இந்த ராசிக்காரங்க வீட்ல ஒரே கலவரம்தான் மவுன விரதம் இருங்க...

இப்ப இருக்கிற சூழ்நிலையில உடல் ஆரோக்கியம்தான் எல்லோருக்கும் அவசியம். ஆரோக்கியம் சரியில்லாட்டி எது இருந்தாலும் பிரயோஜனம் இல்லை. இன்றைக்கு யாருக்கு வருமானம் வரும் மருத்துவ செலவு யாருக்கு வரும்.

இப்ப இருக்கிற சூழ்நிலையில உடல் ஆரோக்கியம்தான் எல்லோருக்கும் அவசியம். ஆரோக்கியம் சரியில்லாட்டி எது இருந்தாலும் பிரயோஜனம் இல்லை. இன்றைக்கு யாருக்கு வருமானம் வரும் மருத்துவ செலவு யாருக்கு வரும். யாருடைய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று யோசிக்கிறீர்களா? உங்க கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன் பதில் தருகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு குடும்பத்துல அநாவசியமா செய்யுற வீண் செலவுங்களால, கடன் வாங்குற நிலை வந்துடும். அதனால சின்னமா செலவழிக்க பாருங்க. உத்தியோகத்துல இருந்து வந்த மந்த நிலை மாறிடும். சீனியர் அதிகாரிங்க உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னதா பாதிப்பு வரும் எச்சரிக்கையா இருங்க வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு புது வாய்ப்புங்க தேடி வரும். ஃப்ரண்ட்ஸுங்க கூட பேசுறதுனால மனசுக்கு இதமா இருக்கும். குடும்பத்துல பெரியவங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். பிள்ளைங்களும் படிக்குறதுல தங்களோட திறமைகளை வெளிப்படுத்துவாங்க. உத்தியோகம் பாக்குறவங்க இன்னிக்கு புது உற்சாகத்தோட செய்வீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு உங்களோட பணத் தேவைகள் பூர்த்தியாகிடும். கணவன் மனைவிக்குள்ளாற இருந்து மனஸ்தாபம் மறைஞ்சிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு வியாபாரம் பெருகி அமோகமா லாபம் கிடைச்சிடும். கவர்மெண்ட் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாத்த சலுகைகள் கிடைக்கும். வீட்டில் சின்னதா பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் கவனமா இல்லாட்டி கலவரமாயிரும்.

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

அதிர்ஷ்ட எண் : 48

சாதகமான நேரம் : இரவு 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த போட்டி பொறாமைங்க காணாம போயிடும். பெத்தவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போனா அவங்களோட அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்னிக்கு உங்களுக்கு பணவரத்து சுமாரா இருந்தாலும், குடும்பத்துல வீண் செலவுங்க செய்யுறதுனால கை காசு கறையும். அதனால செலவை கண்ட்ரோல் பண்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:25 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேசுறதை அவாய்ட் பண்ணிடுங்க. உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால மனசு அலைபாயும். அதனால, எந்த வேலையையும் கொஞ்சம் நிதானமா யோசிச்சி செய்யுறது நல்லது. சுபகாரிய முயற்சிங்களை தள்ளி வைக்குறது நல்லது. ஹெல்த் கண்டிஷன்லயும் கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு வேலை இல்லாம இருக்குற சிலருக்கு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஃப்ரண்ட்ஸுங்களோட ஐடியாவால உங்க பிரச்சனையும் சால்வ் ஆகி தெளிவு பிறக்கும். புதுசா எந்த முயற்சியும் பண்ணவேணாம். சொந்தக்காரங்களால மூலமா இன்னிக்கு சுபகாரிய செலவுங்க வந்துடும். வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்கிடுவீங்க. ஹெல்த் கண்டிஷன்லயும் கொஞ்சம் அக்கறை காட்டுங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 23

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு குடும்பத்துல பெரியவங்க கூட இருந்த மனஸ்தாபம் மறையும். பண வரத்தும் கூடிடும். பிசினஸ்லயும் எதிர்பாத்த மாதிரி வியாபாரம் பெருகி லாபம் அதிகமா இருக்கும். எந்த வேலையை சுலபமா செஞ்சி முடிச்சி ஜெயிச்சி காட்டுவீங்க. ஹெல்த் கண்டிஷன்ல இருந்து வந்த பாதிப்புங்களும் காணாம போயி நிம்மதி ஆகிடுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் இரவு 7:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. வீட்டுலயும் எதிர்பாக்காம திடீர் செலவுங்க வந்து கண்ணை கட்டும். மனைவி வழி சொந்தக்காரங்க மூலமா எதிர்பாக்காம ஒத்தாசை கிடைச்சிடும். பிள்ளைங்களும் இன்னிக்கு பொறுப்போட நடந்துக்குவாங்க. பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்க எதிர்பாக்காம அநாவசிய பிரச்சனைங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எச்சரிக்கையா இருக்குறது நல்லது. குடும்பத்துலயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. இல்லேன்னா அநாவசியமா டாக்டருக்கு பணத்தை கொடுக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு தன்னோட திறமையை நிரூபிக்க புதுசா பொறுப்புங்க தேடி வரும். பிசினஸ்லயும் எதிர்பாத்த மாதிரி லாபம் பெருகிடும். புதுசா பிசினஸ் பண்ற முயற்சி இருந்தா அதுலயும் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பிள்ளைங்களால குடும்பத்துலயும் சந்தோஷம் பெருகிடும். பண வரத்தும தாராளமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு சுபகாரிய பேச்சுவார்த்தை எதையும் செய்யாதீங்க. இல்லேன்னா இழுபறியாவே இருக்கும். கூடப்பொறந்தவங்க மூலமா சின்ன சின்னதா சங்கடங்கள், பிரச்சனைங்க முளைக்கலாம். கவனமா இருக்க பாருங்க. உங்களோட தண்டச்செலவுங்களை கண்ட்ரோல் பண்ணினா, குடும்பத்துக்கு தேவையான செலவுகளை பூர்த்தி செஞ்சிடலாம். பிசினஸ்லயும் லாபம் பெருகி முன்னேற்றம் உண்டாகிடும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு உங்க கூடப்பொறந்தவங்க மூலமா நல்ல செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல அநாவசியமா வெளிய சுத்த வேணாம். வெளியூர் பிரயாணத்தையும் அவாய்ட் பண்ணிடுங்க. உத்தியோகத்துலயும் கூட வேலை பாக்குறவங்க கிட்ட சுமூக உறவு தான் இருக்கும். பிசினஸ்லயும் லாபம் பெருகும். உங்க வருமானமும் ரெட்டிப்பாகிடும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் அற்புதமா இருக்கும். சின்னதா மன பாரமா இருக்கும். கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 5:30 முதல் பிற்பகல் 1:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, April 20, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion