Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 27, 2020
கொரோனா வைரஸ் பீதியால் நிறைய பேர் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் கடத்துவதே சவாலாக இருக்கிறது. இன்றைய தினம் எப்படி இருக்கிறது?
கொரோனா வைரஸ் பீதியால் நிறைய பேர் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் கடத்துவதே சவாலாக இருக்கிறது. இன்றைய தினம் எப்படி இருக்கிறது. யாருடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என இன்றைய ராசி பலன்களை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
இன்னிக்கு நீங்க ரொம்பவே உற்சாகமா ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க. ஃப்ரண்ட்ஸுங்களாலயும் உங்களுக்கு ஒத்தாசை கெடைக்கும். குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனையும் தீர்ந்துடும். பணவரத்தும் அமோகமா இருக்கும். அதனால புதுசா நகை நட்டு வாங்குவதற்கும் யோகம் உண்டு. பிசினஸ்லயும் இதுவரைக்கும் இருந்த பிரச்சனையும் காணாம போயிடும். வீட்டோட அமைதியா இருங்க
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 23
அதிர்ஷ்ட நேரம்: காலை 10.10 மணி - 3 மணி

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரங்களே இந்த வாரம் ஆஃபீஸ் வேலை பாக்குறவங்க கொஞ்சம் பொறுப்போட நடந்துக்கிட்ட ஆஃபீஸ்ல உங்க அந்தஸ்து கூடிடும். பழைய பாக்கிகளும் இன்னிக்கு வந்துடும். பசங்களால அநாவசிய செலவுங்க வந்தாலும், பணவரத்து ஜாஸ்தியா இருக்கும். ஆனா குடும்பத்துல திடீர்னு சண்டை சச்சரவுன்னு வந்து போகும். வீட்ல இருக்கீங்க ரொம்ப சந்தோஷமாக என்ஜாய் பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட நம்பர்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 10.45 மணி முதல் பிற்பகல் 12.25 மணிவரை

மிதுனம்
உங்களுக்கு இன்றைக்கு விஐபிங்க ஆதரவு கிடைக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு பெரிய மனுஷங்களோட சப்போர்ட் கிடைக்குறதுனால சந்தோஷம் அதிகமாகும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களும் தெம்பா புதுசா ஃபீல் பண்ணுவீங்க. ஃப்ரண்ட்ஸுங்களோட ஐடியா உங்களோட பிரச்சனைக்கு முடிவு கட்டிடும். கவர்மெண்ட் சம்பந்தப்பட்ட வேலை பாக்குறவங்களுக்கு எல்லாமே ஃபேவரா நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் ப்ளூ
அதிர்ஷ்ட நம்பர் 30
அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி - மாலை 12.55 மணி

கடகம்
கடக ராசிக்காரங்க பிசினஸ் பண்றவரா இருந்த வெளியூர் பிரயாணத்துனால நல்ல செய்தி கிடைச்சிடும். கூடப்பிறந்தவங்க மூலமா நல்ல செய்தியும் வந்து சேரும். கூடவே உங்க பொருளாதார நிலைமையும் கூடிடும். இதனால உங்களோட கடன் பிரச்சனையும் காணாம போயி மனசு அமைதியாகிடும். பெத்தவங்களோட பாசமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.45 மணி முதல் 6.15 மணி வரை

சிம்மம்
இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த மந்தகதி மாறிடும். வேலை பாக்குறவங்களும் உங்க மனசு நோகாம நடந்துக்குவாங்க. ஒய்ஃபோட சொந்தக்காரங்களால உதவி ஒத்தாசையும் கிடைச்சிடும். குடும்பத்துல ஏற்படுற அநாவசிய செலவுங்களை சமாளிக்க முடியாம கடன் வாங்குற நிலை உண்டாகும். கவனமா நடந்துக்கோங்க. எங்க பார்த்தாலும் கொரோனா பீதி இருக்குறதுனால, ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது.
ராசியான நிறம்: மெரூன்
ராசியான எண் : 7
ராசியான நேரம்: பிற்பகல் 2 மணி - மாலை 4.20 மணி

கன்னி
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, எந்த வேலையை செஞ்சாலும் கொஞ்சம் கவனமா இருந்துக்குறது நல்லது. வெளியில இருந்து வரவேண்டிய பணமும் வர்றதுல தடங்கள், இடைஞ்சல் உண்டாகிடும். குடும்பத்துலயும் அநாவசிய டென்ஷன் ஏற்பட்டு, எதுலயும் நிம்மதியே இல்லாத நிலை ஏற்பட்டுடும். அதனால கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க.
ராசியான நிறம்: அடர் மஞ்சள்
ராசியான எண் : 17
ராசியான நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரங்களே புதுசா பிசினஸ் பண்ற ஐடியா இருந்தா, இன்னிக்கு அதை செயல்படுத்தலாம். சிலருக்கு புது வேலையும் கெடைச்சிடும். ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும். பசங்களால நல்ல செய்திங்களும் உங்க காதுக்கு எட்டிடும். விலை கூடுன வீட்டு உபயோக பொருள் வாங்க ரொம்ப ஆர்வம் காட்டுவீங்க.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 - இரவு 7:20 மணி

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க குடும்பத்துல பணவரத்து அமோகமா இருக்கும். அதோட லட்சுமி கடாட்ஷமும் உண்டாகும். வரண் பாத்துக்கிட்டு இருந்தா, இன்னிக்கு அது அமைஞ்சிடும். சொந்தக்காரங்க மூலமாவும் நல்லது நடக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு அந்தஸ்து கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 - மதியம் 1:00 மணி

தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க பசங்களால சந்தோஷம் கிடைக்கும். கோவில் குளம் போயிட்டு வர்றதுனால மனசும் ரிலாக்ஸ் ஆகிடும். வெளியில கொடுத்த கடன் திரும்ப வர்றதுல இடைஞ்சல் தடங்கள் உண்டாகிடும். சொந்தக்காரங்களால அநாவசிய பிரச்சனை உண்டாக வாய்ப்பிருக்கு, கவனமா இருந்துக்குறது நல்லது. வேலை பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால ஒத்தாசை கிடைச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 - மதியம் 2:30 மணி

மகரம்
பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு எதிர்பார்த்துகிட்டு இருந்த லாபம் வர்றதுல சில சிக்கல் உண்டாகிடும். பெரிய மனுஷங்களோட ஆறுதல் உங்க மனசுக்கு இதமா இருக்கும். கொரோனா பீதி இருக்குறதுனால, பசங்களோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் கூடுதலா அக்கறை காட்டுறது நல்லது. வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால சந்தோஷம் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 - மாலை 3:40 மணி

கும்பம்
வேலை பாக்குறவங்க கூட ஒர்க் பண்றவங்க கூட ரொம்ப ஒட்டுதலா இருப்பாங்க. வருமானமும் கூடிடும். இன்னிக்கு எந்த வேலையை செஞ்சாலும் ரொம்ப சந்தோஷமா செய்வீங்க. குடும்பத்துல இருக்குறவங்களோட அரவணைப்பு கிடைச்சிடும். படிக்குற பசங்க படிப்புல தன்னோட திறமையை ஃப்ரூப் பண்றதுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: இரவு 04:00 - இரவு 9:30

மீனம்
கூட்டாளியோட சேர்ந்துகிட்டு பிசினஸ் பண்றவங்களுக்கு எதிர்பாத்துக்கிட்டு இருந்த லாபம் கிடைச்சிடும். சுபகாரியம் முயற்சியில முட்டுக்கட்டை ஏற்பட்டுடும். வேலை பாக்குறவங்களுக்கு கூட ஒர்க் பண்றவங்களால சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்குது. வீட்டிலே இருந்தாலும் கவனமா வேலை பாக்குறது நல்லது. அநாவசிய செலவுங்க வந்து தொந்தரவு கொடுக்கும் ஜாக்கிரதை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 - மாலை 3:45 மணி



Click it and Unblock the Notifications