இந்த 4 ராசிக்காரங்களுக்கு உடல் நலத்தில பிரச்சினை வரும் கவனம்...

உலகமே கொரோனா பயத்தில அலறிக்கிடக்கிறது. இன்றைக்கு வெள்ளிக்கிழமை மார்ச் 20ஆம் நாள் எந்த ராசிக்காரங்க எல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும் பணத்தை பத்திரமாக வைக்கணும் இன்றைய ராசிபலன் உங்களுக்கு சொல்கிறத

உலகமே கொரோனா பயத்தில அலறிக்கிடக்கிறது. இன்றைக்கு வெள்ளிக்கிழமை மார்ச் 20ஆம் நாள் எந்த ராசிக்காரங்க எல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டணும் பணத்தை பத்திரமாக வைக்கணும் இன்றைய ராசிபலன் உங்களுக்கு சொல்கிறது படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்க குடும்பத்தில இன்னைக்கு அமைதியாக இருக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் வரும். புதிய பொருள் வீடு வந்து சேரும். உங்க அன்பானவர்கள் மீது நீங்க ரொம்ப அக்கறையாக இருப்பீங்க. உங்க பொருளாதார நிலைமை இன்னைக்கு நார்மலாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம் : மாலை 1.30 மணி முதல் இரவு 8.05 மணி

ரிஷபம்

ரிஷபம்

உங்க வீட்ல மகிழ்ச்சியும் சந்தோஷமும் அமைதியும் நிலவும். உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ரொம்ப நல்ல நாள். பிசினஸ் பண்றவங்களுக்கு ரொம்ப நல்ல நாள் மிகப்பெரிய பிரச்சினைகளை நீங்க சால்வ் பண்ணுவீங்க. உங்க திருமண வாழ்க்கையில நீங்க அமைதியாக இருங்க கோபப்படாதீங்க. உங்க நிதி நிலைமை இன்னைக்கு நல்லா இருக்கும். உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. கோடைகால நோய்கள் உடம்பை தாக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.05 மணி முதல் 6.15 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை. கோபப்படாதீங்க. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வீங்க. வேலை செய்யிற இடத்தில ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க. சின்ன மிஸ்டேக் இருந்தா கூட அது பிரச்சினை ஏற்படுத்திடும். உங்க உடல் ஆரோக்கியத்தில இன்னைக்கு அக்கறையாக இருங்க இல்லாட்டி பிரச்சினை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 19

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.20 மணி இரவு 11 மணி

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரங்களே, இன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உங்களுக்கு இன்றைக்கு ரொம்ப முக்கியமான வேலைகள் இருக்கும் அதை ஈசியாக முடிப்பீங்க. திருமண வாழ்க்கையில நீங்க சந்தோஷமாக இருப்பீங்க தம்பதியர்களுக்கு இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கும். உங்க அன்பானவர்கள் உங்களுக்கு நல்லதாக பரிசு கொடுப்பாங்க. இன்னைக்கு வேலை செய்யுற இடத்தில நீங்க செய்யுற வேலை வெற்றியை கொடுக்கும். ஆபிஸ்ல உங்க செயலுக்கு பாராட்டு கிடைக்கும். இன்னைக்கு உங்களுக்கு ஒரு நல்ல செய்தி தேடி வரும். வீட்டு சுற்றுச்சூழல் ரொம்ப அமைதியாகவும் நல்லாவும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி இரவு 7 மணி

சிம்மம்

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவீங்க. பொருளாதார ரீதியாக உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன் கிடைக்கும். ரொமான்ஸ் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உங்க அன்பானவரோட நீங்க அழகான இடத்திற்கு போவீங்க. நீங்க பயணம் செய்வதற்கு இது ஏற்ற நாள் இல்லை. பயணத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி மாலை 4.20 மணி

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இன்னைக்கு உங்களுக்கு வேடிக்கையான நாளாக இருக்கும். உங்க ப்ரண்ட்ஸ், குடும்பத்தோட நீங்க சந்தோஷமாக இருப்பீங்க. சமூக அக்கறையோட இருப்பீங்க. உங்க பழைய நண்பர்களை சந்திப்பீங்க. அது உங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும். உங்க கல்யாண வாழ்க்கையில நீங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. வீட்ல உங்க குடும்பத்தோட மகிழ்ச்சியானதாக மாறும். உங்க நிதி நிலைமை ரொம்ப அற்புதமாக இருக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. உணவுல கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 45

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி இரவு 10.10

துலாம்

துலாம்

இன்று நீங்கள் வீண் பேச்சை குறைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உங்க லவ் ரொம்ப பலமாக இருக்கும். அன்பா பேசுங்க உங்களைப்பற்றி உங்க அன்பானவருக்கு புரிய வையுங்க. உங்க நேசமானவரோட நேர்மையை சந்தேகப்படாதீங்க. வேலை செய்யுற இடத்தில உங்களுக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து வேலை செய்யுங்க. உங்க உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். இன்னைக்கு நீங்க ரொம்ப முக்கியமான முடிவுகளை எடுப்பீங்க.

ராசியான நிறம்: குங்குமப்பூ நிறம்

அதிர்ஷ்ட எண் : 38

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி இரவு 7.20 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும்.

உங்க திருமண வாழ்க்கை சநதோஷமாக இருக்கும். இன்றைக்கு மேலும் வலுவடையும். குடும்பத்தில இருக்கிற பிரச்சினையை சால்வ் பண்ணுவீங்க. உங்க நிதி நிலைமையை கவனமாக கையாளுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

அதிர்ஷ்ட நிறம்: க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நேரம் காலை 6.30 மணி மாலை 4.00 மணி

தனுசு

தனுசு

இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

உங்க வாழ்க்கை துணையோட சேர்ந்து நீங்க வீட்டு பிரச்சினைகளை சால்வ் பண்ணுவீங்க. உங்க நிதிநிலைமை இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கும். சந்தோஷமாக ஷாப்பிங் போவீங்க. உங்க உடல் ஆரோக்கியம் இன்றைக்கு ரொம்ப அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 32

அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.30 மணி இரவு 8 மணி

மகரம்

மகரம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளில் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

இன்றைய தினம் உங்க குடும்ப வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் குழந்தைகளோட நேரத்தை செலவு பண்ணுவீங்க. குழந்தைகளோ கல்வியில அவங்க சாதனையில கவனம் செலுத்துவீங்க. உங்க கல்யாண வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம்: ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம் : இரவு 4 மணி இரவு 9 மணி

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்களுக்கு நிதி நிலைமை தலைவலியை கொடுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் சந்திப்பீங்க. பண விசயத்தில கவனமாக இருங்க. சில பிரசர்கள் வரலாம். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உங்க ரொமான்டிக் வாழ்க்கையில சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. ரொம்ப ரெஸ்ட் லெஸ் ஆக ஃபீல் பண்ணுவீங்க

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி இரவு 8.20 மணி

மீனம்

மீனம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பாங்க. பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வாங்க. திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும்.

வேலை செய்யிற இடத்தில இன்றைக்கு உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கும். உங்க வேலைக்கு தகுந்த மாதிரி நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் ரொம்ப முதலீடு பண்ணாதீங்க. உங்க அப்பா உடைய உடல்நலத்தில அக்கறை செலுத்துங்க. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க பொருளாதார நிலமை நல்லா இருக்கும். ரொம்ப செலவு பண்ணாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் காலை 3.30 மணி இரவு 8 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, March 20, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion