Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி மனைவி கணவரிடம் எதிர்பார்ப்பது இந்த விஷயங்களை மட்டும்தானாம்... உங்ககிட்ட இருக்கா?
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த தத்துவஞானி, வழிகாட்டி மற்றும் குரு ஆவார். அவரது சாணக்ய நீதி சாஸ்திரத்தில் 17 அத்தியாயங்கள் உள்ளன.
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த தத்துவஞானி, வழிகாட்டி மற்றும் குரு ஆவார். அவரது சாணக்ய நீதி சாஸ்திரத்தில் 17 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் வாழ்க்கை, நட்பு, கடமை, இயல்பு, மனைவி, குழந்தைகள், பணம், வியாபாரம் போன்ற மனித வாழ்வின் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுகிறது. சாணக்கிய நீதி எல்லோருக்கும் உரியது. சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். குடும்பத்தின் மகிழ்ச்சியும், அமைதியும் கணவன்-மனைவி இடையேயான இனிமையான உறவில் தங்கியுள்ளது. கணவன்-மனைவி இடையே ஒற்றுமை இல்லாத வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார் என்பது ஐதீகம்.

வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்பதே அனைவரின் கனவாகும். அனைவரும் தனது திருமண வாழ்க்கையிலும், காதல் வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க விரும்புகிறார்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற மக்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், சாணக்கியரின் சில வார்தைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் இதுபோன்ற பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இது உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற உதவும். உங்கள் மனைவி மகிழ்ச்சியாக இருக்கவும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சாணக்கியர் கூறும் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

மரியாதை கொடுங்கள்
எப்போதும் தங்கள் மனைவி அல்லது காதலியை மரியாதையுடன் நடத்துபவர்களின் உறவு மிகவும் வலுவாக இருக்கும் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அத்தகைய நபருக்கு பதில் மரியாதை கிடைக்கும். அவர்களின் காதல் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நேர்மையாக இருங்கள்
சாணக்கிய நீதியின் படி, உறவில் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியம். தங்கள் துணையுடன் நேர்மையாக இருக்கும் நபர்களின் உறவு ஒருபோதும் முறியாது. அத்தகைய நபர்களின் கூட்டாளர்கள் எப்போதும் அவர்களை நம்புகிறார்கள். உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உங்கள் உறவில் நேர்மையாக இருங்கள்.

உடல்ரீதியான மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் படி, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உடல் மற்றும் உணர்ச்சிரீதியான மகிழ்ச்சி மிகவும் முக்கியமானது. இதனுடன் உடல் திருப்தியும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ரகசியமாக உள்ளது. எனவே உங்கள் துணையின் உடல் மற்றும் உணர்ச்சிரீதியான மகிழ்ச்சியிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்
ஒருவர் தனது மனைவி அல்லது காதலியை பாதுகாப்பாக வைத்திருந்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சாணக்யா கூறுகிறார். ஏனென்றால் மனைவி எப்போதும் தன் கணவரிடம் தந்தையின் உருவத்தைப் பார்க்கிறார்கள்ள். அது தன்னைப் பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஒருவருக்கொருவர் தேவையை புரிந்து கொள்ள வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி கணவனும் மனைவியும் துணையாக மட்டும் வாழாமல் நண்பர்களாகவும் வாழ வேண்டும். நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்பவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொள்வது கணவன்-மனைவி இடையே உள்ள உறவை நிச்சயம் வலுப்படுத்தும்.

போட்டி போடக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும், போட்டியாளர்களாக இருக்காதீர்கள். கணவனும் மனைவியும் ஒரு வண்டியின் இரு சக்கரங்களாகக் கருதப்படுகிறார்கள். எந்த ஒரு பணியையும் முடிக்க கணவனும் மனைவியும் போட்டியாளர்களாக அல்லாமல் குழுவாகச் செயல்பட வேண்டும்.

தனியுரிமை
கணவன் மனைவிக்கு இடையே சில ரகசியங்கள் இருக்கலாம் என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கூறுகிறார். இருவரும் தங்களின் ரகசியம் மூன்றாவது நபரிடம் சென்று விடாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி இடையே உள்ள விஷயங்களை எப்போதும் தங்களுக்குள் வைத்திருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications