Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இந்த புரட்டாசி சனிக்கிழமை உங்க ராசிக்கு எப்படி இருக்கும்?... படிச்சு தெரிஞ்சிக்கங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்களில் இதுவரையில் இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். நிலுவையில் இருந்து வந்த காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எதிர்கால பணிகள் குறித்த செயல்களும் சிந்தனைகளும் மேலோங்கும். அலைச்சல்கள் இருக்கும். ஆனாலும் அதற்கேற்ற அனுகூலங்களும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பரம்பரை சொத்துக்களின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளுடைய நற்செயல்களினால் பெற்றோர்களுக்கு பெருமைகள் உண்டாகும்.நண்பர்களுக்காக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். பணிகளில் இருந்து வந்த இடர்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
தொழிலில் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் உரையாடுகின்ற போது, யாரையும் புண்படுத்தி விடாமல் நிதானமாகச் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
தொழில் சம்பந்தமான முதலீடுகளில் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உங்களுடைய கைகளுக்கு வந்து சேரும். தொழிலில் உங்களுக்கு ஏற்ற திருப்திகரமான சூழல்கள் உருவாகும். நண்பர்களுடைய ஆதரவும் முழு உதவியும் உங்களுக்குக் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
பெரியோர்களுடைய பேச்சுக்களுக்கு மரியாதை கொடுத்து நடப்பது மிகவும் மேன்மை தரும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
குடும்ப உறுப்பினர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலைப் பொறுத்தவரையில், உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டுமே மிதமான அளவிலேயே இருக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு இருந்த மதிப்பு கூடிக்கொண்டே போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

துலாம்
இதுவரை இருந்து வந்த சிறுசிறு நெருக்கடியான சூழல்கள் அகலும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிர்ப்பாகளால் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தடைபட்ட காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகள் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பு உயர்ந்து கொண்டே போகும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களுடைய பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
வீடு மற்றும் வாகனங்களை மாற்றம் செய்கின்ற எண்ணங்கள் வந்து மேலோங்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகமாகும். பிறருடைய வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். பதட்டமான சூழலால் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் காலதாமதம் உண்டாகலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மகரம்
மனதுக்குள் இதுவரைக்கும் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மனம் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வெளியூா பயணங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இப்போது இருக்கின்ற இடத்தை மாற்றம் செய்வதற்கான சிந்தனைகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
வீட்டுக்கு விலையுயர்ந்த பொருள்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வியாபாரங்களில் நிலுவையில் இருந்து வந்த பாக்கிகளை வசூலித்து முடிப்பீர்கள். உங்களுடைய முக்கியப் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது தான் நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மீனம்
உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வாகனங்களுக்கு பராமரிப்புக்காக அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் சிறு சிறு மனக்கசப்புகள் வந்து போகும். புதிய வேலைகளுக்கான முயற்சிகள் ஈடேறும் நாளாக இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











