For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (20.01.2021): இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…

இன்று சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 20ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 20ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 20th January 2021 Wednesday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடுமையாக உழைப்பீர்கள். இருப்பினும் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும். வணிகர்கள் இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், நாளின் இரண்டாம் பாகத்தில், சிக்கல்கள் சமாளிக்கப்பட்டு, வேலையில் கவனம் செலுத்த முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டில் நிலவும் பதற்றமான சூழலை மேற்கொண்டு வளர விடாதீர்கள். பிரச்சனைகளை அமைதியாக கையாள முயற்சிக்கவும். இன்று செலவு செய்யும் மனநிலையில் இருந்தால், அதனை மாற்றிக் கொள்ளவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, உடற்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று ஆன்லைனில் வியாபாரம் செய்வோருக்கு மிகவும் சாதகமான நாள். இன்று மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அரசு வேலையில் இருப்போர், பதவி உயர்வு பெறலாம். உங்கள் கடின உழைப்பினால் விரைவில் வெற்றியின் உச்சத்தில் இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். குறிப்பாக உடன்பிறப்புகளுடன், இன்று ஒரு சிறந்த நாளாக இருக்கும். எந்தவொரு நற்செய்தியையும் இன்று வாழ்க்கைத் துணையிடமிருந்து பெறலாம். அன்புக்குரியவரின் புத்திசாலித்தனத்தினால் நீங்கள் நிதி ரீதியாக பயனடையலாம். இன்று உடல்நலம் நன்றாக இருக்கும். மனரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுனம்

உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவை வைத்திருக்க முயற்சிக்கவும். வேலையின் கவனக்குறைவு, பொறுப்பற்ற செயல்களை தவிர்க்கவும். குறிப்பாக பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். பால் பொருட்களை வணிகம் செய்வோர், இன்று எதிர்பார்த்த நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். அன்புக்குரியவருடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்றைய நாள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம்

கடகம்

தேவைப்படுபவர்களுக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அதனை தவறவிட வேண்டாம். இன்று வேலை முன்னணியில் நல்லதாக இருக்கும். கடின உழைப்பின் நல்ல முடிவுகளைப் பெறலாம். அலுவலகத்தில் உங்களிடம் சில முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட வாய்ப்புள்ளது. பயத்தை விடுத்து, அதனை புத்திசாலித்தனமாக செய்து முடித்தால், வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற்றிடலாம். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைப் பெறலாம். பங்குச் சந்தையில் இருப்போர், இன்று கவனமாக முடிவுகளை எடுப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் பாசமும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை பற்றி பேசினால், வெளி உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று பிற்பகல் வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக செயல்படவும். எதிர்மறை எண்ணங்களை சற்று விலக்கி வையுங்கள். இல்லையெனில், வாழ்க்கையில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று அலுவலக வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். நாளைக்கு என்று எந்த வேலையும் ஒத்திவைக்காதீர்கள். இல்லையெனில், நிலைமை மோசமடையக்கூடும். நிதி சார்ந்த துறையில் பணியாற்றுவோருக்கு, இன்று ஒரு சவாலான நாள். எத்தகைய பாதகமான சூழ்நிலையிலும், வேலையை பொறுமையாக செய்து முடிக்க முயற்சிக்கவும். இல்லையெனில், எதிர்காலத்தில் வருத்தப்படும்படி ஆகிவிடும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை இயல்பை விட சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான முரண்பாடுகள் அனைத்து சரியாகிவிடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

இன்று பிற்பகல் முதல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால், நிதானமாக செயல்படவும். இன்று மனம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு பிடித்த பணிகளைச் செய்ய போதுமான நேரமும் கிடைக்கும். கல்வியுடன் தொடர்புடைய உத்தியோகஸ்தர்களுக்கும் இந்த நாள் நன்றாக இருக்கும். வியாபாரிகள் இன்று சில பெரிய லாபத்தைப் பெறலாம். அதே நேரத்தில், உத்தியோகஸ்தர்களின் பணிச்சுமையும் இன்று குறைவாக இருக்கும். மேலும், அனைத்து வேலைகளையும் உரிய நேரத்திற்கு முன்பே முடிக்க முடியும். இன்று வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த பொழுதாக இருக்கக்கூடும். பண நிலைமை நன்றாக இருக்கும். மற்றவர்களை மகிழ்விக்க செலவழிப்பதைத் தவிர்க்கவும். இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

துலாம்

துலாம்

எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காவிட்டால் ஏமாற்றமடையத் தேவையில்லை. கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையால், அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான மோதல் போக்கை தவிர்த்தாக வேண்டும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை கடுமையாக போரடி முடிக்க முயற்சிக்கவும். இன்றைய தினம் வணிகர்கள், முக்கிய முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். பிறரின் பேச்சை கேட்டு முடிவுகள் எடுப்பதை தவிர்த்தாக வேண்டும். பண நிலைமை திருப்திகரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுப்பெறும். அதிகரிக்கும் மன அழுத்தம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் பொன்னான நேரத்தை தேவையில்லாமல் வீணாக்குவதைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் சமாளிக்க வேண்டிய பல முக்கியமான பணிகள் உள்ளன என்பதை மறவாதீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே, மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. மேலும், வேலையில் கவனம் செலுத்த முயற்சிக்கவும். வணிகர்கள் இன்று பொருளாதார பரிவர்த்தனைகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் சிறிய மனகசப்பு ஏற்படலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது கணிசமாக அதிகரிக்கக்கூடும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். திடீரென்று சில பெரிய செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். உடல்நலம் குறைய வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 44

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு

தனுசு

பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு விலை உயர்ந்த நாளாக இருக்கும். எனவே, பட்ஜெட்டை முன்கூட்டியே தயார் செய்து, பார்த்து செலவிடுவது நல்லது. அலுவலகத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து, உங்கள் மேலதிகாரிகளுடன் வெளிப்படையாக பேசினால் மட்டுமே உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். வணிகர்களுக்கு இன்று ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலையை கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் செய்தால், வரும் நாட்களில் அதற்கான சரியான பலன்களைப் பெற்றிடலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு நன்றாக இருக்கும். ஒரு முக்கியமான பிரச்சனைக்கு குறித்து தந்தையிடம் ஆலோசனைப் பெறலாம். உடல்நிலையைப் பொருத்தவரை, காது தொடர்பான சில சிக்கல்கள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம்

மகரம்

உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. அலுவலகத்தில் உங்கள் சிறந்த செயல்திறன் பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் மட்டுமல்ல, சக ஊழியர்களும் உங்கள் கடின உழைப்பைப் பாராட்டுவார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையோர் எந்தவொரு பெரிய வெற்றியையும் பெற முடியும். வணிகர்கள் இருந்துவந்த எந்தவொரு பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். மேலும், நிதி ரீதியாகவும் பயனடையலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படை தன்மையுடன் இருங்கள். இல்லையெனில் உங்கள் உறவு பலவீனமடையக்கூடும். இன்று வீட்டு வசதிகளுக்காக சிறிது பணம் செலவிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறந்த நேரத்தைப் பெறுவீர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு மனதளவில் நன்றாக உணருவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும், உங்கள் அனைத்து பணிகளையும் பொறுமையாக செய்து முடிக்க முயற்சிக்கவும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த சில முக்கியமான மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்க முடியும். உங்கள் நிதித் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் உடல்நல விஷங்களில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இல்லையெனில் சில நாட்பட்ட நோய்கள் தோன்றக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

மீனம்

மீனம்

பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. முதலீடு செய்யத் திட்டமிட்டால், உங்கள் முடிவை கவனமாக எடுக்க வேண்டும். இல்லையெனில், பெரிய இழப்பு ஏற்படக்கூடும். வணிகர்கள் இன்று தங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும். இருப்பினும், இந்த நேரத்தில் சட்ட சவால்களிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 20th January 2021 Wednesday In Tamil

Check out the daily horoscope for 20th January 2021 wednesday in Tamil. Read on.
Story first published: Tuesday, January 19, 2021, 22:11 [IST]
Desktop Bottom Promotion