Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்த ராசிக்காரங்க காரமான உணவை சாப்பிடாதீங்க வயிறு பிரச்சினை வருமாம்...
திங்கட்கிழமை இன்று பிப்ரவரி 24 ஆம் நாள் சந்திரன் பிற்பகல் வரை கும்பம் ராசியிலும் பிற்பகலுக்கு மேல் மீனம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.
திங்கட்கிழமை இன்று பிப்ரவரி 24 ஆம் நாள் சந்திரன் பிற்பகல் வரை கும்பம் ராசியிலும் பிற்பகலுக்கு மேல் மீனம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கும் சிம்மம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நான்கு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்திலும் விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உங்க அன்புக்குரியவரிடம் காதலை பகிர்ந்து கொள்ளுங்கள். கடமை உணர்வோடு பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு கிடைக்கும். நாளின் ஆரம்பம் கொஞ்சம் சோர்வாக இருக்கலாம். நோய் நொடிகள் தீரும் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். இன்று காதல் கை கூடும். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள்
இன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகமாகும். வேலை தொழில் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 35
சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்திலும் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்களுக்கு இன்றைக்கு வாழ்க்கை துணை ஒரு இனிய சர்ப்ரைஸ் கொடுப்பார். இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலம் அற்புதமாக இருக்கும் பணவரவு நன்றாக இருக்கும். காதல் விவகாரங்கள் இன்றைக்கு களைகட்டும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 7:30 முதல் நண்பகல் 2:00 மணிவரை

கடகம்
சந்திரன் பிற்பகல் வரை உங்க ராசிக்கு எட்டாம் வீட்டிலும் பிற்பகலுக்கு மேல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். காதல் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்களை மறந்து மன்னித்து விடுங்கள். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பிற்பகலுக்கு மேல் பிரச்சினைகள் குறையும். உங்களின் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 11:05 மணிவரை

சிம்மம்
சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டிலும் பிற்பகலுக்கு மேல் எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு பகல் 12.27 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தூரபயணங்களை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும். உங்கள் அன்பானவருக்கு உங்கள் வார்த்தைகள் புரியவையுங்கள். கதலோடு இந்த தினத்தை கொண்டாடுங்கள். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் இரவு 9:00 மணிவரை

கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிலும் பிற்பகலுக்கு மேல் ஏழாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். நிதி நெருக்கடிகள் தீரும். பண வரவு தாராளமாக இருக்கும். உடல் நலம் அற்புதமாக இருக்கும் வேலை தொழில் விவகாரங்களில் நன்மைகள் நடைபெறும். இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டிலும் ஆறாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் உங்கள் குடும்பத்தினர் இன்று உங்களுடன் பல பிரச்சினைகளை பேசி தீர்ப்பார்கள். குடும்ப வாழ்க்கை குதூகலமாக அமையும்.
நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : காலை 10:10 முதல் நண்பகல் 3:15 மணிவரை

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டிலும் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். கடன்கள் வசூலாகும். பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக அமையும். இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : விடிகாலை 4:50 முதல் நண்பகல் 12:05 மணிவரை

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். பண வரவு அதிகமாகும் சேமிப்பு உயரும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். சந்தோஷம் அதிகமாகும். வீட்டில் மதிப்பு மரியாதை அதிகமாகும். சந்தோஷமான நாளாக அமையும். குடும்பத்தில் மனைவியுடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:30 மணிவரை

மகரம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு இரண்டாம் வீட்டிலும் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். குடும்ப விசயத்தில் அடுத்தவரை தலையிட விட வேண்டாம். இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது. கணவன் மனைவி இடையே சந்தோஷமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள் என்றாலும் சின்னச் சின்னச் சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 7:45 முதல் மாலை 4:30 மணிவரை

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். பிற்பகலுக்கு மேல் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். பணவரவு அதிகமாகும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை அனுபவிப்பீர்கள். இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கையும் பணவரவும் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து மகிழ்ச்சி அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

மீனம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் பிற்பகலுக்கு மேல் உங்க ராசிக்குள்ளும் சஞ்சரிக்கிறார். ரொமான்ஸ் ஆன நாளாக அமையப்போகிறது. உங்களின் ஆசைகள் இன்று நிறைவேறும் பணவரவு அதிகமாகும். இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். துன்பங்கள் மறையும் இன்பங்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 1
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் மாலை 6:00 மணிவரை



Click it and Unblock the Notifications











