Latest Updates
-
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்...
இந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு மனைவியால பிரச்சினைகள் வரப்போகுதாம்... பக்குவமா நடந்துக்கோங்க...!
ஒவ்வொரு நாளின் தொடக்கமும் எப்படி இருக்கப்போகிறது என்பதை நமது ராசியின் கணக்கீடுகளை பொறுத்து தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளின் தொடக்கமும் எப்படி இருக்கப்போகிறது என்பதை நமது ராசியின் கணக்கீடுகளை பொறுத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்றைய நாள் சில ராசிக்காரர்களுக்கு அதிசயங்களையும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ச்சியையும் தர காத்திருக்கிறது. உங்களின் ராசிக்கு இன்று காத்திருப்பது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளலாம்.


மேஷம்
மேஷம்
நீங்கள் ஒரு வேலை செய்பவராக இருந்தால், இன்று நீங்கள் மூத்த அதிகாரிகளிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறலாம், மேலும் உங்கள் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் முன்னேற்றம் சாத்தியமாகும். இருப்பினும், நீங்கள் உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் விரும்பாவிட்டாலும் செலவுகள் உங்களைத் தேடிவரும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்
பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் இது. முதலீடு செய்யும் திட்டமிட்டு இருந்தால் அதனை இன்று செய்யாமல் இருப்பது நல்லது. கிரகங்களின் எதிர்மறையான நிலை காரணமாக, நீங்கள் லாபத்திற்கு பதிலாக பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் மேலதிகாரிகள் இன்று உங்கள் மீது அதிருப்தி அடைவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், உங்கள் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் இன்று உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:40 முதல் 9:30 வரை

மிதுனம்
உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் தொடர்ச்சியான பிரச்சினைகள் காரணமாக நீங்கள் மனஅழுத்தமாக உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் மனதிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உங்கள் எல்லா கவலைகளையும் மறந்து உங்கள் மீது கவனம் செலுத்துவது நல்லது. எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி, உங்கள் பிரச்சினைகளுக்கு நிம்மதியாக தீர்வு காண முயற்சிக்கவும். பணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு நிதி நெருக்கடியைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் உயரும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் நீங்கள் கடன்களைக் கொடுத்தால், அது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 முதல் 10:00 வரை

கடகம்
உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக வேலை செய்வதால், முதுகெலும்பில் முதுகுவலி மற்றும் விறைப்பை நீங்கள் உணரலாம். நீங்கள் லேசான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வது நல்லது. சிறிய விஷயங்கள் தொடர்பாக இன்று நீங்கள் வீட்டின் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எந்த வேலை செய்தாலும் அதனை முழுமையாக முடிக்க முயலுங்கள். காதலர்களுக்கு மாலை நேரம் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

சிம்மம்
வேலையில் இருப்பவர்கள் இன்று வேலை செய்யும் பாணியை மாற்ற வேண்டும், வேலையை விரைவாக முடிக்க முயலுங்கள். மறுபுறம், வணிகர்கள் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் வணிகத்தில் சிறிது வேகம் இருக்கும். இருப்பினும் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். வீட்டின் அனைத்து உறுப்பினரின் ஆரோக்கியமும் நார்மாலாக இருக்கும். இன்று உங்கள் மனைவியுடன் நீங்கள் கோபப்பட்டால், வாதிடுவதற்குப் பதிலாக, விஷயத்தை அன்போடு கையாள முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் வீட்டின் அமைதி பாதிக்கப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 9:15 மணி வரை

கன்னி
நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தால், இன்று உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்களின் மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். அதே நேரத்தில், வணிகர்களுக்கு ஏற்ற இறக்கமான நிலைமைகளும் இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று, நீங்கள் அவர்களிடமிருந்து ஒரு சிறப்பு பரிசையும் பெறலாம். பணத்தின் அடிப்படையில் நாள் நன்றாக இருக்கும். நெருப்பு தொடர்பான எந்த வேலையும் செய்யும்போது இன்று மிகவும் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:25 மணி வரை

துலாம்
இன்று உங்களின் நேர்மறை ஆற்றலால் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் வேலையில் இருந்தால், உங்கள் மூத்தவர்களிடமிருந்து நீங்கள் முழு ஆதரவைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் வேலையும் பாராட்டப்படும். அதே நேரத்தில், வணிகர்கள் தங்கள் கடின உழைப்பின் நல்ல முடிவுகளையும் பெறலாம். இன்று நீங்கள் சில பெரிய வாடிக்கையாளர்களை சந்திக்கலாம். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். இன்று அவர்கள் உங்களை மிகவும் கவனித்துக்கொள்வார்கள். உங்கள் காதலிக்கு சர்ப்ரைஸ் அளிக்க நல்ல நாள். உங்கள் உடல்நிலையைப் பொருத்தவரை, இன்று உங்கள் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:20 முதல் 11:00 வரை

விருச்சிகம்
வணிகர்கள் இன்று எந்தவொரு சட்டவிரோத வேலையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள், இல்லையெனில் நீங்கள் நீண்ட கால சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். பண விஷயங்களில் முடிவுகள் கலவையானதாக இருக்கும். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், பொருத்தமான ஆலோசனையை எடுத்த பின்னரே உங்கள் இறுதி முடிவை எடுக்கவும். வீட்டின் சூழ்நிலை இன்று சரியாக இருக்காது. கடந்த சில நாட்களாக உங்கள் குடும்பத்திற்கு போதுமான நேரத்தை நீங்கள் கொடுக்க முடியாவிட்டால், இன்று அவர்கள் உங்களிடம் மிகுந்த கோபத்தில் இருக்கக்கூடும். உங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சித்தால் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை

தனுசு
உங்கள் நண்பர்கள் இன்று ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவர்களை முடிந்தவரை காப்பாற்ற முயற்சிக்கவும். இந்த நேரத்தில் அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்படலாம். வேலையை பொறுத்தவரை இன்று விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று உங்கள் முதலாளியின் கோபத்தால் நீங்கள் பாதிக்கப்படலாம். . இன்று பணத்தின் அடிப்படையில் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் பழைய கடனை நீங்கள் திருப்பிச் செலுத்த முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை

மகரம்
வேலை விஷயங்கள் இன்று சாதாரணமாக இருக்கும். வேலையாகவோ அல்லது வியாபாரமாகவோ இருந்தாலும், உங்கள் பணி சீராக நடக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் உங்கள் உடல்நிலை எதிர்மறையாக பாதிக்கப்படலாம். நாளின் இரண்டாம் பாகத்தில் ஏதேனும் ஒரு நல்ல செய்தி கிடைத்து நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். பண சூழ்நிலையில் திடீர் ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். உறவினர்களுடன், குறிப்பாக பெற்றோருடன் நீங்கள் தொடர்ந்து நல்லுறவைப் பேணுவீர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் இன்று நண்பர்களுடன் ஒரு சிறந்த நேரத்தை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 12 மணி வரை

கும்பம்
இன்று உங்கள் மனம் அதிக கலக்கத்திற்கு உள்ளாகும். உங்கள் மன சமநிலையை நீங்கள் பராமரிக்க வேண்டும். இந்த வழியில், சிறிய விஷயங்களை பெரிதுப்படுத்த வேண்டாம். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை செய்பவர்கள் உங்களின் மேலதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. கோபம், ஈகோ போன்ற உணர்ச்சிகளிலிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் நல்ல வாய்ப்புகளை இழந்துவிடுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், உங்கள் தந்தையின் உடல்நிலை மேம்படும். இது தவிர, உங்கள் வீட்டின் உறுப்பினருடன் நீங்கள் மோசமான உறவைக் கொண்டிருந்தால், இந்த விஷயத்தை தீர்க்க நீங்கள் ஒரு முன்முயற்சி எடுக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மீனம்
இன்று நீங்கள் மிகவும் அமைதியாக நடந்து கொள்ள வேண்டிய நாள், ஏனெனில் சிறிய விஷயங்களுக்கு கூட கோபப்படுவீர்கள். உங்களின் கோபம் இன்று உங்கள் வேலைகளை கெடுக்கக்கூடும். அதிக பணிச்சுமை காரணமாக நீங்கள் மிகவும் எரிச்சலடைவீர்கள். நீங்கள் அமைதியாக இருந்து உங்கள் வேலையைச் செய்தால் அது உங்களுக்கு நல்லது. இது தவிர, சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் தவறான முடிவை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் மூச்சுத்திணறல்கள் போன்ற பிரச்சினைகள் எழலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை



Click it and Unblock the Notifications











