Latest Updates
-
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்!
இந்த நாள் யாருக்கு சந்தோஷமான நாள் தெரியுமா? - இன்றைய ராசிபலனை படிங்க...
இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும். மகிழ்ச்சியாக இருக்குமா? சவால் நிறைந்ததாக இருக்குமா. இதோ இன்றைய ராசிபலனை படிங்க உங்க கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும். மகிழ்ச்சியாக இருக்குமா? சவால் நிறைந்ததாக இருக்குமா. இதோ இன்றைய ராசிபலனை படிங்க உங்க கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.

மேஷம்
இன்னிக்கு குடும்பத்துல சுபச் செலவு செய்யுறதுக்கு சந்தர்ப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்குள்ளாற இருந்த மனஸ்தாபம், ஊடல் காணாம போயி கூடல் அதிகமாயிடும். அதனால மனசும் அமைதியாகிடும். பிசினஸ்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். சாயந்திரத்துக்கு மேல உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் வர்றதுனால எதுலயும் கொஞ்சம் எச்சரிக்கையோட இருந்துக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் 21
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6.00 மணி - இரவு 10 மணி

ரிஷபம்
இன்னிக்கு சுபகாரிய பேச்சுவார்த்தையில நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அதனால குடும்பத்துலயும் சந்தோஷமான சூழ்நிலை நிலவிடும். எந்த காரியத்தையும் நீங்க ரொம்பவே பொறுப்போட செஞ்சி முடிச்சிடுவீங்க. பணவரத்தும் இன்னிக்கு அமோகமா இருக்கும். இருந்தாலும் புதுசா எதுலயும் இண்வெஸ்ட் பண்ண வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் 14
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.40 மணி - இரவு 09.25 மணி

மிதுனம்
இன்னிக்கு சுபகாரிய பேச்சுவார்த்தையில இடைஞ்சல் தடங்கல் ஏற்பட்டுடும். அநாவசிய செலவுங்களை கட்டுப்படுத்தி, அவசியமான செலவுக்கு மட்டுமே பணத்தை வெளியில எடுங்க. இல்லேன்னா கையிருப்பு கறைஞ்சிடும். எதிர்பாக்காம கிடைக்குற ஒத்தாசையால மனசு ரொம்பவே லேசாகிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களால பிரச்சனை வந்துடலாம். எச்சரிக்கையா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 25
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.40 மணி - இரவு 09.25 மணி

கடகம்
இன்னிக்கு, ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால அநாவசிய பிரச்சனைங்க முளைக்கலாம். கவனமா இருக்க பாருங்க. பிள்ளைங்களால அநாவசிய செலவுங்க வந்து கையை கடிச்சிடும். பிசினஸ்லயும் லாபம் பெருகிடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா ஒத்தாசை கிடைச்சிடும். அதனால பண நெருக்கடியும் தீந்துடும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : காலை 10.05 மணி - இரவு 10.40 மணி

சிம்மம்
இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. எதிர்பாத்த நல்ல செய்தி காதுக்கு வந்துடும். வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்கிடுவீங்க. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிடும். இருந்தாலும் இப்ப இருக்குற நிலையில அதை கொஞ்ச நாளைக்கு தள்ளி போடுறது நல்லது. கூடப்பொறந்தவங்க மூலமா சந்தோஷமான செய்தி வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.00 மணி - இரவு 08.00 மணி

கன்னி
இன்னிக்கு எதிர்பாக்கம வர்ற ஒத்தாசையால கடன் பிரச்சனை காணாம போயிடும். குடும்பத்துலயும் சந்தோஷமும் அமைதியும் நிலவும். கூடப்பொறந்தவங்க கூட நெருக்கம் கூடிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு புது பொறுப்புங்க தேடிவரும். எதிர்பாத்த பண வரத்து வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.55 மணி - பிற்பகல் 02.00 மணி

துலாம்
இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க ஹெல்ப் பண்றதுனால பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். கல்யாணம் சம்பந்தமான பேச்சுவார்த்தை கைகூடி வர்றதுக்கும் இன்னிக்கு யோகம் இருக்கு. கூடவே எதிர்பாத்துட்டு இருந்த சுபச் செய்தியும் உங்க காதுக்கு வந்துடும். குடும்பத்துலயும் பிள்ளைங்களால சந்தோஷமான சம்பவங்கள் நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : மாலை 06 மணி - இரவு 10.45 மணி

விருச்சிகம்
இன்னிக்கு அநாவசிய செலவுங்களால உங்க கையிருப்பு கரைஞ்சிடும். அதனால ஃப்ரண்ட்ஸுங்க கிட்ட கையேந்துற நிலைமை வந்துடும். கவனமா இருங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு சின்னதா பிரச்சனைங்க முளைக்கலாம். உங்க முயற்சிக்கு குடும்பத்துல இருக்குறவங்களும் சப்போர்ட் பண்ணுவாங்க. கல்யாண பேச்சுவார்த்தை இழுபறியாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 32
அதிர்ஷ்ட நேரம் : மாலை 04.30 மணி - இரவு 10.05 மணி

தனுசு
இன்னிக்கு சொந்தக்காரங்க மூலமா சுபச் செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். வீட்டுக்கு தேவையான புது சாமான்கள் வாங்குறதுக்கு இன்னிக்கு நாள் அருமையா இருக்கு. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க ஒத்தாசை பண்ணுவாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு லாபம் அமோகமா இருக்கும். பிசினஸ் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா அவாய்ட் பண்றது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 09
அதிர்ஷ்ட நேரம் : காலை 05.55 மணி - மாலை 12.20 மணி

மகரம்
இன்னிக்கு புதுசா சொத்து பத்து வாங்குறதுக்கு அருமையான நாள். பெரிய மனுஷங்களோட நெருக்கும் ஏற்பட்டுடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனிர் அதிகாரிங்க கிட்ட இருந்து பாராட்டு கிடைச்சிடும். பிள்ளைங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் காணாம போயிடும். வருமானம் கூடி, பேங்க் பேலன்ஸும் எகிறிடும். குடும்பத்துலயும் சந்தோஷமும் அமைதியும் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் : மாலை 02.50 மணி - மாலை 09.18 மணி

கும்பம்
இன்னிக்கு பிசினஸை டெவலப் பண்றதுக்கு வெளியில கடன் வாங்குற நிலைமை ஏற்படும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால செலவு கட்டுக்கடங்காம போயிடும். அதனால சிக்கனமா செலவழிச்சி செலவை கண்ட்ரோல் பண்ண பாருங்க. இதனால கடன் வாங்குறதை அவாய்ட் பண்ணலாம்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் 11
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.25 மணி - பிற்பகல் 2.15 மணி

மீனம்
இன்னிக்கு சாயந்திரம் வரைக்கும் சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மனசு சஞ்சலமாவே இருக்கும். அதனால வெளிய எங்கயும் போகாம வீட்டுலயே இருக்க பாருங்க. வெளியில பிரயாணம் பண்றதா இருந்தா, இந்த சூழ்நிலையில அவாய்ட் பண்றது நல்லது. தேவையில்லாத விஷயத்துலு மூக்கை நுழைக்காதீங்க. சுபகாரிய பேச்சுவார்த்தையை கொஞ்ச நாளைக்கு தள்ளி வச்சிடுங்க. பண விஷயத்துல கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோட இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : காவி
அதிர்ஷ்ட எண் 31
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி - இரவு 7.20 மணி



Click it and Unblock the Notifications