Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
சிம்மம், மீனம் ராசிக்காரங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க...
சூரியன் ஆதிக்கம் நிறைந்த ஞாயிறு கிழமை. இந்த நாளில் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பும் வரும். சிலருக்கு மனதில் உற்சாகம் வரும், சிலருக்கு மன உளைச்சல் அதிகரிக்கும்.
சூரியன் ஆதிக்கம் நிறைந்த ஞாயிறு கிழமை. இந்த நாளில் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பும் வரும். சிலருக்கு மனதில் உற்சாகம் வரும், சிலருக்கு மன உளைச்சல் அதிகரிக்கும். வைகாசி மாதத்தின் கடைசி நாளான இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று இன்றைய ராசி பலனை படித்து தெரிஞ்சுக்கங்க. சிம்மம் ராசிக்காரங்க கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல பணியாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குன நல்ல லாபம் கிடைக்கும். திடீர்ன்னு சுபச் செலவுங்க வந்து கையை கடிக்கும். கூடப்பொறந்தவங்க மத்தியில ஒத்துமை குறையும். இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிகள் சின்னத் தடங்கலுக்கு பின்னாடி நல்ல விதமா முடியும். சாப்பாட்டு விஷயத்துல அக்கறை காட்டுறது அவசியம். பணவரத்து கூடிடும். மொத்தத்துல இன்னிக்கு அருமையான நாள்.
ராசியான நிறம்: ஆரஞ்ச்
ராசியான எண்: 14
ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, இன்னிக்கு கல்யாணம், சுபகாரிய முயற்சிகள் கைகூடும். ரொம்ப நாளா இழுபறியா இருந்த பழைய கடன் பாக்கியும் வசூலாகிடும். பேங்க் பேலன்ஸும் கூடும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அருமையான நாள். உத்தியோகத்துல இருக்குறவங்க வேலையில கவனமா இருக்க வேண்டியது அவசியம். வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் போறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். பண வரத்தும் அமோகமா இருக்கும். இன்னிக்கு எந்த வேலையையும் ரொம்பவே உற்சாகமா செஞ்சி முடிப்பீங்க.
ராசியான நிறம்: வெள்ளை
ராசியான எண்: 18
ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, குடும்ப வாழ்க்கையில கடந்த சில நாளா இருந்து வந்த பிரச்சனை தீர்ந்து போயி நல்லது நடக்கும். குடும்ப வாழ்க்கையும், லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் அருமைய இருக்கும். மனைவியோட அன்பு உங்களை திக்குமுக்காட வைக்கும். சொந்தக்காரங்களோட அன்பும் ஒத்தாசையும் திக்குமுக்காட வைக்கும். பிள்ளைங்களால பெருமை கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமான பயணங்களால அலைச்சலும் டென்ஷனும் இருந்தாலும் கூட கடைசியில நல்லது நடக்கும்.
ராசியான நிறம்: பச்சை
ராசியான எண்: 15
ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு எதிர்பார்க்காத உதவி தேடி வரும். வண்டி வாகனத்தில் போகும்போது எச்சரிக்கையா நடந்துக்கோங்க. உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்கிட்டா உங்களுக்கு வேலைச்சுமை கம்மியாகும். சொந்தக்காரங்களால மனக்கஷ்டம் உண்டாகலாம். பிசினஸ்ல எதிர்பாக்காத செலவுகள் வந்துடும். லவ் பண்றவங்களுக்கு உற்சாகமான நாள். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும்.
ராசியான நிறம்: இளம் சிவப்பு
ராசியான எண்: 6
ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வெளியூர் பிரயாணத்துல எச்சரிக்கையா இருந்தா பிரச்சனை வராம தவிர்த்துடலாம். உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்க கிட்ட தேவையில்லாம வாக்குவாதம் பண்ணாதீங்க. செய்யுற வேலையில நிதானப்போக்கோட இருக்க வேண்டியது அவசியம். பண வரத்தும் இன்னிக்கு அமோகமா இருக்கும். இன்னிக்கு நீங்க மவுன விரதம் இருந்தா பிரச்சனை வராம தப்பிக்கலாம்.
ராசியான நிறம்: ப்ரௌன்
ராசியான எண்: 37
ராசியான நேரம்: பிற்பகல் 4.30 மணி - இரவு 11 மணி

கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களை அனுசரிச்சி நடந்துகிட்டா நீங்க எதிர்பாத்த லாபம் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்களும் உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. புதுசா நகை நட்டுன்னு வாங்குவீங்க. செல்வாக்கும் கூடிடும். லவ் பண்றவங்களுக்கு யோகமான நாளா இருக்கும். வீட்டுத் தேவைகளும் பூர்த்தியாகிடும். முடியாதுன்னு சொன்ன வேலையை கூட சுலபமா முடிச்சி காட்டுவீங்க. பண வரத்தும் தாராளமா இருக்கும். மொத்தத்துல இன்னிக்கு இனிமையான நாளா இருக்கும்.
ராசியான நிறம்: க்ரீம்
ராசியான எண்: 7
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

துலாம்
துலா ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். பெத்தவங்களோட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். ஃப்ரண்ட்ஸுங்க வர்றது மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். குடும்பத்துலயும் எல்லோரும் உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க. பண வரத்து சுமாராவே இருக்கும். அதனால இருக்குற பணம் நகையை பத்திரமா பாத்துக்குறது அவசியம். செய்யுற வேலையை ரொம்ப திறமையா செஞ்சி முடிப்பீங்க.
ராசியான நிறம்: மெரூன்
ராசியான எண்: 25
ராசியான நேரம்: காலை 4.20 பிற்பகல் 12 மணி

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு செய்யுற வேலையில ரொம்பவே ஈடுபாடு காட்டுவீங்க. வண்டி வாகனத்துனால தண்டச் செலவுங்க வந்துடலாம். கவனமா இருக்க பாருங்க. பிசினஸ்ல பணியாட்களை அனுசரிச்சி நடந்துகிட்டா லாபம் வரும். ஃப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட்டுனால கடன் சுமையும் குறையும். குடும்ப வாழ்க்கையும், லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு அருமையான நாள். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது அவசியம். இல்லேன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க வேண்டியிருக்கும்.
ராசியான நிறம்: ப்ளூ
ராசியான எண்: 2
ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோத்துல இருக்குறவங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடிடும். குடும்பத்துலயும் அமைதி தவழும். புது பொருட்களை வாங்குறதுல அதீத ஆர்வம் பிறக்கும். கூடப்பொறந்தவங்க சப்போர்ட் பண்ணுவாங்க. பிசினஸ் பண்றவங்க கொஞ்சம் நிதானமா யோசிச்சி முடிவெடுத்தா, பெருசா நட்டம் வராம பாத்துக்கலாம். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது அவசியம்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 5
ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

மகரம்
மகர ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக நீங்க எடுக்குற முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கு நடுவுல இருந்து ஊடல் காணாம போயி கூடல் வந்துடும். பிள்ளைங்களோட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். குடும்பத்துலயும் சுபகாரிய முயற்சிகள் கைகூடும். புது பொருட்களை வாங்குவீங்க.
ராசியான நிறம்: நீலம்
ராசியான எண்: 8
ராசியான நேரம்: காலை 5 மணி - காலை 6 மணி

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களோட சப்போர்ட் கிடைக்கும். அதோட பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக நீங்க போட்ட ப்ளான் வெற்றிகரமா நடந்து முடியும். குடும்பத்துல ஒத்துமை காணாம போயிடும். பண வரத்தும் அமோகமா இருக்கும். இருந்தாலும், செலவு கட்டுக்கடங்காம போகும். பணத்தை எண்ணி எண்ணி சிக்கனமா செலவழிச்சா கடன் வாங்காம தப்பிக்கலாம்.
ராசியான நிறம்: கருநீலம்
ராசியான எண்: 2
ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். மனசுலயும் நிம்மதியும் சந்தோஷமும் கூடிடும். புதுசா சொத்து பத்து வாங்குற முயற்சிகள் வெற்றிகரமா முடியும். சொந்தக்காரங்க மூலமா இனிப்பான சேதிகள் தேடி வரும். குடும்பத்துலயும் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். இன்னிக்கு மனசுல குழப்பம் இருந்தாலும், செய்யுற வேலையை நேர்த்தியா மன திருப்தியோட செஞ்சி முடிப்பீங்க.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 4
ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி



Click it and Unblock the Notifications











