Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷமான நாள் தெரியுமா?
செவ்வாய் கிழமை மங்கலகரமான நாள் இன்றைக்கு சிலருக்கு சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். சந்திரன் சஞ்சாரத்தினால் தனுசு ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் வரும், சந்திராஷ்டமத்தால் ரிஷப
செவ்வாய் கிழமை மங்கலகரமான நாள் இன்றைக்கு சிலருக்கு சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். சந்திரன் சஞ்சாரத்தினால் தனுசு ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் வரும், சந்திராஷ்டமத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். இன்றைய ராசி பலன்கள் எப்படி 12 ராசிக்காரர்களுக்கும் படித்து பலன் தெரிஞ்சுக்கங்க.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். ஒன்பதாம் வீட்டில் குரு, செவ்வாய் கேது சஞ்சரிக்க கூடவே சந்திரன் இணைகிறார். குரு சந்திர யோகம், குரு மங்கல யோகம், சந்திர மங்கல யோகம் பெற்றுள்ளது. இன்றைய தினம் உங்களுக்கு நிறைய பாக்யங்கள் தேடி வரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் தீரும். லாபம் வரும். செல்வம் செல்வாக்கு உயரும். புதிய செயல்களை தொடங்கும் முன்பாக ஆலோசனை பண்ணுங்க. பெண்களுக்கு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான நாள். உங்க ராசி அதிபதிக்கு உரிய செவ்வாய் கிழமை இன்றைய நாளில் முருகனை வணங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க. வம்பு வழக்குகள் வரலாம். சும்மாவே எட்டாம் வீட்டில் குரு, கேது, செவ்வாய் இருக்கிறார்கள் கூடவே சந்திரன் சேருகிறார். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. கோபத்தை கட்டுப்படுத்துங்க. வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். முருகப்பெருமானின் சஷ்டி கவசம் படிங்க. பாதிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : இரவு 7:55 முதல் இரவு 9:40 மணிவரை

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே இந்த நாளில் நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சந்திரன் உங்க களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சந்திரன், குரு, செவ்வாய்,கேதுவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. பொருளதார நிலை அதிகமாகும். நிறைய பணம் வரும். மூத்த சகோதரரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். கூட்டுத்தொழில் லாபத்தை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தில் இன்றைக்கு குதூகலமாக இருப்பீர்கள். இன்றைக்கு வெற்றிகரமான நாள். எதிர்களின் தொல்லை நீங்கும். பணவரவு அதிகமாகும் மேலும் நன்மைகள் அதிகமாக இன்று நீங்க பெருமாளை வணங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 37
தகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

கடகம்
சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை வரலாம் கவனிங்க. எதிரிகளால் தொந்தரவு அதிகரிக்கும். மனக்குழப்பம் வரலாம். சிலருக்கு புதிய வேலைகளை கிடைக்கலாம். சகோதர சகோதரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். பாதிப்புகள் நீங்க நீங்க கந்த சஷ்டி கவசம் படிங்க நன்மைகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் மாலை 6:30 மணிவரை

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி, குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான காரியங்கள் நடைபெறும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பதவிகள் தேடி வரலாம். புத்திரபாக்கியத்தில் சில தடைகள் ஏற்பட்டாலும் இன்றைக்கு கவலைகள் தீர நேரம் வந்து விட்டது. ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் கேது குருவினால் சில தோஷங்கள் ஏற்பட காரணமாகிறது. வேலை செய்யும் இடத்தில் நிதானமாக இருங்க. இந்த நாள் பொன்னான நாளாக அமையும். முருகனை வணங்கிட்டு நல்ல காரியங்களை செய்யத் தொடங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு வண்டி வாகனம் மாற்றலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை. புளிப்பு, காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள் அது உடம்பில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

துலாம்
சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். சந்தோஷ சம்பவங்கள் இன்றைக்கு அதிகம் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தன ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். கோபப்பட வேண்டாம். வாக்கு ஸ்தானத்தில் ராசி நாதன் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்சாப்பாடு விசயத்தில் கவனமாக இருங்க. துவரம் பருப்பு சேர்த்து சாப்பிடுங்க. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பேச்சுக்களை கேட்கவும். இன்றைக்கு ஆடை அணிகலன்கள் சேர்க்கை அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : முற்பகல் 10:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திரன் உங்க ராசியில் மூலம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். உங்க ராசியில் ஏற்கனவே குரு,கேது, செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். குரு மங்கல யோகமும், சந்திர மங்கல யோகமும், குரு சந்திர யோகமும் கிடைத்துள்ளது. வேலைப்பளு அதிகமாகும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களுக்கு இன்றைக்கு டென்சன், பரபரப்பு அதிகமாகும். பாதிப்புகள் நீங்க எல்லாம் வல்ல விநாயகப்பெருமானை வணங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : மாலை 4:20 முதல் இரவு 8:45 மணிவரை

மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகிறது. விசா தொடர்பான வேலைகளை இன்று தொடங்குங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். நவகிரக வழிபாடு நன்மையை கொடுக்கும். பொறுமையாகவும் நிதானமாகவும் இருங்க. இன்றைக்கு பணம் விசயத்தில் யாரையும் நம்பாதீங்க. விருந்துகளில் கவனம் செலுத்துவீர்கள். நீங்க இன்றைக்கு விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் மாலை 5:00 மணிவரை

கும்பம்
இன்றைக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே லாப ஸ்தானத்தில் குரு, கேது, செவ்வாய் சஞ்சரிக்கிறார்கள். உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் மூத்த சகோதரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கும். இன்றைக்கு உங்களுக்கு பொன்னான நாள், நீங்க தான தர்மங்கள் செய்யுங்கள். எதையும் யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள். கவனமாக இருங்கள். உங்களுக்கு உடல் நலக்குறைவு இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுங்கள். இன்றைக்கு பரபரப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை

மீனம்
மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்றைக்கு ரொம்ப நல்ல நாள் காரணம் தொழில் ஸ்தானத்தில் சந்திரன் குரு உடன் சஞ்சரிக்கிறார். குரு சந்திர யோகம் உள்ளதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு தேர்வுகள் எழுதியவர்களுக்கு இன்றைக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். புது வியாபாரம் ஆரம்பிக்க ரொம்ப நல்ல நாள். வெற்றிகரமான நாள். பண வருமானம் அதிகமாக கிடைக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தையும் அவ்வப்போது கவனிங்க. இன்றைக்கு குருபகவானை வணங்குங்கள். நன்மைகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : அதிகாலை 4:15 முதல் நண்பகல் 12:00 மணிவரை



Click it and Unblock the Notifications











