம்ப ஜாஸ்தி இருக்காது. மேரேஜ் லைஃபும் ஸ்மூத்தா போகும். ஒய்ஃப், குழந்தைங்க உங்ககிட்ட ரொம்பவே அந்நியோன்யமா இருப்பாங்க. வேலை தேடுறவங்களுக்கு இன்னிக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கும். லவ் பண்றவங்களுக்கு நடுவுல சண்டை வர்றதுக்கு இன்னிக்கு வாய்ப்பிருக்கு. அதனால கவனமா நடந்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அதிர்ஷ்ட எண் : 48
சாதகமான நேரம் : இரவு 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

சிம்மம்
ஃபைனான்ஸ் விஷயத்துல இன்னிக்கு நல்லது நடக்கும். எக்ஸ்ட்ராவா பணம் வர்றதுக்கும் வாய்ப்பிருக்கும். புதுசா வேலைக்கோ அல்லது பிசினஸ் பண்றதுக்கோ முயற்சி பண்ணினா இன்னிக்கு அது சக்ஸஸ்ஃபுல்லா முடியும். இன்னிக்கு ஒய்ஃப் கூட சின்னதா சண்டை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இருந்தாலும் அது சீக்கிரமே சரியாகி நெருக்கம் கூடிடும். முக்கிய முடிவு எடுக்குறதா இருந்தா யோசனை பண்ணி எடுக்குறது நல்லது. இல்லேன்னா ஃபெய்லியராக வாய்ப்பிருக்கு. அதனால பொறுமையா இருங்க. புது ஆளுங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:25 மணிவரை

கன்னி
வெளியாளுங்களை உங்க மேரேஜ் லைஃப்ல தலையிட அனுமதிக்காதீங்க. அது உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பிரச்சனையையும் பிரிவையும் உண்டாக்க வாய்ப்பிருக்கு. எதுவா இருந்தாலும் நீங்களே பேசி சரிபண்ண பாருங்க. அது தான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அருமையான நாளா இருக்கும். படிக்கிற பசங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். மூதாதையர் சொத்து விஷயத்துல உங்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு கூடுதல் வேலையினால பிஸியாவே ஃபீல் பண்ணுவீங்க. ஆஃபீஸ்லயும் வேலையை இழுத்து போட்டு வேலை செய்யுறதுனால டயர்டா ஃபீல் பண்ணுவீங்க. பிசினஸ் பண்றவங்க குழப்பத்துல இருப்பீங்க. அதனால எதையும் யோசிக்காம முடிவெடுக்க வேண்டாம். குடும்பத்துலயும் பிரச்சனை உண்டாகி சின்ன சண்டை வர்றதுக்கு வாய்ப்பிருக்கும். உங்க ஒய்ஃபும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணாம ஒதுங்கியே இருப்பாங்க. அதனால கவனமா நடந்துக்கோங்க. லவ் பண்றவங்க இன்னிக்கு கவனமா நடந்துக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு உங்க சொந்தக்காரங்க உங்க வீட்டுக்கு வர்றதுனால வீடே கலகலப்பா மாறிடும். கூடப்பிறந்தவங்களும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. அதனால அவங்க கூட சேர்ந்துகிட்டு புதுசா பிசினஸ் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு அமோகமா இருக்கும். இன்னிக்கு ஆஃபீஸ் போறவங்க சீக்கிரம் கிளம்பி போறது நல்லது. எண்டெர்டெய்ன் பண்றதுக்கும் சான்ஸ் கிடைக்கும். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்குறதுனால ரொம்ப நிம்மதியா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
நீங்க இன்னிக்கு உங்க ஒய்ஃப் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு நிறைய டைம் கிடைக்கும். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். லவ் மேட்டரை வீட்டுல பேசுறதுக்கு இன்னிக்கு சரியான நாள் தான். இன்னிக்கு ஆஃபீஸ்ல வேலை உங்களை கடுப்படிக்க வாய்ப்பிருக்கு. அதோடு எக்ஸ்ட்ரா வேலையும் சேர்ந்து டெண்ஷனை கொடுக்கும். ஆனாலும் நீங்க ரொம்ப அமைதியா, புத்திசாலித்தனா இருந்து எல்லா வேலையையும் முடிக்கிறது நல்லது. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப நல்லா இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் நார்மலாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் இரவு 7:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு உங்களை பெத்தவங்களோட ஹெல்த் கண்டிஷன் உங்களை ரொம்பவே கவலைப்பட வைக்கும். அதோட வீட்டுல இருக்குறவங்களும் பழசை போட்டு கிளறுரதுனால சண்டை சச்சரவு வர்றதுக்கும் வாய்ப்பிருக்கும். அதனால டெண்ஷனாகாம கவனமா நடந்துக்கோங்க. வீட்டு பெரியவங்களை மதிக்க கத்துக்கோங்க. கோயில் குளத்துக்கு போறதுக்கு வாய்ப்பிருக்கும். ஆஃபீஸ்லயும் ரொம்பவே பிஸியா இருப்பீங்க. கூடவே, உங்க சீனியரும் ரொம்பவே கடுப்படிப்பாரு. எதுக்கும் வேற வேலை தேடிக்குறது நல்லது. திடீர்னு பணம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : காலை 9:40 முதல் மாலை 5:30 மணிவரை

கும்பம்
இன்னிக்கு உங்களுக்கு வேலை நெருக்கடி ஜாஸ்தியாவே இருக்கும். கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும் ஜெயிக்க முடியலையேன்னு கவலைப்படாதீங்க. வீட்டுலயும் சின்ன சின்ன சிக்கல் வந்து சேரலாம். குடும்பத்துல இருக்குறவங்க முணுமுணுக்குறது உங்களுக்கு தொந்தரவா இருக்கலாம். அதனால ரொம்ப பொறுமையா இருக்குறது நல்லது. இருந்தாலும் உங்க ஒய்ஃப் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 34
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 4:25 மணிவரை

மீனம்
இன்னிக்கு எதிர்பாராத விதமா பணம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால குடும்பத்துலயும் சந்தோஷம் கூடிடும். குடும்பத்தோட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் சான்ஸ் கிடைக்கும். உங்களுக்கு சப்போர்ட்டா ஒரு விஐபி இருக்குறது தெம்பா ஃபீல் பண்ணுவீங்க. ஆபீஸ் வேலையை பாக்கி வைக்காம முடிக்க பாருங்க. பிசினஸ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். லாபம் அமோகமா கிடைக்கலாம். வெளியிடத்துலயும் உங்களோட மதிப்பும் மரியாதையும் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 34
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:55 மணிவரை



Click it and Unblock the Notifications











