Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
காரைக்குடி சுரைக்காய் மசியல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
2 முருங்கைக்காய் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்தும் அள்ளும்..
எந்த ராசிக்காரங்களுக்கு இன்றைக்கு காதல் மலரும் தெரியுமா?
சந்திரன் இன்றைய தினம் சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார் இந்த சஞ்சாரத்தினால் கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. சில ராசிக்காரர்கள் மவுன விரதம் இருப்பது நல்லது.
இன்றைய தினம் சந்திரன் கன்னி ராசியில் பயணிக்கிறார். கும்பம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இன்றைய தினம் உத்திரம் நட்சத்திரத்திலும் ஹஸ்தம் நட்சத்திரத்திலும் சந்திரன் பயணிக்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம்.

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகம் வரும் யாருக்கு திடீர் செலவு வரும். ரொமான்ஸ் உணர்வு யாருக்கு உற்சாகத்தை தரும் என்று பார்க்கலாம். இந்த நாளில் நவகிரகங்களின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை செய்யும், சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எந்த ராசிக்காரர்கள் இன்றைய தினம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை யாருக்கு பாதிப்பு என்று பாருங்க.

மேஷம்
ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு மனதில் லேசாக கலக்கம் இருக்கும். உங்களுடைய அன்பையும் காதலையும் உங்க பிள்ளைகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி இடையேயான சின்னச் சின்ன பிரச்சினை தீர மன அமைதியே ஒரே வழி.பொருளாதார நிலை வரவும் செலவும் கலந்து இருக்கும். பணம் வந்தாலும் செலவு வடிவத்தில் பிரச்சினையும் கூடவே சேர்ந்து வரும் நண்பர்கள், அன்பானவர்களின் உதவி கிடைக்கும். உடம்பை கவனிங்க சந்தோஷமா இருங்க மன அழுத்தம் காணாம போயிரும்.
ராசியான நிறம் : க்ரீம்
ராசியான எண் : 16
ராசியான நேரம்: இரவு 7 மணி முதல் 9 மணி வரை

ரிஷபம்
இன்றைக்கு உங்களுக்கு பணம் வரும். உங்க விரலுக்கு ஏற்ப வீக்கம் வேண்டும். பட்ஜெட்டுக்கு அதிகமாக பர்ச்சேஸ் பண்ணி கடனாளி ஆகாதீங்க. உங்க கோபத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துங்க. உங்க வேலையில கவனம் செலுத்துங்க. இல்லாட்டி பெரிய பிரச்சினையில சிக்கிக்குவீங்க. உங்க காதல் இன்றைக்கு ரொம்ப ரொமான்டிக் ஆக இருக்கும். உங்க காதலியோட நீங்க கேண்டில் லைட் டின்னருக்கு போங்க. உங்க சந்தோஷம் மேலும் அதிகரிக்கும். உங்க ஆரோக்கியம் உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 29
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 6.45 மணி வரை

மிதுனம்
உங்க உடல் நலத்தில அக்கறை செலுத்துங்க. மது போதையை அறவே ஒதுக்குங்க. வேலையில கவனம் செலுத்தினா உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். பிசினஸ்ல நீங்க முதலீடு செய்ய நல்ல நேரம். உங்க திட்டத்தை நீங்க கரெக்டா போட்ட ஜெயிக்க முடியும். உங்க குடும்ப உறவுகளில் நீங்க சந்தோஷமா இருப்பீங்க. இன்றைக்கு நீங்க முக்கிய நபரை சந்திப்பீர்கள். உங்க வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.
ராசியான நிறம் : மெரூன்
ராசியன் எண் : 2
ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் 3.25 மணி வரை

கடகம்
மூன்றாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் நீங்க வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திப்பீர்கள், உங்களுக்கு வரும் சோதனைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். உங்க புத்திசாலித்தனத்தாலே நீங்க எதையும் எதிர்கொள்வீர்கள். பிசினஸ் செய்யும் இடத்தில உங்க பார்ட்னரின் உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சந்தோஷமாக பொழுதை போக்குவீர்கள். படிக்கும் இடத்தில் மாணவர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்க.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான எண்: 3
ராசியான நேரம் : காலை 9.45 முதல் பிற்பகல் 12.45 மணிவரை

சிம்மம்
உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சியும் எனர்ஜியும் வேற லெவல்ல இருக்கும். உங்க கல்யாண வாழ்க்கையில அபரிமிதமான சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். உங்க வாழ்க்கை துணையால் நீங்க மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்வீர்கள். பொருளாதார நிலை அதி அற்புதமாக இருக்கும். உங்க பைனான்சியல் பிரச்சினை தீரும். நேர்மறைய எண்ணங்கள் அதிகரிக்கும் காதல் வாழ்க்கையில் ரொமான்ஸ் உணர்வுகள் கூடும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இன்றைக்கு நீங்க உற்சாகமாக இருப்பீர்கள்.
ராசியான நிறம் : பச்சை
ராசியான எண் : 10
ராசியான நேரம்: மாலை 6 மணி- இரவு 8.45 மணி

கன்னி
இன்றைய தினம் கன்னி ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மனதில் கலக்கம் ஏற்படும். வீட்ல வாழ்க்கை துணையோட வாக்குவாதம் பண்ணாதீங்க நல்ல நாள் அதுவுமா சண்டையில போய் முடியும். கனவிலேயே பொழுதை கழிக்காதீங்க. நல்லது நடக்க நீங்க சின்ன சின்ன பிரச்சினைகளை கவனமாக கையாளுங்க. உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க பொறுப்புணர்ந்து நடந்துக்கங்க நல்லது நடக்கும்.
ராசியான நிறம்: பர்ப்பிள்
ராசியான எண்: 22
ராசியான நேரம்: மாலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரை

துலாம்
இன்றைய தினம் சந்திரன் உங்க ராசிக்கு 12 ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சுய நலமாக சிந்திக்காதீங்க. பொது நலமே பலனை தரும். பொருளாதார ரீதியாக இன்றைக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல நாள். எதையும் தெளிவாக தைரியமாக பேசுங்க. உங்க வாழ்க்கை துணையிடம் பொய் சொல்லி மாட்டிக்காதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க. உங்க உடல் ஆரோக்கியம் இன்று அற்புதமாக இருக்கும்.
ராசியான நிறம் அடர் சிவப்பு
ராசியான எண் : 21
ராசியான நேரம் மாலை 5.15 முதல் 6.45 மணிவரை

விருச்சிகம்
சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்துங்கள். சின்ன சின்ன பிரச்சினைகளை சந்திக்க நேரும். உங்க செயல்பாட்டை மாற்றுங்கள் நல்லது நடக்கும் இல்லாவிட்டால் பாதிப்புதான். அன்பானவர்களிடம் பாசமாக பேசுங்கள். ஈகோவை விட்டு ஒழியுங்க உங்க வாயை கட்டுங்க இல்லாட்டி வம்புல மாட்டுவீங்க. உங்க வாழ்க்கை துணையின் உடல் நலத்தில அக்கறை காட்டுங்க. அவங்களோட நேரம் செலவு பண்ணுங்க பண்டிகை காலத்தை சந்தோஷமாக கொண்டாடுங்க. எந்த முக்கிய முடிவும் எடுக்காதீங்க பிரச்சினையில கொண்டு போய் விடும்.
ராசியான நிறம்: சிவப்பு
ராசியான எண் : 9
ராசியான நேரம் : இரவு 10.45 மணி முதல் 12.25 மணிவரை

தனுசு
இன்றைய தினம் அற்புதமான நாள். காதல் உணர்வுகள் ரொமான்ஸ் நினைவுகள் அற்புதமாக இருக்கும். உங்க காதல் நினைவுகள் மனதில் கிளர்ந்தெழும். காதல் உங்களுக்கு அற்புமாக இருக்கும். உங்க வாழ்க்கை துணைக்கு அற்புதமான சத்தியம் செய்து மனம் குளிர செய்வீர்கள். உங்க உணவில் கவனம் வையுங்க இல்லாட்டி பண்டிகை நாள் அதுவுமா வயிறு கோளாறு வந்து விடும். உங்க பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நீங்க அதை சால்வ் பண்ணிட்டு நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. மறைமுக எதிரிகளால் உங்க அலுவலகத்தில் பிரச்சினைகள் ஏற்படும். உங்க வேலையை கவனமாக கையாளுங்க. ஆன்மீக பயணங்கள் அற்புதத்தை தரும். உங்க உதவி சிலரது மனதை குளிர வைக்கும்.
ராசியான நிறம் : ப்ளூ
ராசியான எண் : 14
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 7.20 மணி

மகரம்
இன்றைய தினம் நீங்க சந்தோஷ மனநிலையில் இருப்பீர்கள். உங்க வேலையை எளிதாக முடிப்பீர்கள். பிசினஸ் செய்பவர்களாக இருந்தால் பெரிய தொகையை முதலீடு செய்யும் முன்பாக முன்யோசனை அவசியம். வேலை பிரசர் அதிகமாகவே இருக்கும். உங்க நேர்மறை எண்ணங்களால் எதையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் அன்பான உறவினர்களுடன் பயணம் செல்வீர்கள். சுப செலவுகளுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். இன்றைக்கு ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள்.
ராசியான நிறம்: பிங்க்
ராசியான நம்பர்: 32
ராசியான நேரம்: இரவு 11.00 மணி - இரவு 2.30 மணி

கும்பம்
சந்திரன் சஞ்சாரம் எட்டாம் வீட்டில் இருக்கிறது கவனமாக இருக்கவும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும். உங்க காதல் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதல் நினைவுகள் சந்தோஷமாக இருக்கும். பண்டிகை நாட்கள் ரொமான்ஸ் ஆக இருக்கும். இன்றைக்கு பிசினஸ்ல நல்ல பணம் வருமானம் கிடைக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்ய இன்று ரொம்ப நல்ல நாள். வேலை செய்பவர்களுக்கு இன்று சாதாரணமான நாள்.
ராசியான நிறம் : வெள்ளை
ராசியான எண்: 3
ராசியான நேரம்: மாலை 6 மணி - இரவு 9.20 மணி

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான இடத்தில் சஞ்சரிக்கிறார். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இல்லாவிட்டால் உங்க மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சந்தோஷமாக எதிர்கொள்ளுங்க. பணவருமானம் இன்றைக்கு சூப்பராக இருக்கும். உங்களுக்கு இன்றைக்கு மனதில் உற்சாகம் கூடும் அதே மகிழ்ச்சியோடு உங்க குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்வீர்கள். விரைய செலவுகளை தவிர்த்து விடுங்கள். உங்க மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இன்றைக்கு ரொமான்ஸ் ஆன நாளாக இருப்பதால் உங்க அன்பானவருடன் நீங்க டேட்டிங் போக நல்ல நாள்
ராசியான நிறம் : மெரூன்
ராசியான எண்: 17
ராசியான நேரம் காலை 7.30 மணி - பிற்பகல் 3 மணி



Click it and Unblock the Notifications