Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்
உள்ளங்கை இந்த நிறத்துல இருக்கறவங்க வாழ்க்கையில் எப்பவும் வறுமை இருக்குமாம் தெரியுமா?
நமது கைகளில் இருக்கும் ரேகைகள் மட்டுமல்ல நமது கையின் நிறம் கூட நமது எதிர்காலம், ஆளுமை போன்றவற்றைப் பற்றிய ரகசியங்களைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
கைரேகைகளை வைத்து எதிர்காலத்தை கணிக்கும் வழிமுறை பல நூற்றாண்டுகளாக நமது சமூகத்தில் இருந்து வருகிறது. இதன் மீது நம்பிக்கை இருப்பவர்கள் இன்றும் இதனை பின்பற்றித்தான் வருகின்றனர். நமது கையில் இருக்கும் கோடுகள், சின்னங்கள், அடையாளங்கள் என ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளது.

நமது கைகளில் இருக்கும் ரேகைகள் மட்டுமல்ல நமது கையின் நிறம் கூட நமது எதிர்காலம், ஆளுமை போன்றவற்றைப் பற்றிய ரகசியங்களைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் உங்கள் உள்ளங்கையின் நிறம் உங்களின் எதிர்காலம் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உள்ளங்கையின் நிறம்
ஒருவரின் ஆளுமையைப் படித்துப் பார்ப்பது மற்றும் அவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்வது என்பது எளிதான விஷயம். சிலர் தங்கள் உள்ளங்கையின் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியான வண்ணத்தைக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலருக்கு முற்றிலும் மாறுபட்ட வண்ணங்கள் இருக்கலாம். உள்ளங்கையின் நிறம் பொதுவாக சிவப்பு, மஞ்சள் நிறம், இளஞ்சிவப்பு முதல் முற்றிலும் வெள்ளை போன்ற உள்ளங்கைகள் இருக்கும். உங்களைப் பற்றி உங்களின் உள்ளங்கையின் நிறம் என்ன சொல்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பிங்க் உள்ளங்கை
இது உள்ளங்கையின் மிகவும் சாதாரண நிறமாகும், இந்த வகையான உள்ளங்கை கொண்டவர்கள் தனிநபர் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார் என்பதையும், வாழ்க்கையில் எல்லாவற்றையும் சீரானதாக வைத்திருப்பதையும் இது குறிக்கிறது. உணவு, கல்வி, ஆன்மிகம் வரை என அனைத்திலும் இவர்கள் ஒழுக்கமாக இருக்க விரும்புவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமானவராக இருப்பார்கள், இளஞ்சிவப்பு முதல் ஆழமான இளஞ்சிவப்பு நிறம் கொண்டவர்கள் ஆழமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எதையும் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் நன்கு தயாராக இருக்க விரும்புகிறார்கள். இவர்கள் அனைத்தையும் கவனிப்பார்கள், இவர்களின் கண்களில் இருந்து எதுவும் தப்ப முடியாது.

சிவப்பு உள்ளங்கை
கண்களைக் கவரும் சிவப்பு உள்ளங்கை இருப்பது சாதாரணமானதல்ல. இந்த கையை கொண்டவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள், இவர்களுக்கு பெரிய நண்பர்கள் குழு இருக்கும். அவர்களின் கடின உழைப்பு நிறைய கைமுறை உழைப்பு வேலைகளை உள்ளடக்கியது, எடுத்துக்காட்டாக இவர்கள் தீவிர உடற்பயிற்சி செய்பவர்களாக இருப்பார்கள். சிவப்பு நிறம் அவர்களின் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பக்கத்திற்கு ஒரு கண்ணாடியாகும். அவர்கள் கைகளில் ஏராளமான ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் அவர்கள் எப்போதும் ஒரு தசைப் பணி தேவைப்படும் ஒரு வேலையை எடுத்துக்கொள்கிறார்கள்.

மஞ்சள் உள்ளங்கை
உங்கள் உள்ளங்கை தீவிரமான மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இது மஞ்சள் காமாலையாக இருக்க வாய்ப்புள்ளது. இங்கு நாம் பேசுவது இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உள்ளங்கைகளைப் பற்றி. . மஞ்சள் நிற உள்ளங்கைகள் உள்ளவர்கள் மன அழுத்தம், பதட்டம், கவலை மற்றும் அதிக சிந்தனைக்கு ஆளாகிறார்கள். இந்த நபர்கள் வேறு எவருக்கும் முன்பாக, பருவகால மாற்றங்களின் அறிகுறிகளை அனுபவிப்பதாக அறியப்படுகிறார்கள். சிலர் ஒரு பருவத்தின் ஒவ்வொரு தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட நோயை அனுபவிக்கக்கூடும். விஷயங்கள் அவர்களுக்கு எதிர்மறையாக மாறத் தொடங்கும் போது, அவர்கள் பெரும்பாலும் கோபப்படுவார்கள். பெரும்பாலும் இவர்கள் அவநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நினைக்கும்படி விஷயங்கள் நடக்காதபோது இவர்கள் மனசோர்வடைந்து வெளிஉலகத்தில் இருந்து தங்களை பிரித்து வைத்துக்கொள்வார்கள்.

வெள்ளை உள்ளங்கைகள்
உள்ளகிங்கை வெள்ளையாக இருப்பவர்கள் பெரும்பாலும் அமைதியானவர்களாக இருப்பார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரிடமும் மென்மையாக பேசி, நன்றாக நடந்து, அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் இவர்கள். வாழ்க்கை மீதான இவர்களின் பார்வை எப்பொழுதும் அழகானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும், இயற்கையின் மீது பேரன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் இருந்து இவர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள், அதனாலேயே இவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

சேற்றுநிற உள்ளங்கை
இந்த நிற உள்ளங்கை இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் இருப்பார்கள். பணப் பற்றாக்குறை இவர்களை எப்போதும் மனசோர்வில் வைத்திருக்கும். கடின உழைப்பு இருந்தாலும் இவர்களின் தேவைகள் பூர்த்தி செய்வது இவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்திலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்காது, அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்.

உள்ளங்கையில் புள்ளிகள்
உள்ளங்கையில் புள்ளிகள் உள்ளவர்கள் மதுவுக்கு அடிமையாகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் அடிப்படை மகிழ்ச்சியில் பற்றாக்குறை இருக்கலாம். இவர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதற்கு காரணம் இவர்களின் முயற்சியின்மையே, எந்தவொரு செயலிலும் இவர்கள் முழுமனதுடன் இறங்கமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications