Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...
இன்று பிப்ரவரி 28 ஆம் நாள் சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.
இன்று பிப்ரவரி 28 ஆம் நாள் சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும் புதிய கூட்டுத்தொழில் தொடங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். வேகம் வேண்டாம் நிதானமாக இருங்க. மன குழப்பத்தை தவிர்க்க தியானம் இருங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 5
ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

ரிஷபம்
சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களுடைய வேலையில் நிதானமாக இருங்கள். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் வரும். வீட்டில் விட்டுக்கொடுத்து போங்க. சண்டை சச்சரவுகள் நீங்கும். சொந்தக்காரர்களால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். ஆலய தரிசனம் மன அமைதியை தரும். காதல் வாழ்க்கை உங்களுக்கு கவலையை தரலாம். பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ராசியான நிறம்: பச்சை
ராசியான எண்: 15
ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

மிதுனம்
உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் தேடி வரும். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
ராசியான நிறம்: இளம் சிவப்பு
ராசியான எண்: 6
ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

கடகம்
உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
ராசியான நிறம்: மெரூன்
ராசியான எண்: 25
ராசியான நேரம்: காலை 4.20 பிற்பகல் 12 மணி

சிம்மம்
சந்திரன் இன்றைக்கு உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
ராசியான நிறம்: ப்ளூ
ராசியான எண்: 2
ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

கன்னி
சந்திரன் இன்றைய தினம் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது பயணங்களை தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் தேவை.
ராசியான நிறம்: வெள்ளை
ராசியான எண்: 18
ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்க ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். வேலை விசயமாக விலர் வெளியூர் பயணம் செல்வீர்கள். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல வளர்ச்சி உண்டாகும். கூட்டுத்தொழில் லாபத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை நீங்கி சந்தோஷம் அதிகமாகும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வங்கிக் கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். உங்களுக்கு இன்றைக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 4
ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்க பேச்சில் கவனமாக இருங்க கோபமாக பேச வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவி கிடைக்கும். இன்றைய தினம் உங்க குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரலாம். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ராசியான நிறம்: க்ரீம்
ராசியான எண்: 7
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக இருப்பது மூலம் பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் தேடி வரும்.
சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற சிக்கலை தவிர்க்கலாம். உங்க உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 20
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 10 மணி

கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வேலை விசயமாக நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகமாகும்.
ராசியான நிறம்: ஆரஞ்ச்
ராசியான எண்: 14
ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். இன்று பணவரவு சற்று குறைவாகவே இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சொந்த பந்தங்களுடன் விருந்து விஷேசம் என்று சென்று வருவீர்கள்.
ராசியான நிறம்: ப்ரௌன்
ராசியான எண்: 37
ராசியான நேரம்: பிற்பகல் 4.30 மணி - இரவு 11 மணி



Click it and Unblock the Notifications











