Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
இந்த ராசிக்காரங்க ரொம்ப நிம்மதியாக ஃபீல் பண்ணுவீங்க...
இன்றைக்கு சனிக்கிழமை மார்ச் 21ஆம் நாள் எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும் யாரெல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும் பணத்தை பத்திரமாக வைக்கணும்னு இன்றைய ராசிபலன் உங்களுக்கு சொல்கிறது படிங
இன்றைக்கு சனிக்கிழமை மார்ச் 21ஆம் நாள் எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும் யாரெல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும் பணத்தை பத்திரமாக வைக்கணும்னு இன்றைய ராசிபலன் உங்களுக்கு சொல்கிறது படிங்க.

மேஷம்
இன்றைக்கு உங்களுக்கு பணவரவு அதிகமாகும் வியாபாரம் டல்லா இருந்தாலும் குடும்பத்தோட ஹேப்பியா இருப்பீங்க. மத்தவங்க பேசுறது உங்க மனசை பாதிக்கலாம், இருந்தாலும் அதைப்பத்தி கவலைப்படாம உங்க வேலையை மட்டும் பாருங்க. மேரேஜ் லைஃப் ரொம்ப சந்தோஷமா நகரும். உங்க ஒய்ஃப் உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்க. லவ் பண்றவங்க இன்னிக்கு ரொம்பவே சந்தோஷமா இருப்பாங்க. இன்னிக்கு ஃபைனான்ஸ் மேட்டர்ல ரொம்பவே கவனமா இருங்க. ஹெல்த் கண்டிஷனை கொஞ்சம் கவனிங்க. உங்க பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்க தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

ரிஷபம்
இன்றைக்கு உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆஃபீஸ்ல இன்னிக்கு வேலை மும்மரத்துல இருப்பீங்க. கூட வேலை பாக்குறவங்களால் நிறைய நல்லது நடக்கும். உங்க உழைப்பை பார்த்து உங்க சீனியர் பாராட்டுவாரு. இன்னிக்கு ரொம்பவே வித்தியாசமான அனுபவம் உங்களுக்கு மேரேஜ் லைஃப்ல கிடைக்கும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ரொம்பவே சாதகமான விஷயங்கள் நடக்கலாம். லவ் மேட்டர் சக்ஸஸ் ஆகுறதுக்கு வாய்ப்பிருக்கு. ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணிவரை

மிதுனம்
இன்றைக்கு நீங்க ரொம்ப டல்லா ஃபீல் பண்ணுவீங்க. உங்க உடம்புல ரொம்ப சோர்வும் மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு பண்ணுவீங்க. ஆஃபீஸ் வேலையில கவனமா இருங்க. யார் எதை சொன்னாலும் கோவப்படாம, உங்க வேலையை மட்டும் பாருங்க. உங்க ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் இருக்க முடியலையேங்குற பிரச்சினை இனி இல்லை. குழந்தைங்க சைடுல இருந்து சந்தோஷமான செய்தி வந்து உங்களை சந்தோஷப்படுத்திடும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்
நீங்க இன்னைக்கு மவுன விரதம் இருங்க. ஆஃபீஸ் வேலையும், குடும்ப பிரச்சனைகளும் சேர்ந்துகிட்டு உங்களை பாடா படுத்திடும். அதனால எந்த முடிவெடுக்குறதா இருந்தாலும் நல்லா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. இல்லேன்னா பின்னாடி வருத்தப்படுவீங்க. மனசுல ஏதாச்சும் கவலை இருந்திச்சின்னா உங்க ஒய்ஃப் கிட்ட உக்காந்து மனசு விட்டு பேசுனா சரியாகிடும். எது செய்யிறதா இருந்தாலும் நிதானமா செய்யுங்க. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேசும் பொழுது கவனமாக பேசுங்க. யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக போங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 1:00 மணிவரை

சிம்மம்
நீங்க இன்னைக்கு உங்க குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பீங்க. கணவன் மனைவி இடையே சந்தோஷமாக இருப்பீங்க. உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும் இப்போதைக்கு வேண்டாம் வீட்லையே தங்கி ரெஸ்ட் எடுங்க. ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும். பணப்பிரச்சனையில இன்னிக்கு கவனமா நடந்துக்கோங்க. கை காசை செலவழிக்கிறதுக்கு முன்னாடி அந்த செலவு தேவையான்னு நிதானமா யோசிச்சி செலவழிக்குறது நல்லது. சாப்பாட்டு விஷயத்துல கவனமா இருங்க,
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு இன்றைக்கு கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்களால் நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாகும். இன்னிக்கு மேரேஜ் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போகும். ரெண்டு பேருமே ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க. இன்னிக்கு மத்தியானத்துக்கு மேல பணம் வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. லவ் பண்றவங்க கொஞ்சம் புத்திசாலித்தனமா நடக்க பாருங்க. மத்தவங்க சொல்றதை நம்பி லவ்வரை சந்தேகப்படாதீங்க. உங்க ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

துலாம்
இன்னிக்கு பணவரவு அமோகமா இருக்கும். இருந்தாலும் உங்களோட செலவுங்களை ப்ளான் பண்ணி செஞ்சா நஷ்டம் வராம தவிர்க்கலாம். ஆஃபீஸ்ல வேலை ஜாஸ்தியா இருந்தாலும் டென்ஷன் ஆகாம பாருங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நல்லதா இல்லை. அதனால எதை பேசுறதா இருந்தாலும் கவனமா பேசுங்க. மத்தியானத்துக்கு மேல நல்ல செய்தி வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. டென்ஷனை குறைக்குறதுக்கு யோகா, தியானம் பண்றது நல்லது
ரொம்ப கவனமாக இருங்க நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கலாம். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் காலை 8:45 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் டல்லா தான் இருக்கும். அதனால அனாவசிய செலவுங்களை அவாய்ட் பண்றது நல்லது. எதையும் யோசிக்காம பேசுறதோ செய்யுறதோ நல்லதுக்கில்லை. அதே மாதிரி உங்க விருப்பத்தை குடும்பத்துல இருக்குறவங்க மேல திணிக்காதீங்க. அவங்க இஷ்டத்துக்கு விட்டுடுங்க. அதுதான் உங்களுக்கு நல்லது. இன்னிக்கு ரொம்பவே டென்ஷனா இருக்குறதுனால ஹெல்த் கண்டிஷன் டல்லாவே இருக்கும்.
குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். எதிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
இன்னைக்கு உங்களுக்கு இருந்த பணப்பிரச்சனையும் தீர்ந்துடும். குழந்தைங்க விஷயத்தை நினைச்சி ரொம்பவே கவலைப்படுவீங்க. இருந்தாலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி நடந்துக்கோங்க. சீக்கிரம் அவங்க உங்களை புரிஞ்சிக்குவாங்க. ஆஃபீஸ்ல வேலை ரொம்ப ஜாஸ்தி இருக்குறதுனால டென்ஷனாவே இருப்பீங்க. இருந்தாலும் கவனமா வேலையை பாக்குறது நல்லது. பிசினஸ் பண்றவங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்குறது நல்லது. மேரேஜ் லைஃப்லயும் சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கு. அதனால கவனமா இருக்க பாருங்க. பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பொன் பொருள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை

மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். இன்னிக்கு நீங்க ரொம்பவே சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க. மேரேஜ் ஆனவங்க ஒய்ஃப் கூட ரொம்ப சந்தோஷமா வெளியில போய் என்ஜாய் பண்றதுக்கு வாய்ப்பிருக்கும். ஃபைனான்ஸ் பொசிஷன் நார்மலாவே இருக்கும். அதனால பட்ஜெட்டை மனசுல வச்சிக்கிட்டு செலவழிக்கிறது நல்லது. நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுறதை விட்டுடுங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு நிலைமை இன்னிக்கு சாதகமாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:30 மணிவரை

கும்பம்
இன்றைக்கு உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுக்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று நல்ல செய்திகள் தேடிவரும். உங்க ஒய்ஃப் கூட ரொம்பவே அன்பா அந்நியோன்யமா இருப்பீங்க. லவ் ஜோடிங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். இன்னிக்கு ஆஃபீஸ்க்கு சீக்கிரம் கிளம்பி போயிடுங்க. ஆஃபீஸ் வேலை பெண்டிங்க இருந்திச்சின்னா இன்னிக்கு அதை முடிச்சிடுவீங்க. இன்னிக்கு குழந்தைங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். ஃபைனான்ஸ் விஷயத்தை பொருத்த வரைக்கும் கவனமா இருந்து ப்ளான் பண்ணினா எதிர்காலத்துக்கு நல்லது.
பிள்ளைகளால் மகிழ்ச்சியான தகவல்கள் வரும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:30 மணிவரை

மீனம்
இன்றைக்கு நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். யார் கிட்டயாவது கடன் வாங்கி இருந்தா, அதை இன்னிக்கு திருப்பி கொடுத்திடுவீங்க. கூட்டு சேர்ந்துகிட்டு பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு பார்ட்னர் கிட்ட கொஞ்சம் கவனமா இருக்க பாருங்க. படிக்கிற பசங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். எக்ஸாம்ல பாஸ் பண்றதுக்கு வாய்ப்பிருக்கும். குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும் சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அற்புதமான நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 9:00 மணிவரை



Click it and Unblock the Notifications











