Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
சுக்கிரன் பார்வை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை தரும் தெரியுமா?
திங்கட்கிழமை இந்த வாரத்தின் முதல் வேலை நாள் சுக்கிரன் பார்வையால் சில ராசிக்காரங்களுக்கு சந்தோஷம் பொங்கும். பண வருமானம் வரும். யாருடைய காதல் சக்சஸ் ஆகும் உடல் ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கும்?
திங்கட்கிழமை இந்த வாரத்தின் முதல் வேலை நாள் சுக்கிரன் பார்வையால் சில ராசிக்காரங்களுக்கு சந்தோஷம் பொங்கும். பண வருமானம் வரும். யாருடைய காதல் சக்சஸ் ஆகும் உடல் ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா? இன்றைய ராசி பலன்களை படித்து தெரிஞ்சுக்கங்க.

மேஷம்
மேஷ ராசியின் மீது குருவின் பார்வை விழுகிறது. சுக்கிரனும் 12ஆம் வீட்டில் உச்சமடைந்திருக்கிறார். மேரேஜ் லைஃப்ல இன்னிக்கு நல்ல விஷயங்கள் நடக்கலாம். செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுகிறது. ஃபேமிலி லைஃப் ரொம்ப ஸ்மூத்தா நகரும். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். வேலை நெருக்கடி இருக்குறதுனால ரொம்ப டயர்டா ஃபீல் பண்ணுவீங்க. சில விஷயத்தை செய்ய நெனைச்சாலும் ஃபைனான்ஸ் பொசிஷன் அதுக்கு இடம் கொடுக்காது.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

ரிஷபம்
உங்க ராசிநாதன் சுக்கிரன் உச்சத்தில இருக்கார் அதுவே சந்தோஷம் தரும். சந்தோஷம் தரக்கூடிய நிலையில் சனிபகவானும் இருக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சனி இருப்பதால் இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்க இன்க்ரிமெண்ட் பத்தி உங்க முதலாளி பேசுறதுக்கு வாய்ப்பிருக்கு. குரு உங்க இரண்டாவது வீட்டினை பார்ப்பதால் பண வருமானம் அதிகமாக இருக்கும். பிசினஸ் பண்றவங்க எக்ஸ்போர்ட் பிசினஸ்ல முதலீடு பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல நீங்க கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. லவ் பண்றவங்க லவ் மேட்டரை வீட்டுல சொல்றதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. உங்க காதல் கல்யாணத்தில் முடியும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 13
சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்
சுக்கிரன் பத்தாம் வீட்டில் உச்சமடைந்திருக்கிறார் குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். நல்ல சாப்பாட்டை சாப்பிடுங்க. பணவரவும் நார்மலாவே இருக்கும். எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு வாய்ப்பு வந்தா நல்லா யோசனை பண்ணி காரியத்துல இறங்குங்க. இல்லேன்னா நீங்க ஏமாந்து போவீங்க. ஆஃபீஸ்ல இன்னிக்கு நிலைமை உங்களுக்கு ஃபேவராவே இருக்கும். குடும்பத்துலயும் சந்தோஷமும் அமைதியும் நிலைக்கும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்
சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் உச்சமடைந்திருக்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாவது வீடான குடும்பம் தன ஸ்தானத்தின் மீது விழுகிறது. பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். இன்னிக்கு நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. குடும்பத்தோட பொழுது போக்குறதுக்கும் டைம் கிடைக்கும். அது உங்களுக்கும் மறக்க முடியாத அனுபவமா இருக்கும். ஒய்ஃபும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. படிக்கிற பசங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். படிப்புல ஆர்வம் கூடிடும். இன்னிக்கு நல்ல விஷயத்துக்காக பணத்தை செலவு பண்றதுக்கு தயங்க மாட்டீங்க. உங்க திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

சிம்மம்
குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சனியும் சந்தோஷத்தை தரப்போகிறார். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லபடியா விடிஞ்சிருக்கு. ப்ரமோஷனுக்கு வாய்ப்பிருக்கு. வேலையில்லாதவங்களுக்கு புது வேலை கிடைக்கலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அமோகமான நாளா இருக்கும். லாபம் கொட்டும். ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இருக்கும். அதே நேரம், பணம் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்க. மேரேஜ் லைஃப்லயும் பிரச்சனை இருக்காது. ஒய்ஃப் ஹெல்த் கண்டிஷனைப் பத்தி கவலைப்படுங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கன்னி
களத்திர ஸ்தானத்தில் காதல் நாயகன் சுக்கிரன் இருக்கிறார். காதல் மலரும். அதே நேரம் வீட்டில் மனைவியுடன் வாக்குவாதம் செய்யாதீங்க. இன்றைக்கு ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. உங்க சந்தோஷத்துக்காக யாருக்காவது கடன் கொடுக்கலாம். மேரேஜ் லைஃபும் ரொம்பவே ஸ்மூத்தா நகரும். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். இன்னிக்கு ஆஃபீஸ்ல கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. கூட வேலை செய்யுறவங்க உங்களைப் பத்தி தப்பான செய்தியை பரப்பலாம், கவனமா இருந்து வேலையை மட்டும் பாருங்க. யார் கிட்டையும் வாயை கொடுத்து வம்பில மாட்டிக்காதீங்க. உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்
உங்க ராசிக்கு மூன்றாவது வீட்டில் செவ்வாய் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் நீங்க ரொம்ப கவனமாக இருங்க. கார சாரமாக பேசி பிரச்சினையில மாட்டிக்காதீங்க. இன்னிக்கு வீட்டு பிரச்சனையை தீர்க்குறதுல உங்க ஒய்ஃப் ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. அதனால அவங்களை சந்தேகப்படுறதை அவாய்ட் பண்ணுங்க. இல்லேன்னா உங்களுக்கு தான் சிக்கல். பிசினஸ் பண்றவங்களுக்கு சிக்கல் வர வாய்ப்பிருக்கு. கவனமா இருக்குறது நல்லது. ரொம்ப நாளா வராம இருந்த பணம் இன்னிக்கு கைக்கு வந்து சேரும். அதனால ரொம்பவே உற்சாகமாக ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்
உங்க ராசிக்கு இன்னைக்கு சந்தோஷமான நாள். ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சத்தில இருக்கிறார். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு முக்கியமான நாளாக அமையும். சனி சாதகமாக இருக்கிறார். குரு இரண்டா வீட்டில் இருப்பதால் பண வருமானம் மனதில் உற்சாகத்தை தரும். இன்னிக்கு குடும்பத்துல அமைதியும் சந்தோஷமும் நீடிக்கும். உங்க ஒய்ஃபை சந்தேகப்படுறதை அவாய்ட் பண்றது நல்லது. உங்க ஒய்ஃபும் உங்க கிட்ட ரொம்ப அந்நியோன்யமா இருப்பாங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை

தனுசு
நான்காம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார். குரு உங்க ராசியில இருக்கிறார். ராசி நாதன் ஆட்சி பெற்றிருப்பது சந்தோஷத்தை அதிகமாகும். சனி உங்களுக்கு சாதகமாக இல்லை. ஏழரை சனி சங்கடத்தை தரும். சில சமயத்துல நீங்க எடுக்குற முடிவுகள் உங்க கைமீறி போயிடும். அந்த சமயத்துல அது உங்க குடும்பத்தையும் பாதிக்க வாய்ப்பிருக்கு. அந்த நேரத்துல நீங்க யார் மனசையும் கஷ்டப்படுத்தாம புத்திசாலித்தனமா நிதானமா நடந்துக்கோங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். இருந்தாலும் அவசரப்படாதீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சின்னதா இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்கிறது நல்லது. காதலை சொல்லும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மகரம்
ஏழரை சனி உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கும் என்றாலும் சுக்கிரனால் லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கும். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சி நடந்துக்குவீங்க. கல்யாணம் ஆனவங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். உங்க பிரச்சனை எல்லாத்தையும் உங்க ஒய்ஃப் தீர்த்து வச்சிடுவாங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். அதனால வீட்டுக்கு தேவையானதை வாங்குவீங்க. ஆஃபீஸ்லயும் இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். புரமோசன் பத்தி நீங்க உங்க ஆபிஸ்ல பேசுங்க நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்
உங்க ராசிக்கு இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார். குடும்பம் குதூகலமாக இருக்கும். குரு லாபத்தில் உட்கார்ந்திருப்பதால் நிறைய லாபத்தை கொடுப்பார். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கும். டென்ஷனை குறைச்சிக்கோங்க. ரொம்ப நாளா இருந்துவந்த கடன் பிரச்சனை இன்னிக்கு சால்வ் ஆகிடும். இன்னிக்கு ஆஃபீஸ்ல சந்தோஷமாக இருப்பீங்க. இன்னிக்கு உங்க குடும்ப வாழ்க்கையும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

மீனம்
சுக்கிரன் உங்க ராசியில் உச்சத்தில் இருப்பது காதலை மலர வைக்கும் கூடவே செவ்வாயின் பார்வையும் உங்க ராசியின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பண வரவு நல்லா இருக்கும். சங்கடங்கள் தீரும் நாள் சந்தோஷத்தை தரும். இன்னிக்கு புதுசா ஏதாவது பண்றதா இருந்தா கொஞ்சம் வெய்ட் பண்றது நல்லது. வேற வேலைக்கு ட்ரை பண்றீங்கன்னா, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்குறது நல்லதில்லை. ஃபைனான்ஸ் விஷயத்துலயும் கொஞ்சம் கவனமா இருங்க. அவசரப்பட்டு எதுலயும் இண்வெஸ்ட் பண்ணாதீங்க. செலவு பண்றதை கண்ட்ரோல் பண்ணுங்க. நாள் நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெருன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை



Click it and Unblock the Notifications











