இன்றைக்கு எந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டணும் தெரியுமா?

இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? இன்றைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதோ என்று நினைக்கிறீர்களா?

இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? இன்றைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதோ என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள் உங்க அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்க உடல் நலம் சுமாராக இருக்கும் உடம்பில் மறைந்திருந்த நோய்கள் எட்டிப்பார்க்கும். பொருளாதார ரீதியாக இன்றைக்கு சிறப்பான நாள். உங்க சேமிப்பு உயரும். உங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். உங்க தேவைகள் பூர்த்தியாகும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களின் திறமை பளிச்சிடும் சந்தோஷம் அதிகமாகும். இன்று உங்கள் வாழ்க்கை துணைவர், காதல் துணைவர் அழகான சர்ப்ரைஸ் உடன் உங்களை மகிழ்விப்பார்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று ரொம்ப பிஸியாக இருப்பீர்கள். நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் பொருளாதார மந்தநிலை நிலவும். மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். ஆன்மீக பயணம் மன அமைதியை கொடுக்கும். மாணவர்கள் தேர்வில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இன்று காதலான நாள், வாழ்க்கை துணையுடன் ரொமான்ஸ் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் இரவு 7:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். மேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடக்கும் என்றாலும் கவனமாக இருங்க. சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறையும் ஆர்வமும் அதிகரிக்கும். காதல் விவாகாரங்கள் களைகட்டும் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : விடிகாலை 4:10 முதல் பிற்பகல் 3:50 மணிவரை

கடகம்

கடகம்

நீங்க இன்றைக்கும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருள் சேரும். வேலையில் புது பொலிவுடனும் தெம்புடனும் இருப்பீர்கள். புது வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் லாபத்தை கொடுக்கும். மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு ஆனந்தம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : மாலை 6:15 முதல் இரவு 11:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

பணவரவு நன்றாக இருக்கும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். கடன் பிரச்சினைகள் தீரும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ரொமான்ஸ் உணர்வு அதிகமாகும். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்தான் சுறுசுறுப்பாக வேலை செய்வீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கன்னி

கன்னி

உங்களுக்கு இன்றைக்கு மனதில் சில குழப்பம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடி வரும். தாராள பணவரவு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களின் திறமை பளிச்சிடும். உங்க உடல் நலம் இன்று அற்புதமாக இருக்கும். பணத்தை பத்திரமாக கையாளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : விடிகாலை 5:20 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்றைய தினம் உங்களுக்கு தேவையில்லாத விரைய செலவுகள் அதிகமாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது, சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகளால் மனதில் கஷ்டம் ஏற்படும்.

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. காதல் வாழ்க்கையில் துணையோடு பேசும் போது கவனமாக பேசுங்க இல்லாவிட்டால் விரிசல் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 38

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். காதல் துணையோடு ரொமான்ஸ் அதிகமாகும். இன்று காதலான நாளாக அமையப்போகிறது.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:05 முதல் இரவு 9:30 மணிவரை

தனுசு

தனுசு

உங்களின் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும் அலுவலகத்தில் அற்புதமாக வேலை செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 31

சாதகமான நேரம் : மாலை 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

மகரம்

மகரம்

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். இன்று ரொமான்ஸ் நிறைந்த நாளாக அமையப்போகிறது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:05 மணிவரை

கும்பம்

கும்பம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து போங்க. காதல் துணையோடு பேசும் போது கவனமாக பேசுங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 12:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்றைய தினம் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும் சந்தோஷம் அதிகமாகும். உங்க குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளால் சுப செய்திகள் ஏற்படும். சொந்த பந்தங்களினால் உதவி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இன்று ஏமாற்றமான நாளாக இருக்கும். திட்டமிட்ட விசயம் நடக்காமல் போக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் எதையும் ஆலோசித்து செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : விடிகாலை 5:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, March 10, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion