Latest Updates
-
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
பாபா வாங்காவின் தலைசுற்ற வைக்கும் உலக அழிவு பற்றிய கணிப்பு..எந்த வருடத்தில் உலகம் அழியப்போகுதாம் தெரியுமா? -
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்..இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்...! -
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா?
இன்றைய ராசிப்பலன் (20.05.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்வதைத் தவிர்த்தால் நல்லது…
இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 20 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 20 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...


மேஷம்
தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், மோசமடைந்த உறவுகள் மேம்படும். பணத்தின் அடிப்படையில் இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீண்டகால கடின உழைப்பு வெற்றிகரமாக முடியும். நிதி நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். வேலை முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று, எந்தவொரு சாதகமான மாற்றமும் சாத்தியமாகும். வர்த்தகர்களின் எந்தவொரு பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படலாம். உத்தியோகஸ்தர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று ஆரோக்கியத்தில் சிறிது சரிவு ஏற்படலாம். அதிகரித்த சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக நீங்கள் நன்றாக உணர மாட்டீர்கள். ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

ரிஷபம்
உங்கள் தாயின் உடல்நிலை சரியில்லை என்றால், அவரது ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களுக்கு பிறகு பெற்றோருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் திருமணத்தில் இருந்துவந்த தடை நீங்கி உங்கள் பிரச்சனை இன்று முடிவுக்கு வரக்கூடும். பணத்தின் அடிப்படையில் இன்று அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நிதி ரீதியாக பயனடைவீர்கள். வியாபாரத்தில் பெரிய லாபத்தைப் பெறலாம். நீங்கள் இன்று ஒரு ஆர்டரைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 6:00 மணி வரை

மிதுனம்
இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கப்போகிறது. குறிப்பாக தொழில் அடிப்படையில், நல்ல முடிவுகளைப் பெறலாம். இன்று முன்னேறத்திற்கான ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறலாம். பதவி உயர்வு கனவை இன்று நிறைவேற்ற முடியும். வர்த்தகர்களுக்கு இன்றைய நாள் கலக்கப்படும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வீட்டின் சூழ்நிலை இன்று பதற்றதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையில்லாமல் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும். பணத்தின் அடிப்படையில் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இருப்பினும் அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கடகம்
உத்தியோகஸ்தர்களுக்கு இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும், ஆனால், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களது கடின உழைப்பின் சரியான முடிவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் இன்று சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடனான உறவு வலுவாக இருக்கும். உடன்பிறப்புடன் பிளவு ஏற்பட்டால், இன்று அனைத்து தவறான புரிதல்களையும் நீக்க முடியும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியை துரிதப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று கலக்கப்படும். இன்று நீங்கள் மிகவும் சிக்கலானதாக உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

சிம்மம்
இன்று நீங்கள் வாழ்க்கைத் துணையுடன் பணம் தொடர்பாக மோதலைக் கொண்டிருக்கலாம். இது வீட்டுச் சூழலை பதற்றமாக்கும். உங்களிடம் எதிர்மறை எண்ணங்களை ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டால், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறுவதை உணருவீர்கள். வேலையின் சுமை அதிகரித்து வருவதால் இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணர முடியும். இன்று உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பொறுப்பற்ற எந்த நடவடிக்கையையும் இன்று தவிர்க்கவும். நீங்கள் ஒரு பழைய நண்பரை மாலையில் திடீரென சந்திக்கலாம். உங்களுக்கு சுவாச நோய் ஏதேனும் இருந்தால், இன்று கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மாலை 3:40 மணி வரை

கன்னி
காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. உங்களிடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், வாழ்க்கைத் துணையுடன் கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். இன்று நிதி அடிப்படையில் மிக விலையுயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுத்தால், உங்கள் நிதி நிலையில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகள் சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்வதால் உங்கள் வேலை தடைபடும். உத்தியோகஸ்தர்கள் வேலை தொடர்பான குறுகிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, தற்போதைய வைரஸ் பரவல் குறித்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:50 மணி முதல் நண்பகல் 12:05 மணி வரை

துலாம்
பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் ஒரு புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நிறைய செலவிடலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், பதவி உயர்வு பெற கடுமையாக உழைத்தால் இன்று நல்ல செய்தியைப் பெறலாம். வணிகர்கள் நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சில மன அழுத்தம் சாத்தியமாகும். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு சிக்கல் இருக்கலாம். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உங்கள் உடல்நலம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். உணவுடன் சேர்த்து ஓய்வெடுப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மாலை 3:15 மணி வரை

விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த பெரிய பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம். இது உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, உங்களுக்கு மன அமைதியை தரும். சில நல்ல செய்திகளை குழந்தைகள் மூலம் பெறலாம். கல்வித்துறையில் குழந்தைகளின் செயல்திறன் மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். வருமானத்தை மனதில் கொண்டு செலவிடவும். வேலையைப் பற்றிப் பேசினால், திறமையுடன் பணியாற்ற வேண்டிய நேரமிது. சிறிய தவறு கூட அவர்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வர்த்தகர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்காது. உங்களுக்கு ஒவ்வாமை அல்லது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 11:05 மணி வரை

தனுசு
வேலையில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், பொறுமையாக செயல்பட்டு அதனை சரி செய்ய முயற்சிக்கவும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்கவே கூடாது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிறந்ததைக் கொடுக்க முயற்சிக்கவும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று ஒரு நல்ல நாளாக இருக்காது. இன்று வரவு செலவு திட்டத்தில் சிறிது தடுமாற்றத்தை சந்திக்கலாம். அதனால் இன்று சில முக்கியமான பணி தடைபடக்கூடும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:45 மணி முதல் மாலை 4:30 மணி வரை

மகரம்
பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பணம் தொடர்பான பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இன்று யாராவது உங்களிடமிருந்து கடன் கேட்டால், அதை யோசித்து தருவரு நல்லது. திருமணமாகாதவர்கள், இன்று தங்களது வருங்கால வாழ்க்கைத் துணையை சந்திக்க முடியும். திருமணமானவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணயிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரிகள் புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், கவனமாக ஆலோசித்த பின்னரே இறுதி முடிவ எடுக்கவும். உத்தியோகஸ்தர்கள் அவசரமாக எந்த வேலையை முடிப்பதையும் தவிர்க்க வேண்டும். மிகச்சிறிய தவறு கூட உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். ஆரோக்கிய விஷயங்கள் இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கும்பம்
இன்று உங்கள் அலுவலகத்தில பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். ஆனால், நீங்கள் மிகப்பெரிய பிரச்சனைகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். கடினமாக உழைத்து, எதிர்காலத்தில் நல்ல முடிவுகளைப் பெற முயற்சிக்கவும். எந்தவொரு பழைய பிரச்சனையும் வர்த்தகர்களை வருத்தப்படுத்தலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று எந்த சிறிய கடனிலிருந்தும் விடுபடலாம். இன்று வாழ்க்கைத் துணையுடன் பிரிவு ஏற்படலாம். எனவே, இன்று உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று பெற்றோருடன் நல்ல நேரத்தை செலவிட முடியும். ஆரோக்கியத்தில் ஏதேனும் சிறிய சிக்கல் இருந்தால் கூட உடனடியாக மருத்துவரை அணுகவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மீனம்
உங்கள் முக்கியமான எந்த வேலைக்கும் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. இன்று, நீங்கள் சில சவாலான சூழலை சந்திக்கலாம். இதன் காரணமாக உங்கள் நேரத்தையும் சக்தியையும் இழக்க நேரிடும். உங்கள் நிதி நிலை பற்றிப் பேசினால், தொடர்ந்து பொழுதுபோக்கிற்காக அதிகமாக செலவிடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், விரைவில் பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். பழைய கடன்களிலிருந்து விடுபட, நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இன்று, உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே, பேசி அவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்கவும். உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக நீங்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் கண்கள் மற்றும் முதுகு மோசமான விளைவை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 9:30 மணி வரை



Click it and Unblock the Notifications











