Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரப்போகுது...
வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த நாள். சுக்கிரன் சுகங்களை தருபவர். அவர் தனது ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். சில ராசிக்காரர்களுக்கு யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார்.
வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த நாள். சுக்கிரன் சுகங்களை தருபவர். அவர் தனது ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். சில ராசிக்காரர்களுக்கு யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும் பண வருமானம் வரும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு பிசினஸ் மூலமா வருவாய் கூடிடும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவீங்க. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க கூட இருந்துவந்த மனஸ்தாபம் நீங்கிடும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால சந்தோஷம் கூடிடும். கூடவே சுபகாரிய செலவுங்களும் வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உங்க ஃப்ரண்ட்ஸுங்க தேடி வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. சொந்தக்காரங்க மூலமா வீட்டுல டென்ஷன் கூடிடும். கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போனீங்கன்னா அநாவசிய பிரச்சனைங்க வராம அவாய்ட் பண்ணலாம். இன்னிக்கு பண வரத்தும் சுமாரா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வயலட்
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : காலை 9: 00மணி முதல் பகல் 11:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த போட்டி பொறாமைங்க காணாம போகும். பிள்ளைங்களோட படிப்புல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். வீட்டுல கல்யாண சுபகாரிய பேச்சு வார்த்தைங்க நல்ல படியா முடியும். அதனால குடும்பமே சந்தோஷ மூடுக்கு வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3: 00மணி முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்
இன்னிக்கு கூடப்பொறந்தவங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலைச்சுமை குறையலாம். பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபம் அமோகமா இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குறதுல ஆர்வம் காட்டுவீங்க. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனம் ரொம்ப அருமையா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 : 00மணி முதல் மாலை 5:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். லவ் பண்றவங்க லவ் ப்ரபோஷல் பண்றதுக்கு இன்னிக்கு அருமையான நாள். பிசினஸ் பண்றவங்க சின்னதா மாற்றம் செஞ்சா வியாபாரம் பெருகி லாபமும் கூடிடும். இன்னிக்கு நீங்க செய்யுற வேலையில தடங்கல், இடைஞ்சல் வந்துடும். அதோட வெளியில இருந்து உதவி கிடைக்குறதுலயும் தாமதம் ஏற்படும். இன்னிக்கு உங்க குடும்பத்தோட சப்போர்ட்டும் உங்களுக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
அதிர்ஷ்ட எண் : 10
அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

கன்னி
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பிசினஸ்ல புதுசா எந்த இன்வெஸ்ட்டும் பண்ண வேணாம். அதோட புதுசா எந்த முயற்சியும் பண்ணாதீங்க. இன்னிக்கு வீட்டை விட்டு வெளிய போறதை அவாய்ட் பண்றது நல்லது. ஹெல்த் கண்டிஷன்ல ரொம்பவே அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 14
அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

துலாம்
இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க கொடுக்குற அட்வைஸ்னால பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட் ஆயிடும். அதனால வியாபாரம் பெருகி லாபம் அமோகமா இருக்கும். படிக்குற பசங்களுக்கு படிப்புல ஆர்வம் வந்துடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாக்காம திடீர் மாற்றம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. குடும்பத்துலயும் இன்னிக்கு எல்லோரும் ரொம்ப ஒத்துமையா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12 : 00மணி முதல் பிற்பகல் 3 :30 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு குடும்பத்துல ஒத்துமையும் சந்தோஷமும் கூடிடும். வீட்டுக்கு தேவையான சாமான்களையும் இன்னிக்கு வாங்கிடுவீங்க. நீங்க எதிர்பாத்துட்டு இருந்த பேங்க் லோன் இன்னிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ்ல எதிர்பாத்ததை விட வியாபாரம் அமோகமா நடந்து லாபமும் பெருகிடும். அதனால இன்னிக்கு ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. உங்க ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 18
அதிர்ஷ்ட நேரம் : காலை 10: 45 மணி முதல் பிற்பகல் 1 :30 மணிவரை

தனுசு
இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்க சீனியர் அதிகாரிங்களோட வாக்குவாதம் பண்ணாம அவங்களை அனுசரிச்சி போனா அவங்களோட சப்போர்ட் கிடைக்கும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. பிசினஸ் பண்றவங்களுக்கு எதிர்பாக்காம வீண் பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருங்க. வீட்டுல எதிர்பாக்காம தண்டச்செலவுங்க வரலாம். அதனால சிக்கனமா செலவு பண்ற வழியை பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

மகரம்
இன்னிக்கு உங்களுக்கு சொந்தக்காரங்க மூலமா பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு, கொஞ்சம் கவனமா இருக்க பாருங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு லாபம் அதிகமா கிடைக்கும். வீட்டுலயும் பணப் பிரச்சனைங்களால நெருக்கடி வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 : 00மணி முதல் மாலை 5:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு பிசினஸ்ல பார்ட்னரோட இருந்து வந்த மனஸ்தாபங்கள் காணாம போயி, ரெண்டு பேரும் ஒத்துபோயிடுவீங்க. சுபகாரியம் சம்பந்தமான முயற்சிங்களுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைங்களும் இன்னிக்கு உங்க கூட ரொம்பவே பாசமா இருப்பாங்க. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு அவங்களோட திறமைக்கு ஏத்தமாதிரி ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. இன்னிக்கு நீங்க நெனைச்ச காரியமும் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 17
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 : 20 மணி முதல் இரவு 9 :00 மணிவரை

மீனம்
இன்னிக்கு குடும்பத்துல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போறது நல்லது. கொரோனா பீதி இருக்குற இந்த நேரத்துல பிரயாணம் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. நண்பர்களோட ஹெல்ப் இன்னிக்கு கிடைக்கும். இன்னிக்கு நீங்க ரொம்பவே டல்லா இருக்குறதுனால, செய்யுற வேலையிலும் தடை, தாமதம்னு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 :00 மணிவரை



Click it and Unblock the Notifications