Just In
- 52 min ago
அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...! உங்க ராசிக்கு எப்படி?
- 13 hrs ago
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- 15 hrs ago
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- 19 hrs ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
Don't Miss
- News
மார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள்
- Finance
இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!
- Automobiles
மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...
- Sports
வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி!
- Movies
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Technology
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் கோபப்படாதீங்க...
இன்னைக்கு எந்த ராசி நட்சத்திரக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், அந்த அதிர்ஷ்டத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் இதோ இன்றைய ராசி பலன்களை படிங்க உங்களுக்கு நல்லது நடக்குதான்னு தெரிஞ்சுக்கலாம்.

மேஷம்
உங்க ஃபைனான்ஸ் பொசிஷனை இம்ப்ரூப் பண்ணனும்னா இன்னும் கொஞ்சம் கூடுதலா வேலை பாக்கணும். ஆஃபீஸ்ல உங்க வேலையை கொஞ்சம் பொறுப்பா கவனிச்சிக்கோங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு டபுள் பெனிஃபிட் கிடைக்கும். ஒய்ஃப் கூட இருந்த பிரச்சனை சரியாக முயற்சி எடுங்க. நிலைமை கைமீறி போக விட்டுடாதீங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இல்லை. வயிறு சம்பந்தமான பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : பிற்பகல் 2:15 முதல் இரவு 7:20 மணிவரை

ரிஷபம்
மேரேஜ் லைஃப்ல அந்நியோன்யம் கூடனும்னா, உங்க ஒய்ஃப் கூட இன்னும் கொஞ்சம் நெருக்கமா இருங்க. மனசு விட்டு பேசுறது நல்லது. உங்க கோவத்தை கண்ட்ரோல் பண்ணலைன்னா சிக்கல் உண்டாகலாம். இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷன் மந்தமா தான் இருக்கும். உங்களை பெத்தவங்களோட ஹெல்த் கண்டிஷனைப் பத்தி கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும். ஆஃபீஸ்லயும் இன்னிக்கு கொடுத்த வேலையை உருப்படியா செஞ்சி முடிக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உங்க ஃப்ரண்ட்ஸுங்க உதவியோட உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் நார்மலுக்கு வரும். சமீபத்துல போட்ட முதல்ல இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. மேரேஜ் லைஃப்ல சந்தோஷமும் நிம்மதியும் கூடிடும். இன்னிக்கு ஒய்ஃப் கூட கூடுதலா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. ஆஃபீஸ்ல உங்க சீனியர் கூட முக்கியமான விஷயத்தை பத்தி பேசுறதுக்கும் வாய்ப்பிருக்கு. ஹெல்த் கண்டிஷனும் நார்மலாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் இரவு 9:15 மணிவரை

கடகம்
இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்களுக்கு நல்ல செய்தி காத்திட்டு இருக்கு. உங்க வேலையை பார்த்து உங்க சீனியர் பாராட்டுவார். பிசினஸிலும் இன்னிக்கு லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஃபைனான்ஸ் பொசிஷனை டெவலப் பண்றதுக்கு நீங்க எடுக்குற முயற்சி கை கொடுக்கும். ஒய்ஃபோட அன்பும் சப்போர்ட்டும் இன்னும் இன்னும் கூடிடும். இன்னிக்கு ஒரு முக்கியமான ஆளை மீட் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கைப்ளூ
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு மேரேஜ் லைஃப்ல சின்னதா சண்டை வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. அது உங்க ஆஃபீஸ் வேலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது. உங்க வேலையைப் பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க. அது சீக்கிரத்துல சரியாகிடும். கவலை எல்லாத்தையும் விட்டுத்தள்ளுங்க. இல்லேன்னா உங்க உடம்புக்குதான் கெடுதல். கவனமா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் மாலை 6:30 மணிவரை

கன்னி
இன்னிக்கு ஆஃபீஸ்ல நிலைமை உங்களுக்கு ஃபேவராவே இருக்கும். அதுக்காக ரொம்பவே அசால்ட்டா இருந்து செய்யிற வேலையில கோட்டை விட்டுடாதீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. லவ் பண்றவங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலும், டயத்தை கீப்அப் பண்றது நல்லது. மேரேஜ் லைஃப் இன்னிக்கு நார்மலா தான் இருக்கும். ஒய்ஃப் கூட நிம்மதியா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. எண்ணெய் பலகாரம் சாப்பிடுறதை அவாய்ட் பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 9:20 மணிவரை

துலாம்
சமீப காலமா உங்க ஃபைனான்ஸ் பொசிஷனை இம்ப்ரூவ் பண்றதுக்கு எடுத்துட்டு வந்த முயற்சி இன்னிக்கு பலனை கொடுத்து, உங்க வருமானமும் கூடிடும். ஆஃபீஸ்ல உங்க வேலையை பாத்துட்டு உங்க சீனியர் திருப்தியாகிடுவார். மேரேஜ் லைஃப்ல கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. படிக்கிற பசங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். ஹையர் எஜுகேஷன் படிக்கிறவங்களுக்கு உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கலாம். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். யோகா, தியானம் பண்றது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 7:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு சில புது அனுபவம் கிடைக்க வாய்ப்பிருக்கு. உங்க மனசை அமைதியா வச்சிருந்தீங்கன்னா நீங்க எடுக்குற முயற்சிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கலாம். ஆஃபீஸ்ல உங்களுக்கு கூடுதலா பொறுப்பு கொடுக்க வாய்ப்பிருக்கு. கூட வேலை பார்க்கிறவங்களோட ஹெல்ப்னால அந்த வேலையை முடிச்சி காட்டிடுவீங்க. ஃமேரேஜ் லைஃப்ல சின்னதா பிரச்சனை வர வாய்ப்பிருக்குது. யார்கிட்டயும் பாகுபாடு காட்டாதீங்க. இன்னிக்கு உங்க குழந்தைக்கு சின்னதா பிரச்சனை வர வாய்ப்பிருக்குது. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

தனுசு
ஆஃபீஸ்ல இன்னிக்கு எந்த வம்பு தும்புக்கும் போகாம உங்க வேலையை மட்டும் பாக்குறது நல்லது. இல்லேன்னா சிக்கலாகிடும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு அமோகமாவே இருக்கும். ஃபைனான்ஸ் பொசிஷனை இம்ப்ரூவ் பண்றதுக்கு எடுக்குற முயற்சிங்க கைகூடிடும். மேரேஜ் லைஃப் ஸ்மூத்தாவே நகரும். ஒய்ஃப் உங்களுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு கொஞ்சம் சிக்கலான நாள் தான். கவனமா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 43
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் இரவு 11:30 மணிவரை

மகரம்
இன்னிக்கு நாள் உங்களுக்கு அவ்வளவு நல்லதா விடியலை. கொஞ்சம் அமைதியா புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா ரொம்ப நல்லது. கோபப்பட்டீங்கன்னா ரொம்ப சிக்கலாகிடும். கவனமா நடந்துக்கோங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது. கல்யாணம் ஆனவங்க ஒய்ஃபை சந்தோசமா வச்சிக்கோங்க. சண்டை போட்டீங்கன்னா வீடு ரெண்டாகிடும். ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 10:55 மணிவரை

கும்பம்
இன்னிக்கு செய்யிற எல்லா வேலையும், பிசினஸும் நல்ல விதமா முடியும். பொது இடத்துல முக்கிய விஐபி ஒருத்தரை மீட் பண்றதுக்கான வாய்ப்பு இருக்கு. கவர்மெண்ட் சம்பந்தமா ஏதாச்சும் வேலை ரொம்ப நாளா பாக்கி இருந்தா, அது இன்னிக்கு நல்ல விதமா முடிஞ்சிடும். மேரேஜ் லைஃப் இன்னிக்கு நார்மலா இருக்கும். இன்னிக்கு உங்க ஒய்ஃப் ரொம்ப மனக்குழப்பத்துல இருப்பாங்க. செலவுங்க இன்னிக்கு ஜாஸ்தியாகிடும். செலவு பண்றதுக்கு முன்னாடி யோசனை பண்ணி செலவு பண்றது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் மாலை 6:00 மணிவரை

மீனம்
உங்களோட பிடிவாத குணம் இன்னிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கலாம். எல்லார் கிட்டயும் கொஞ்சம் பொறுமையா அன்பா நடந்துக்கோங்க. இல்லேன்னா பின்னாடி வருத்தப்படுவீங்க. இன்னிக்கு உழைப்புக்கு ஏத்த பலன் கிடைச்சி ஃபைனான்ஸ் பொசிஷன் கூடிடும். ஆஃபீஸ்ல கவனமா இருந்து எல்லா வேலையையும் முடிக்க பாருங்க. ஹெல்த் கண்டிஷன்ல ரொம்பவே அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 8:30 மணிவரை