For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அதிர்ஷ்டத்துக்காக புத்தாண்டு அன்று கடைபிடிக்கப்படும் மூடநம்பிக்கைகள் என்னென்ன தெரியுமா?

புத்தாண்டு என்றவுடன் அனைவரின் மனதிலும் தோன்றுவது கொண்டாட்டமும், உற்சாகமும்தான். ஆனால் புத்தாண்டு பல மூடநம்பிக்கைகளுடன் தொடர்புடையது என்பது மறுக்க முடியாது.

|

உலகம் முழுவதும் மக்களை பாடாய்படுத்திய 2020 ஆம் ஆண்டு முடியப்போகிறது. வரப்போகிற புது ஆண்டு மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகவும் இருக்கிறது. புத்தாண்டு என்றவுடன் அனைவரின் மனதிலும் தோன்றுவது கொண்டாட்டமும், உற்சாகமும்தான். ஆனால் புத்தாண்டு பல மூடநம்பிக்கைகளுடன் தொடர்புடையது என்பது மறுக்க முடியாது.

Crazy New Year Superstitions In India

இது ஒப்புக்கொள்ள கடினமாக இருந்தாலும் இன்றும் புத்தாண்டு தொடர்பான மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக இந்தியாவில் புத்தாண்டு குறித்த மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் தொடர்ந்துதான் வருகிறது. இந்த பதிவில் புத்தாண்டு குறித்த பரவலான மூடநம்பிக்கைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டை சுத்தம் செய்யக்கூடாது

வீட்டை சுத்தம் செய்யக்கூடாது

புத்தாண்டு தினத்தன்று ஒருவர் வீட்டை எந்த சுத்தம் செய்யவோ அல்லது குப்பை போடவோ கூடாது என்று கூறப்படுகிறது. இது ஒரு அச்சுறுத்தும் செயல் என்றும், முழு குடும்பத்தினரின் நல்ல அதிர்ஷ்டத்தையும் துடைக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

புது ஆடைகள் அணிவது

புது ஆடைகள் அணிவது

புத்தாண்டு அன்று புதிய ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறப்படுவது மிகவும் பொதுவான மூடநம்பிக்கையாகும். ஏனெனில் இது அலமாரிகளை நிரப்ப ஆண்டு முழுவதும் புதிய ஆடைகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். இது நமக்கு உபயோகமான மூடநம்பிக்கையாகும்.

காலியான பாக்கெட்கள் கூடாது

காலியான பாக்கெட்கள் கூடாது

புத்தாண்டு தினத்தன்று காலி பாக்கெட்டுடன் ஆடை அணிவதைத் தவிர்க்க ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது வரவிருக்கும் ஆண்டில் மிகக் குறைந்த அல்லது வருமானமே இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்பது இன்றுவரை கடைபிடிக்கப்படும் மூடநம்பிக்கையாகும்.

MOST READ: இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் பிரச்சினை வைச்சுக்காதீங்க... பழிவாங்காம விடமாட்டாங்களாம்...!

அசைவ உணவு கூடாது

அசைவ உணவு கூடாது

மற்றொரு சுவாரஸ்யமான மற்றும் பிரபலமான மூடநம்பிக்கை என்னவெனில் புத்தாண்டு அன்று அசைவ உணவு சமைத்தால் அது ஆண்டு முழுவதும் வீட்டில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சலவை செய்யக்கூடாது

சலவை செய்யக்கூடாது

புத்தாண்டு அன்று சலவை செய்வது நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை விரட்டுவதாகவும் வரும் ஆண்டில் நீங்கள் கடுமையான உழைப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதைவிட அச்சுறுத்தும் விதத்தில் புத்தாண்டு அன்று துணி துவைப்பது குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

அதிர்ஷ்டத்திற்காக பச்சை நிற காய்கறி சாப்பிடுவது

அதிர்ஷ்டத்திற்காக பச்சை நிற காய்கறி சாப்பிடுவது

பச்சை, இலை காய்கறிகளான முட்டைக்கோஸ், காலார்ட் கீரைகள், புதினா, கடுகு கீரைகள், காலே, கீரை அல்லது கொத்தமல்லி இலைகளை சாப்பிடுவது ஆண்டு முழுவதும் செல்வத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது நம்புபடுகிறது. மேலும் சில பச்சை காய்கறிகள் உடனடி செல்வத்தை வழங்கும் என்று நம்பப்டுகிறது.

MOST READ: வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த திசையில் உங்கள் வீடு இருந்தால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம்...!

 பூனை அழுகை

பூனை அழுகை

ஒரு பூனை அழுவதைக் கேட்டால், நீங்கள் எதிர் திசையில் ஓட வேண்டும், ஏனெனில் அது மோசமான சகுனத்தைக் கொண்டுவருகிறது. இது உலகின் மோசமான அபசகுணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

அழக்கூடாது

அழக்கூடாது

இந்த நாளில் ஒருவர் பரிதாபமாக இருக்கக்கூடாது என்றும், யாரும் அழக்கூடாது என்றும் கூறுகிறார்கள், ஏனென்றால் அந்த மனச்சோர்வு வரும் ஆண்டில் உங்களைப் பின்தொடரும். இந்த நாளில் மகிழ்ச்சியாக இருப்பது ஆண்டு முழுவதுமான மகிழ்ச்சிக்கான தொடக்கமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இது இரண்டுமே சாத்தியமில்லை என்று நாம் நன்றாகவே அறிவோம்.

MOST READ: பெண்களை ஈர்க்க ஆண்கள் செய்யும் இந்த முட்டாள்த்தனமான செயல்கள் பெண்களுக்கு வெறுப்பைதான் உண்டாக்குமாம்...!

வீட்டில் நுழையும் முதல் நபர்

வீட்டில் நுழையும் முதல் நபர்

ஆண்டின் கடைசி நாளில் திருமண விளைவுகளை மக்கள் கணிக்கிறார்கள். ஜனவரி முதல் தேதி வீட்டிற்குள் நுழைந்த முதல் விருந்தின்ர் அடுத்த 365 நாட்களில் திருமண சமநிலையைக் குறிப்பார் என்று கூறப்படுகிறது. ஒரு ஆண் உங்கள் வீட்டுக்குள் நுழைந்தால், கணவருக்கு ஆண்டு முழுவதும் அதிக அதிகாரம் இருக்கும், ஒரு பெண் உள்ளே நுழைந்தால், மனைவிக்கு முழுமையான கட்டுப்பாடு இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Crazy New Year Superstitions In India

Check out the crazy new year superstitions in India.
Story first published: Tuesday, December 29, 2020, 11:18 [IST]
Desktop Bottom Promotion