இன்றைய ராசிப்பலன் (27.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பின் பலனைப் பெற்றிடலாம்…

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 27 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 27 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 27th March 2021 Saturday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. எந்தவொரு பெரிய பிரச்சனையும் இன்று தீர்க்கப்படலாம். நிதி நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்கள் கடின உழைப்பின் நல்ல பலனைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். குறிப்பாக உடன்பிறப்புகளுடன், இன்று ஒரு சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை மதிக்கவும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். உங்கள் வரவிற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, அலட்சியம் ஆரோக்கியத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று வேலை முன்னணியில் நல்ல முடிவுகளை பெறலாம். உத்தியோகஸ்தர்கள், இன்று கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்க முடியும். வியாபாரிகள், பண விஷயத்தில், யாரையும் கண் மூடித்தனமாக நம்பாதீர்கள். எந்தவொரு முக்கியமான ஆவணத்திலும் அவசரமாக கையொப்பமிடுவதைத் தவிர்க்கவும். இன்று மர வர்த்தகர்கள் நன்றாக பயனடையலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, தந்தையின் உடல்நலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். முடிந்தால், இன்று மருத்துவரை அணுகுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் உறவு இணக்கமாக இருக்கும். அவர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். பணம் நல்ல நிலையில் இருக்கும். இன்று உங்களுக்காக விலையுயர்ந்த பொருளை வாங்கலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்டு நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:45 மணி வரை

மிதுனம்

மிதுனம்

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், கல்வியில் இருந்தவந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வரக்கூடும். ஊடகங்கள் மற்றும் அரசியலுடன் தொடர்புடையோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். பங்குச் சந்தையில் பணிபுரிவோர் நிதி ரீதியாக பயனடையலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். திடீரென்று பழைய பிரச்சனை ஒன்று மீண்டும் தலைத்தூக்கும். இன்று கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணை மீதான நம்பிக்கையை வலுப்படுத்த முயற்சி செய்யவும். வீண் சந்தேகங்கள் உங்கள் உறவில் கசப்பை அதிகரிக்கும். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை

கடகம்

கடகம்

இன்று அலுவலகத்தில் எந்தவொரு வேலையையும் அவசரமாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இன்று பெரிய தவறுகள் நிகழலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, நல்ல வாய்ப்பு கிடைக்கக்கூடும். வணிகர்களின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க முடியும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள், அவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையின் இன்பங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் சிறந்த புரிதல் இருக்கும். இன்று பொருளாதார முன்னணியில் விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இன்று மனதளவில் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்றைய நாளில் வீண் யோசனைகளைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற விவாதத்தில் பொன்னான நேரத்தை வீணாக்காவிட்டால் நல்லது. இன்று எதிர்பார்த்த முடிவுகளை வணிகர்கள் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குறிப்பாக, உங்கள் ரியல் எஸ்டேட் உடன் தொடர்புடையதாக இருந்தால், இன்று பெரிய வெற்றியைப் பெறலாம். நிதி நிலைமை மேம்படுத்த முடியும். பொருளாதார முடிவுகளை எப்போது சிந்தித்து எடுத்து வந்தால், விரைவில் நிதி நிலைமையில் பெரிய ஏற்றம் காணலாம். வீட்டின் சூழல் சாதாரணமாக இருக்கும். அன்புக்குரியவர்களுக்கு போதுமான நேரம் கொடுக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் பிற்பகல் 2:20 மணி வரை

கன்னி

கன்னி

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு வேலை செய்தால், எந்தவொரு மன அழுத்தமும் இல்லாமல் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். உணவகத்துடன் தொடர்புடைய வணிகர்களுக்கு இன்று ஒரு அற்புதமான நாளாக இருக்கப்போகிறது. எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வீட்டின் உறுப்பினருடன் சச்சரவு ஏற்படலாம். பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பினால், உங்கள் பக்கத்தை அமைதியாக எடுத்துரைக்க முயற்சிக்கவும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிப்பு இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தைப் பற்றி பேசுகையில், இன்று பழைய சிறிய கடனை திருப்பிச் செலுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் 12:25 மணி வரை

துலாம்

துலாம்

வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், இன்று அதிக பணிச்சுமை இருக்கும் சோம்பலை தவிர்த்து, முக்கியமான வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வணிகர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். குறிப்பாக, சமீபத்தில் புதிய வேலையைத் தொடங்கியவர்கள், கடினமாக உழைக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வருமானத்தை விட அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் கடினமான நடத்தை உங்களை பதற்றப்படுத்தும். சரியான நேரம் வரும்போது பேச்சுவார்த்தை நடத்தினால் உறவில கசப்பை நீக்கிடலாம். ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று திடீரென்று நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணம் மிகவும் இனிமையானதாக இருக்கும். பொருளாதார முன்னணியில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். திடீர் பண வரவால் பயனடையலாம். சமீபத்தில் நிதி இழப்பை சந்தித்திருந்தால், அதை ஈடுசெய்ய இன்று நல்ல வாய்ப்பைப் பெறலாம். வணிகர்கள் நன்றாக பயனடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எந்தவொரு புதிய பொறுப்பும் அலுவலகத்தில் கொடுக்கப்படலாம். உங்கள் முதலாளியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். இன்று வீட்டு உறுப்பினர்களுடன் சிறப்பாக நேரம் செலவிடுவீர்கள். இன்று குடும்பத்துடன் வெளியே செல்லலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, அதிகரிக்கும் சோர்வு காரணமாக சில சிக்கல்கள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

தனுசு

தனுசு

இன்று நீங்கள் ஆலயங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தால், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறிய விஷயங்கள் பெரிதாக மாற்றுவதைத் தவிர்க்கவும். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கவும். பணத்தின் அடிப்படையில் இன்று மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். ஒரு புதிய வருமானத்திற்கான ஆதாரத்தைப் பெறலாம். அலுவலகத்தில் சில ஊழியர்களுடன் முரண்பாடு ஏற்படலாம். முதலாளியின் முன்பு உங்கள் பெயரை கெடுக்க அவர்கள் முயற்சிக்கலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும். இன்று, போக்குவரத்தில் பணிபுரிவோர் அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உடல்நலம் பற்றி பேசினால், குளிர்ந்த பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை

மகரம்

மகரம்

உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதன் மூலம், மன குழப்பம் அகலும். மன அமைதியைப் பெறலாம். முக்கியமான பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். அலுலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு போட்டி அதிகரிக்கக்கூடும். அத்தகைய சூழலில், சிறப்பாக செயலாற்ற முயற்சிக்கவும். வணிகர்க்ள இன்று எந்தவொரு பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளையும் செய்யவே கூடாது. புது வேலை தொடங்க விரும்புவோருக்கு, இன்று நல்ல நாள் அல்ல. வாழ்க்கைத் துணையுடன் இன்று தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு இயல்பை விட சிறப்பாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று முதுகு வலி போன்றவற்றால் அவதிப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

கும்பம்

கும்பம்

நீண்டகால சொத்து பிரச்சனை இன்று முடிவுக்கு வர வலுவான வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக நீங்கள் நன்கு பயனடையலாம். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான இடைவெளியை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தவும். உங்கள் திறமைகளை அவர்களிடம் காட்டுங்கள். இரும்பு வணிகர்கள் இன்று நிதி ரீதியாக பயனடையலாம். இன்று நிச்சயமாக ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெற முடியும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். அவர்கள் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்பலாம். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

மீனம்

மீனம்

வீட்டின் பெரியவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். குறிப்பாக, இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்தால், அதை உங்கள் தந்தையுடன் கலந்தாலோசிப்பது நல்லது. பொருளாதார முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். இன்று உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் பயனளிக்கும். குறிப்பாக கூட்டு வணிகர்கள் பெரும் வெற்றியைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த நாள் கலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகரிக்கக்கூடும், ஆனால், உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் மிகவும் திருப்தி அடைவார்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்காது. சிகரெட், ஆல்கஹால் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுவிட இது சரியான நேரம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, March 27, 2021, 5:00 [IST]
Desktop Bottom Promotion