Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சனிபகவான் யார் பக்கம் இருக்கப் போகிறோர்?... யாரை டார்ச்சர் செய்யப் போகிறார்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
புதிய நபர்களுடைய நட்பு அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய மிகத் திறமையான பேச்சுக்களின் மூலமாக லாபம் அடைய வாய்ப்புண்டு. நண்பர்களுடைய உதவியினால் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவிக்கு அடையே உறவு மேம்படும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல்கள் உருவாகும். பயணங்களின் மூலம் லாபம் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
போட்டிகளில் நீங்கள் நினைத்தபடியே வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். நண்பர்களுடன் கேளிக்கை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். செய்கின்ற தொழிலில் மேன்மை அடைவதற்கு பல புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கடனுதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். செய்கின்ற செயல்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்
வெளியாட்களிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்கள், புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரியோர்கள், மகான்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். வீட்டில் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பரம்பரை சொத்துக்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய மனதுக்குள் தோன்றும் புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டங்க்ள தீட்டி அதை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டுக்கு புதிதாக வரும் நபரால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சமூக சேவை செய்து கொண்டிருப்பவர்களுக்கு பெரும் புகழ் உண்டாகும். வாகனங்கள் மாற்றும் வாய்ப்பு உருவாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு பெரும் லாபம் ஏற்படும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடன் உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். விளையாட்டு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து போகும். சிறிய பயணத்தை மேற்கொள்வீர்கள். அது அனுகூலத்தையே தரும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். எதையும் தன்னம்பிக்கையுடன் துணிந்து செயல்படுத்துவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி
நிலம், வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் உள்ளது.

துலாம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் நாளாக அமையும். அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், சற்று தள்ளிநின்று பழகுவதே சிறந்தது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

தனுசு
விவாதங்களில் ஈடுபடுகின்ற பொழுது, மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். அதன்மூலம் மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிதாகப் பயிற்சிகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். எந்த செயலாக இருந்தாலும் அதில் கொஞ்சம் கூடுதல் நிதானம் தேவை. தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்களினால் சுப செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்க்ள். குழந்தைகளை அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரையில் இன்றைக்கு சொத்து பற்றிய விஷயங்களையோ கொடுக்கல் வாங்கலையோ தள்ளி வைப்பது சிக்கலில் இருந்து காப்பாற்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
இன்று பொருளாதார முன்னேற்றம் பெருகும். அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆரோக்ய அற்புதமாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் அன்றாட வாழ்வில் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். ஆனால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை தளர்ந்து போகாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
இன்று உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை, உங்கள் மேல் அதிகாரி ஒப்படைப்பார். சக ஊழியர்களால் இதுவரையில் ஏற்பட்டு வந்த பிரச்னைகள் நீங்கும். பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும். புகழின் உச்சிக்கு உங்களை இட்டுச் செல்லும். ஆனால் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டியது உங்களுடைய பொறுப்பு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
