இந்த ராசிக்காரங்கலாம் பணத்தை யாருக்கும் கடன் கொடுக்காதீங்க...

இன்று பிப்ரவரி 29 ஆம் நாள் சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.

இன்று பிப்ரவரி 29 ஆம் நாள் சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். இன்று காதலான நாள் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும் அக்கறையும் அதிகரிக்கும். பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

ராசியான நிறம்: க்ரீம்

ராசியான எண்: 7

ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்க விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்க பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆடம்பர பொருட்களை வாங்க வேண்டாம்.அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். மனதில் சின்னச் சின்ன குழப்பங்கள் உருவாகும் இன்று ஆலய தரிசனம் மன அமைதியை தரும்.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 4

ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழிலில் லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 5

ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

ராசியான நிறம்: ப்ரௌன்

ராசியான எண்: 37

ராசியான நேரம்: பிற்பகல் 4.30 மணி - இரவு 11 மணி

சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். உடன்பிறப்புகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 20

ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 10 மணி

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. தேவையில்லாத வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணம் விசயங்களில் கவனம் தேவை. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்கவும். இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். மன அமைதி தேவை.

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 18

ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இன்று காதலான நாள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மகிழ்ச்சியில் முடியும். இன்று குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளால் உங்களின் மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க நல்ல நாளாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

ராசியான நிறம்: ஆரஞ்ச்

ராசியான எண்: 14

ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

ராசியான நிறம்: பச்சை

ராசியான எண்: 15

ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

ராசியான நிறம்: இளம் சிவப்பு

ராசியான எண்: 6

ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி கிட்டும். மனதில் நிம்மதி குறையும். இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.

ராசியான நிறம்: ப்ளூ

ராசியான எண்: 2

ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் மூன்றாவது வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 4

ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

மீனம்

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அலுவலகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இன்று நீங்கள் திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்க சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். திடீர் பணவரவு மனதில் மகிழ்ச்சியை தரும்.

ராசியான நிறம்: மெரூன்

ராசியான எண்: 25

ராசியான நேரம்: காலை 4.20 பிற்பகல் 12 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, February 29, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion