Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
ஏன் இந்த ரெண்டு ராசிக்கு மட்டும் மகாலட்சுமி அள்ளி அள்ளி கொடுக்குறா தெரியுமா?...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் கூடுதலாக அனுசரித்துச் செல்லவும். உங்களுடைய கோபத்தை விட்டுவிட்டு, கொஞ்சம் நிதானமாக சிந்தித்துச் செயல்படவும். வாகனங்களுக்குக் கொஞ்சம் பராமரிப்பு செலவு வரும். போட்டித் தேர்வுகளில் கொஞ்சம் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். நீங்கள் எடுத்துச் செல்கின்ற உடைமைகளில் கொஞ்சம் கவனம் வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பயணங்களின் வழியாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம்அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
வேலை விஷயமாக உங்களுடைய எதிர்காலப் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிதாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நீங்கள் நினைத்தபடி வெற்றி கிடைக்கும். செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழல்கள் உருவாகும். குடும்ப நபர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்
வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். இதுவரையிலும் தடைபட்டு வந்த செயல்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடைய வாழ்க்கையில் பிரிந்து சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண" 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
பயணங்களின் மூலம் உங்களுடைய எதிர்பார்ப்புகள் அத்தனையும் நிறைவேறும். வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வீர்கள். மனதுக்குப் பிடித்த நபர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் மாற்றங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்பட்டு நிற்கும். பரம்பரை சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, அன்பு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்க்ள பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் வர்த்தகம் சம்பந்தப்பட்ட பணிகளில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
எந்த வேலை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். தேவையில்லாத வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்த சகாதரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. இதுவரை வராமல் இருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேருவதற்கான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடன் இருக்கின்றவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தேவையில்லாத வீணான செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களுடைய புதுவிதமான மாற்றங்களால் உங்களுக்கு லாபகரமான சூழல்கள் உருவாகும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்களுக்கு ஒரு நல்ல தீர்வு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் இருக்கும்.

மகரம்
பண விஷயங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சின் சின்ன பாதிப்புகள் ஏற்படும். நீண்ட கால நண்பர்களைச் சந்திக்கும் நிலை உருவாகும். இதனால் மனம் மகிழ்ச்சி அடையும்.எளிதில் முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்த செயல்கள் முடிய கொஞ்சம் காலதாமதம் ஆகும். உங்கள் மீதான நம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருகு்கும்.

கும்பம்
புதிய நபர்களிடம் புசுகின்ற பொழுது, கொஞ்சம் கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். செய்கின்ற செயலில் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டியது நல்லது. வேலை சம்பந்தமாக அலைச்சல்கள் மற்றும் பதட்டங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

மீனம்
நண்பர்கள் மூலமாக தேவையான ஆதாயங்கள் ஏற்படும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் மற்றும் வரன்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும். செய்கின்ற செயல்களில் உங்களுடைய உழைப்பு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள மேலதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில் உங்களுக்குச் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











