Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவி செய்யும் இந்த விஷயங்கள் அவங்க உறவை நிரந்தரமாக அழித்துவிடுமாம்...!
சாணக்கியர் மிகவும் புத்திசாலி மற்றும் திறமையான அரசியல்வாதி என்பதில் துளியும் சந்தேகமில்லை. தன் கொள்கைகள் மூலம் ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் அவர் காட்டியுள்ளார்.
சாணக்கியர் மிகவும் புத்திசாலி மற்றும் திறமையான அரசியல்வாதி என்பதில் துளியும் சந்தேகமில்லை. தன் கொள்கைகள் மூலம் ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் அவர் காட்டியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, வணிகம், உறவுகள், நட்பு, எதிரி மற்றும் நிதி போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அவர் தனது சாணக்கிய நீதியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் சொன்ன பல விஷயங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் உண்மை என்று நிரூபணமாகிறது. கணவன் மனைவி உறவைப் பற்றி சில விஷயங்களை சாணக்கியர் கூறியுள்ளார்.

நல்லொழுக்கமுள்ள பெண்ணும் ஞானமுள்ள கணவனும் வாழ்க்கையின் இரு சக்கரங்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இவை இரண்டும் சேர்ந்தால் வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சியாக கடந்து செல்கிறது, வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது. சாணக்கியரின் கூற்றுப்படி, நல்ல குணங்கள் மற்றும் தூய எண்ணங்கள் கொண்ட கணவன்-மனைவி மட்டுமே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிக்க முடியும். சில தவறுகளால் கணவனும் மனைவியும் தங்கள் சொந்த திருமண வாழ்க்கையையும் குடும்பத்தையும் அழித்து விடுகிறார்கள். தாம்பத்திய உறவை அழிக்கும் அப்படிப்பட்ட சில தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பொய் சொல்வது
மனைவியாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, பொய் சொல்லாதீர்கள். இது எல்லோரையும் காயப்படுத்தும் ஒரு கெட்ட பழக்கம், பொய் எந்த உறவையும் அழித்துவிடும். கணவன் மனைவி உறவு மிகவும் புனிதமானது. உங்கள் உறவில் பொய்யை அனுமதிக்காதீர்கள். கணவன்-மனைவி உறவில் பொய்கள் நுழையும்போது, அங்கிருந்து பிரச்சினைகள் தொடங்குகின்றன.

அதிக பணம் செலவழிப்பது
வாழ்க்கையில் வெற்றி பெற வருமானத்திற்கும் செலவிற்கும் உள்ள சமநிலையை அறிந்து கொள்ள வேண்டும். கணவன்-மனைவி வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை சமநிலைப்படுத்த வேண்டும். செலவுக்கு கணக்கு காட்டாவிட்டால் கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்படும் சூழல் நிச்சயம்.

கோபம்
கோபம் என்பது ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் ஒன்று. அனைத்திற்க்கும் கோபப்படும் கணவனும் மனைவியும் ஒருபோதும் உணர்ச்சிரீதியாக நெருக்கமாக இருக்க மாட்டார்கள். திருமண வாழ்க்கையில் கோபம், கருத்து வேறுபாடுகள் திடீரென அதிகரிக்கும், இது குடும்ப அமைதியையும் கெடுக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து, பொறுமையுடன் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும்.

கண்ணியம் இல்லாமல் இருப்பது
எந்த சூழ்நிலையிலும் கணவனும் மனைவியும் தங்கள் கண்ணியத்தை கைவிடக்கூடாது. திருமணத்தை பராமரிக்க இருவரும் சமமான பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் கண்ணியம் மறையத் தொடங்கும் போது, உங்கள் வீட்டில் அமைதியின்மையும், பதற்றமும் நிறைந்திருக்கும். கண்ணியம் மதிக்கப்படும் போது தான் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.

நம்பிக்கை துரோகம்
கணவனும் மனைவியும் பரஸ்பர நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும் நம்பிக்கையான உறவு நிச்சயம் வெற்றி பெறும். உங்கள் உறவில் ஒருபோதும் ஒருவருக்கொருவர் துரோகம் செய்யாதீர்கள்.

அவமரியாதை
எந்தவொரு உறவின் வெற்றிக்கும் மரியாதை மிகவும் முக்கியமானது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, கணவன்-மனைவி இடையேயான உறவின் அடிப்படை பரஸ்பர மரியாதை. பரஸ்பர மரியாதை இல்லாவிட்டால் உங்கள் திருமணம் பாழாகிவிடும். கணவன் மனைவி உறவில் மரியாதையும் கண்ணியமும் இருக்க வேண்டும் என்பது சாணக்கிய நீதி. இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால், கணவன்-மனைவி இடையே உறவு வலுவடையும்.

ஈகோ
சாணக்கியரின் கூற்றுப்படி, கணவன்-மனைவி இடையே உறவு பலவீனமடைவதற்கு அகங்காரமே மிகப்பெரிய காரணம். சாணக்கியரின் கொள்கையின்படி, கணவன் மனைவி உறவில் இருவருக்கும் சம உரிமை உண்டு. கணவன்-மனைவி உறவில் ஈகோ நுழைந்தால், அது உறவை முறிப்பது உறுதி.

சந்தேகம்
கணவன் மனைவி உறவில் சந்தேகத்தை நுழைய அனுமதிக்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் சந்தேகம் பெரும்பாலும் திருமண உறவை அழிக்கிறது. கணவன்-மனைவி உறவில் சந்தேகம் மற்றும் தவறான புரிதல் இருந்தால், அந்த உறவு முற்றிலும் முறிந்துவிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications