Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும்
இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பாக்கெட் நிறையப் போகுது தெரியுமா?
சனிக்கிழமை நாளான இன்று சிலருக்கு சாதகமாக இருக்கும் சிலருக்கு பாதகமாக இருக்கும். சிலருக்கு பண மழை பொழியும் சிலருக்கு மனதில் உற்சாகத்தை தரும். உங்க உடல் ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீ
சனிக்கிழமை நாளான இன்று சிலருக்கு சாதகமாக இருக்கும் சிலருக்கு பாதகமாக இருக்கும். சிலருக்கு பண மழை பொழியும் சிலருக்கு மனதில் உற்சாகத்தை தரும். உங்க உடல் ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா? இன்றைய ராசி பலன்களை படித்து தெரிஞ்சுக்கங்க.

மேஷம்
சூரியன் லாபத்தில் இருக்கிறார் என்றாலும் ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக்கொள்ளும் கவலைப்படாதீங்க பயணம் ஆறுதல் தரும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீங்க இருந்தாலும் உங்க தவறுகள் சிலரை அதிருப்திக்கு ஆளாக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போங்க. பணத்தை பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு போங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எண்ணெய் பலகாரங்களை அதிகமாக சாப்பிடாதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் இரவு 10:20 மணிவரை

ரிஷபம்
இன்றைக்கு உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்கும். காதல் வாழ்க்கை குதூகலமாக இருக்கும். குடும்பத்தில் இன்பமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் உற்சாகத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : காலை 6:00 முதல் முற்பகல் 11:25 மணிவரை

மிதுனம்
புதிய நட்புகள் உங்களுக்கு சந்தோஷத்தையும் தெம்பையும் கொடுக்கும். உங்களுடைய இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். காதல் உறவில் பிணைப்பு அதிகமாகும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும் பத்திரமாக செலவு செய்யுங்கள். உடல் நல பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : லைட் பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

கடகம்
இன்றைக்கு நீங்க ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பீங்க. ஏதோ ஒரு விசயம் உங்க மனதை அரித்துக்கொண்டு இருக்கும். மனம் சஞ்சலத்தோடு இருப்பதால் முக்கிய முடிவுகளை நீங்க இன்று எடுக்க வேண்டாம். பொறுமையோடும் நிதானத்தோடும் இருங்க. வேலையில் சோம்பேறித்தனம் ஏற்படும் உயரதிகாரிகள் கொடுத்த வேலையை இன்றைக்கு முடிக்க முடியாமல் திணறுவீர்கள். காதல் வாழ்க்கையில் கவனமாக இருங்க. குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும், அத்தியாவசிய தேவைக்காக நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் கண்வழி, உடல்வலி வர வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 43
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் இரவு 10:00 மணிவரை

சிம்மம்
ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க அது உங்களுக்கு நல்லதில்லை. எதையும் லேசாக எடுத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள். பண விவகாரங்கள் உங்களை பதம் பார்க்கும் கவனம், பர்ஸ் காலியாகும் வரைக்கும் செலவுகள் வரும். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

கன்னி
இன்று உங்களுக்கு சாதகமான நாள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரலாம். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் முடிவுகள் சந்தோஷத்தை தரும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்களின் திறமையை பலரும் பாராட்டுவார்கள். வாழ்க்கை துணையுடன் அன்பாக நேரத்தை செலவு செய்வீர்கள். உங்களின் காதல் வாழ்க்கையில் பிணைப்பு அதிகரிக்கும். பணவரவு அதிகமாக இருக்கும் பணத்தை பல வழிகளில் சேமிப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : பிற்பல் 3:00 முதல் மாலை 6:30 மணிவரை

துலாம்
இன்று வெற்றிகரமான நாள். பயணங்களிலும் செய்யும் வேலைகளிலும் திட்டமிட்டு செய்தால் வெற்றிகள் தேடி வரும். பண விவகாரங்களில் கவனமாக இருங்க. முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். நெருங்கிய உறவினரின் உடல் நலத்திற்காக செலவு செய்வீர்கள். குடும்ப உறவில் விட்டுக்கொடுத்து போங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க இல்லாவிட்டால் வயிறு பிரச்சினைகள் வந்து சிக்கலை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 11:00 மணிவரை

விருச்சிகம்
எதையும் திட்டமிட்டு பண்ணுங்க வெற்றி உங்க வாசலுக்கே வரும். இன்றைக்கு நீங்க முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காதீங்க. வேலை செய்யும் இடத்தில் பெண்டிங் வைக்க வேண்டியிருக்கும். அதுவே மன உளைச்சலை தரும். பண விவகாரங்களை கையாளும் போது கவனமாக இருங்க. இல்லாவிட்டால் இழப்பு ஏற்படும். மன உளைச்சல் உடலில் பிரச்சினையை ஏற்படுத்தும். சரியான மருத்துவ சிகிச்சை தேவை.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
எதையோ இழந்தது போல உணர்வீர்கள். பணி பாதுகாப்பு இல்லாதது போலவே நீங்கள் இருப்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிக திருப்தியை தரும். வேலை செய்யும் இடத்தில் எதையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து கொடுக்கவும் இல்லாவிட்டால் நஷ்டம் மன கஷ்டத்தை தரும். பணவரவும் பொருளாதார நிலையும் இன்றைக்கு சுமாராகத்தான் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அப்பாவின் உடல் நலத்தில் கவனமாக இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 2:25 மணிவரை

மகரம்
உங்களுக்கு இன்றைக்கு சாதனையான நாள். இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் நிதானமான ஸ்திரமான முடிவுகள் வெற்றியை தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிப்பீர்கள். காதல் துணையோடு நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். உங்க உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பணவரவும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்
இன்று உங்களுக்கு அற்புதமான நாள், சொந்த பந்தங்களுடன் கூடி உற்சாகமாக நேரத்தை செலவு செய்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் நீங்க ஈசியாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் பொருளாதார நிலையும் அற்புதமாக இருக்கும். பேங்க் பேலன்ஸ் அதிகமாகும். உங்களுடைய உற்சாகம் உடல் ஆரோக்கியத்தில் வெளிப்படும். புன்னகையோடு இன்றைய நாளை கடத்தி விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:20 மணிவரை

மீனம்
இன்றைக்கு உங்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதுவே உங்களுக்கு கவலையை தரும் மகிழ்ச்சியை குறைக்கும். எதையும் யோசித்து முடிவு எடுங்கள். காதல் வாழ்க்கையில் கவனம் தேவை சந்தோஷமாக பேசுங்க. பணவரவு குறைவாகவே இருக்கும் சேமிக்க முடியாது. வயிறு பிரச்சினை வரலாம் நேரத்திற்கு சாப்பிடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:05 மணிவரை



Click it and Unblock the Notifications