Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்த ராசிக்காரங்க மனக்குழப்பத்தோடு இருப்பீங்க...
இன்றைய தினம் ஏதாவது லக் அடிக்குமா? ஏதாவது அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா?
இன்றைய தினம் ஏதாவது லக் அடிக்குமா? ஏதாவது அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள் உங்க அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

மேஷம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். பயணங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

ரிஷபம்
இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி - இரவு 9 மணி

மிதுனம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பணவருமானம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம் : காலை 4.50 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை

கடகம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1 மணி மாலை 5 மணி

சிம்மம்
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.45 மணி முதல் மாலை 5.20 மணி வரை

கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.30 மணி இரவு 9.15 மணி

துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 21
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12 மணி இரவு 9 மணி

விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.30 மணி பிற்பகல் 11 மணி

தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம் மாலை 5 மணி - இரவு 10 மணி

மகரம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
ராசியான நிறம்: வெள்ளை
ராசியான எண்: 18
ராசியான நேரம் : காலை 7.45 மணி பிற்பகல் 12 மணி

கும்பம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.
ராசியான நிறம் : ப்ளூ
ராசியான எண் : 10
ராசியான நேரம் : காலை 7.15 மணி பிற்பகல் 2.05 மணி

மீனம்
இன்று திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ராசியான நிறம் : மெரூன்
ராசியான எண் : 2
ராசியான நேரம் : காலை 4.20 மணி பிற்பகல் 12.00 மணி



Click it and Unblock the Notifications











