Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருமானம் அதிகமாக வரும்...
வியாழக்கிழமை குருவாரமாகிய இன்று சந்திரன் தனுசு ராசியிலும் பிற்பகலுக்கு மேல் மகரம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கும் மிதுனம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது.
வியாழக்கிழமை குருவாரமாகிய இன்று சந்திரன் தனுசு ராசியிலும் பிற்பகலுக்கு மேல் மகரம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கும் மிதுனம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திரன் இன்று ஒன்பதாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டிற்கு பயணிக்கிறார். ஏற்கனவே சனி அங்கு சஞ்சரிக்கிறார். சந்திரன் சனி சேர்க்கை உங்களுக்கு வேலைப்பளுவை அதிகமாக்கும். திட்டமிட்டு வேலை செய்து பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். உங்களுடைய நிதி நிலைமை இன்று சுமார்தான் மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்களுடைய இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும். காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வயிறு பிரச்சினைகள் வந்து எரிச்சலை ஏற்படுத்தும். இன்று நீங்கள் குரு பகவானை வணங்கி வேலையை தொடங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

ரிஷபம்
சந்திராஷ்டமத்தினால் ஏற்பட்ட பிரச்சினை பிற்பகலுக்கு மேல் முடிவுக்கு வரும். பிற்பகல் வரை எந்த வம்புக்கும் போகாமல் அமைதியாக இருங்கள். இரண்டு நாட்களாக ஏற்பட்ட மன உளைச்சல் பிரச்சினை தீர்ந்து வீட்டில் சந்தோஷம் அதிகமாகும். பணிச்சுமையும் பதற்றமும் உங்களை வாட்டி வதைக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் டென்சனாகவே இருப்பீர்கள். வீட்டில் உங்கள் வாழ்க்கைத்துணையோடு அமைதியாக பேசுங்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். ஆன்மீக பயணம் மன அமைதியை தரும். உடல் ஆரோக்கியம் சுமார்தான் கடினமான சூழ்நிலைகளையும் பொறுமையாக கையாளுங்கள். பாதிப்புகள் நீங்க பார்வதி பரமேஸ்வரனை வணங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போங்க. வேலை செய்யும் இடத்தில் உங்க திறமைக்கு மதிப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். இன்று பணவரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். வங்கி சேமிப்பு அதிகமாகும். உங்க உடல் நிலை சுறுசுறுப்பாக இருக்கும். ரொம்ப உற்சாகமாக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெற்றியும் சந்தோஷமும் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கடகம்
இன்று சந்திரன் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வீட்டிலும் வெளியிடங்களிலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். வேலைக்காக இன்று நீங்கள் செய்யும் சிறு பயணம் செல்வீர்கள். இன்று அதிக அளவில் பணவரவு வரும் உங்களின் கையிருப்பும் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் மன உறுதியும் அதிகமாகும். சந்தோஷமாக இன்றைய தினத்தை கழிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணி வரை

சிம்மம்
இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும் நிதானமாக வேலையை செய்யத் தொடங்குங்கள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். வீட்டில் தேவையற்ற விதாண்டாவாதம் செய்ய வேண்டாம். ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்து போங்க. பொருளாதார நிலைமை சுமாராகத்தான் இருக்கும். பணத்தை கவனமாக செலவு செய்யுங்கள் சிக்கனமாக இருக்கவேண்டியது அவசியம். உங்க உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வயிறு பிரச்சினைகள் வரலாம் தண்ணீர் அதிகம் குடிங்க பிரச்சினைகள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டத்தை விட உழைப்பு உங்களுக்கு அதிக பலன் கொடுக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்க சந்தோஷமாக பேசுங்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்து நடந்து கொள்ளுங்கள். பணத்தை பத்திரமாக செலவு செய்யுங்கள். சிக்கனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் நீங்க நிதானமாக இருங்க. பணிச்சுவை உங்களை கவலைப்படுத்தும். இன்று உங்க ஆரோக்கியம் சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

துலாம்
இன்று உங்களுக்கு மன மகிழ்ச்சி தரும் நாள். முக்கிய முடிவுகளை சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகும். உங்க வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். நம்பிக்கை அதிகமாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் பணவரவு அதிகமாகும். வங்கி சேமிப்பு அதிகமாகும். கையிருப்பும் கூடும். உங்களின் ஆற்றல் அதிகமாகும். சொத்துக்களை சேமிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மனதளவிலும் உற்சாகமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சந்தோஷ சம்பவங்கள் அதிகமாகும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள். சவால்களை சந்தோஷமாக எதிர்கொள்வீர்கள். படபடப்பாகவும் பதற்றமாகவும் ஃபீல் செய்வீர்கள். உங்க வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பழைய சந்தோஷ தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பண வருமானம் சுமாராக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள் இல்லாவிட்டால் கையிருப்பு கரைந்து விடும். தைரியமாக இருங்கள் இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : பிற்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

தனுசு
இன்று நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைய கடினமாக போராட வேண்டியிருக்கும். ரொம்ப உணர்ச்சிவசப்பாதீங்க. அமைதியை கடைபிடியுங்கள். வேலை செய்யும் இடத்தில் நிதானமாக இருங்கள். ரொம்ப கவலைப்படாதீர்கள் இல்லாவிட்டால் உங்க உடல் நிலை பாதிக்கப்படும். பணத்தை பத்திரமாக வைத்திருங்கள் இல்லாவிட்டால் பண இழப்பு ஏற்படும் நஷ்டப்பட வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்ககறை காட்டுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மகரம்
உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் உங்க ராசியிலும் சந்திரன் இன்று சஞ்சரிப்பதால் நிதானமாக இருங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும் மனக்குழப்பம் ஏற்படும் எதையும் திறமையாக கையாளுங்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருங்கள். பண வருமானம் சுமாராக இருக்கும் கையில் இருக்கும் பணத்தை சேமியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் பதற்றம் வேண்டாம் பத்திரமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

கும்பம்
இன்று லாபகரமான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும் பணவரவு அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையுடன் அன்பை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்க நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பும் அதிகமாகும். உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மீனம்
இன்று உங்களின் திறமை வெளிப்படும் நாள். உங்களின் இலக்குகளில் வெற்றியடைவீர்கள். உறுதியுடனும், நேர்மையுடனும் எதையும் எதிர்கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தின் மூலம் பணம் வரும். இன்று உங்களுக்கு நிறைய பண வரவு வரும் பணத்தை சேமிப்பீர்கள். நிம்மதியும் திருப்தியும் ஏற்படும். உங்க ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை



Click it and Unblock the Notifications











